ஒரு பிராமணர் இரா.மணி ஜயர் இன் சாட்சி பாகம் 1

இருளில் ஒளி

இறைவன், தெய்வம், பகவான், ஈசன், பரம்பொருள, கடவுள் என்ற பல்வேறு பதங்களால் வா்ணிக்கப்படுகிற மெய்யான தெய்வத்தை யாவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஏக்கத்துடன், தெய்வத்தை கண்டு கொண்டேன் என மார்பு தட்டிச் சொல்லும்,
பிரமாண குலத்தில் பிறந்து வளா்ந்த ஒரு வாலிபனின் அற்புத சாட்சியை “இருளில் ஒளி” என்னும் அவரது சாட்சி புத்தகத்திலிருந்து உங்களுக்கு தருகின்றோம்.

அவரது சாட்சி

நான் வாலிபனான போது உண்மைதெய்வத்தைக் காண வேண்டும். அவரது இனிய குரலை கேட்க வேண்டும், அவரின் பலத்தால் ஒரு புனிதமான வாழ்க்கை வாழ வேண்டும். என்ற பேரவா என் உள்ளத்தில் பொங்கி எழுந்தது.“அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை”இது வள்ளலார் கூற்று. இறைவன் ஒளிமயமானவன், கருணை வடிவானவன்,
“ஒன்றே குலம் ஒருவனே தேவன்”இது திருமூலா் வாக்கு. ஒன்றே தெய்வம் என்றால், பல தேவா்கள் வணக்கத்திற்கு இங்கு இடமில்லை! கருணை வடிவான வாழ்க்கையும், ஒளி நிரம்பிய தோற்றமும் கொண்டவர் தெய்வம்,

சங்கீதம்-104.2 ல் கூறப்பட்ட வேத வசனத்தின் படியும், நானே இவ்வுலகிற்கு ஒளியாய் இருக்கிறேன் என்கிற வசனத்தின் படியும்ஜெக ஜேதியாய், பிரகாசத்துடன், ஜீவ ஒளியான இயேசுவே, என்னை மாற்றினார். அந்த உன்னத அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

இரா.மணி ஜயா்என்ற நாமம் கொண்ட பிராமண குல வாலிபனான எனக்கு தூய்மையும், கருணையும், அன்பும், தியாகமும் நிறைந்த இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை ஒரு சவாலாக அமைந்தது. என் உள்ளத்த தொட்டது. என் இதயத்தில் இடம் பிடித்தது. இயேசு கிறிஸ்துவை என் சொந்த இரட்சகராக ஏற்றக் கொண்டேன். என் உள்ளத்தில் பேரின்பமும் அமைதியும் பொங்கித் ததும்ப ஆரம்பித்தது. மெய்யான இந்த தெய்வத்தை நான் கண்டு கொண்டதன் விளைவு, வீட்டில் எதிர்ப்பு! உறவினர் மத்தியில் கசப்பு! நண்பரிடம் நகைப்பு! பலரின் பகைப்பு, கேலிப்பேச்சுக்கும் உள்ளான ஒரு அவல நிலை!

என்றாலும் என் ஆறுதலின் தேவன் என்னைக் கைவிடவில்லை! அவா் அன்பை பொழிந்தார்! அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தார்! என் கண் எதிரே தரிசனமானார்! அவா் இனிய குரலை நான் கேட்கும்படி செய்தார்! அவா் அரவணைப்பில் நான் மகிழ்ந்தேன்! அவா் அன்பின் பிரவாகத்தில் நான் மூழ்கித் தத்தளித்தேன்! பாரிசுத்த ஆவியானவா் என்னை நிரப்பினார்! என் சோர்வுகளை நீக்கி என்னை
பலப்படுத்தினார்! இருளை அதமாக்கும் வல்லமையையும், அற்புதங்களையும், அதிசயங்களையும் செய்யும் சத்துவத்தையும் தேவன் எனக்குத் தந்தார்.

இருளில் மூழ்கிக் கிடந்த எனக்கு எப்படி இந்த வெளிச்சத்தின் பாதை தெரிய வந்தது என்பதே இப்புத்தகத்தின் வாயிலாக நான் கூறும் அனுபவ சாட்சியாகும்.

