லேவியராகமம்: 23:15-21
ஏழு வாரங்களின் பண்டிகை:
யாத்திராகமம்: 34:22; உபாகமம்: 16:10-16; 2நாளாகமம்: 8:13.
முதற்பலன் அசைவாட்டும் பண்டிகை நடந்த ஏழு வாரங்களுக்கு அடுத்து ஏழாவது ஓய்வு நாளுக்கு மறுநாள் வருவதால் இந்தப் பெயர் பெற்றது.
7 x 7 = 49; 49 + 1 = 50 - வாசியுங்கள்: லேவியராகமம்: 23:15,16.
"நீங்கள் அசைவாட்டும் கதிர்கட்டைக் கொண்டு வரும் ஓய்வு நாளுக்கு மறுநாள் முதற் கொண்டு எண்ணத் துவக்கி, ஏழு வாரங்கள் நிறைவேறின பின்பு, ஏழாம் ஓய்வு நாளுக்கு மறு நாளாகிய ஐம்பதாம் நாள் மட்டும் எண்ணி, கர்த்தருக்குப் புதிய போஜன பலியைச் செலுத்தக்கடவீர்கள்."
பெந்தெகோஸ்தே பண்டிகை:(அப்போஸ்தலர்: 2:1; 20:16;
1கொரிந்தியர்: 16:8)
'ஐம்பது'என்ற எண்ணுக்கு கிரேக்க மொழியில்
"பெந்தெகோஸ்தே "என்று பெயர். எழுத்தின்படியாக இந்த பண்டிகையை யூதர்கள் கொண்டாடிக்
கொண்டிருக்கும்போது தான், தேவன் அதன் உள்ளான அர்த்தத்தை நிறைவேற்றினார். (அப்போஸ்தலர்: 2:1-4).
சேர்ப்புக் கால பண்டிகை:
யாத்திராகமம்: 23:16.
வாற்க்கோதுமை அறுவடையின் முடிவில், கோதுமை அறுவடையின் துவக்கத்தில் இந்தப் பண்டிகை நடைபெறும் என்ற போதிலும், முக்கியமான அறுவடை - கூடாரப் பண்டிகை முடிந்து, திராட்சை, ஒலிவ அறுவடைக்குப் பின் நான்கு மாத இறுதியிலே நடைபெறும்.
ஆதித் திருச்சபையில் அந்த நாட்களில் மாபெரும் ஆத்தும அறுவடை நடைபெற்றது. யூதரானவர்கள் அறுவடை (வாற் கோதுமை) (அப்போஸ்தலர்: 2:41; 4:4).
புறஜாதி அறுவடையும் கூட, (கோதுமை அறுவடை) (அப்போஸ்தலர்: 15:14). என்றாலும் கூட, மாபெரும் அறுவடை - கிறிஸ்துபூமிக்கு திரும்புமுன் ஏற்படும் பெரிய எழுப்புதலில் நடக்கும்.
எண் 50 - ன் முக்கியத்துவம்:
ஏழு ஓய்வு நாட்களுக்கு அடுத்த நாள் 50 வது நாள். (லேவியராகமம்: 23:15,16).
'50'என்பது' யூபிலி'எனப்படும். அது,'விடுதலை' 'நிலை நிறுத்துதல்' 'சுதந்தரம்'
என்பதை சொல்லுகிறது.
50 வது வருடம் 'யூபிலி வருடம்'என்று சொல்லப்படும். இந்த யூபிலி ஆண்டு இளைப்பாறுதலும் மிகவும் கொண்டாட்டமுமான வருடமாகும்.
புதிய போஜன பலி:
கர்த்தருக்கு முன்பாக காணிக்கையாக புதிய மாம்சமோ அல்லது புதிய காரியமோ ஏறெடுக்கப்படும். பெந்தெகோஸ்தே பண்டிகை வரும்போது, நம்மைத் தாமே புதிய தானியமாக அர்ப்பணிக்கின்றோம். நமது ஜீவனை சமர்ப்பிக்கின்றோம். (யோவான்: 12:24). "கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும்; செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடுக்கும்".
அடுத்த வசனம் நாம் கிறிஸ்துவுக்காக எவ்விதம் நமது ஜீவனையும் அர்ப்பணிக்க ஆயத்தமாக இருக்க வேண்டும் என்பதையும் காண்பிக்கிறது. புதிய மரித்தல் இருக்க வேண்டும். நீ அந்நிய பாஷையிலே பேசும்போது என்பது அநேகருக்கு கஷ்டமான காரியம். ஆதிதிருச்சபை மக்களுக்கு சிலுவை என்றால் ஒரு பயங்கரமான சின்னமாக இருந்தது. என்னவென்றால், இது ஒரு குற்றவாளி மரிப்பதையே காட்டுகிறது. (எபிரேயர்: 13:13;
ரோமர்: 9:33).
இரண்டு அசைவாட்டும் அப்பங்கள்:(
லேவியராகமம்: 23:17)
அசைவாட்டும் இந்த இரண்டு அப்பங்கள் யூதர்களையும் புறஜாதிகளையும் குறிக்கிறது. கிறிஸ்து சிலுவையிலே யூதரையும் புறஜாதியரையும் ஒரே மனுஷனாக இணைத்து சமாதானம் உண்டாக்கினார். (எபேசியர்: 2:14,15).
பத்தில் இரண்டு பாகங்கள்
(2/10) இது முதற்பலனைக் குறிக்கிறது.இஸ்ரவேல் முதற்பலன்என்று அழைக்கப்பட்டது. அப்படியேசபையும்முதற்பலன்என்று குறிக்கப்படுகிறது. (எரேமியா: 31:9;
எபிரேயர்: 12:23).
http://i.imgur.com/EQ0U0Ic.jpg