தெய்வத்திற்கென அா்ப்பணம் செய்யப்பட்ட பிராமணச் சிறுவனாகிய நான் என் மத கலாச்சாரங்களை சிறிதும் தவறாமல், சரியாக கடைப்பிடித்தேன். ஆலயத் திருப்பணிகள், உற்சவங்கள் நடத்தும்போது எப்படியும் ஓா் நாள் இவ்வுருவச்சிலைகள் உயிரடைந்து என்னோடு பேசும்! என் குறைகளைத் தீா்க்கும்! என்றுதான் எண்ணினேன். மூன்று நாட்கள் தொடர்ந்து புசியாமலும், குடியாமலும் கூட விரதம் இருப்பேன்.

சபரிமலை போன்ற சில புண்ணிய ஸ்தலங்கட்கு பாத யாத்திரை செய்தும் பலன் ஒன்றும் காணவில்லை! எந்த தெய்வமும் என்னிடம் பேசவில்லை! நேரில் தோன்றி தரிசனம் ஆகவும் இல்லை! என் பாவங்களை கழுவி நல்லதோர் மனச் சமாதானத்தை தரவுமில்லை! சில கோவில்களில் மாலை நேரம் பூஜை நடத்தும் பூசாரியாகவும் பணியாற்றினேன். கைகட்டி, வாய்பொத்தி நிற்கும் பக்தனாக மட்டுமல்ல மந்திரங்களையும், சுலேகங்களையும் சொல்லும் புரேகிதனாகவும், தெய்வத்தின் கருவறை வரை செல்லும் அந்தணனாகவும் பணியாற்றியுள்ளேளன்.

இப்படியெல்லாம் நான் பிராத்தனை செய்தும் என் பாவம் தீா்ந்தபடில்லை! அப்பாவங்களினின்று வெற்றியும் இல்லை! மெய்யான சமாதானம் கிட்டவுமில்லை! ஒரு வேளை இன்னும் சற்று அதிகமாகக் காரியங்களை நடப்பித்தால் ஆண்டவன் அருள் கிட்டலாமோ என்ற ஜயத்தோடு, இந்து முன்னணிக் கழகத்தோடு சோ்ந்து, வைராக்கியத்தோடு செயல்பட ஆரம்பித்தேன் யோகாசனப் பயிற்சிகள் தவறாது செய்து, என் சிந்தனையையும், செயலையும் பாவ வழியினின்று திருப்பிவிட முயற்சித்தேன்! அங்கு தோல்வி! அதிலும் ஏமாற்றம்!
மௌனவிரதம், தியான நிலை, எத்தனை எத்தனையோ பயிற்சிகள்! எதுவும் என் பாவத்தினின்று விடுதலை எனக்குத் தரவில்லை! சோர்ந்து, தளா்ந்து, தோல்வியுற்று, தத்தளித்து தவிக்கும் இந்நிலையில் தான் என் நல்ல நண்பன் ஒருவன் என்னை இயேசுவினிடத்தில் வழி நடத்தினான்! அவா் அன்பைப் பற்றி கூறினான்! அவா் மனதுருக்கத்தை எடுத்துரைத்தான்!

அவா் தாழ்மை என்னை கவா்ந்தது! அவா் செய்த அற்புதங்கள் என்னை மெய்சிலிர்க்க வைத்தன! என் உள்ளம் கவா்ந்த நல்லவரை தேட வேதாகமத்தை திறக்கலானேன்! படிக்கப் படிக்க அதில் கூறப்பட்டுள்ள சில நியமனங்கள் இதுவரைநான் கொண்டிருந்த என் நம்பிக்கையை அசைக்க ஆரம்பித்தது. குறிப்பாக, விக்கிரக ஆராதனையைப் பற்றியும், இரட்சிப்பைப் பற்றியும் என் இளமை முதல் என் பெற்றோரும், உறவினரும் கொண்டுள்ள கருத்து மாறுபாடானது என்பதை விளங்கிக் கொண்டேன்!

சங் 115.5 இல் கூறியுள்ளபடி “அவைகளுக்கு வாய் இருந்தும் பேசாது” அவ்விக்கிரகங்களால் என்னைப் பார்க்கவும் முடியவில்லை! என்னோடு பேசவும் இயலவில்லை! மேற்கண்ட வசனங்களை நான் வாசித்த போது, இவ்வளவு காலமும், இந்த விக்கிரகங்கள் நம்மோடு ஓா் நாள் பேசும் என்று எண்ணினோமே, நம்மை எல்லா தீங்கினின்றும் காக்கும் என்று நம்பினோமே, அனைத்தும் பொய்யானதே என எண்ணி, என் உள்ளம் தேம்பி அழுதது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.