தலைப்பு:-
“கக்த்ரை நம்புகிறவர்களும்
அக்கிரமகாரரும்”.
உட்பிரிவு:-
வச.1-3 காலை தியானமும், ஜெபமும்.
வச.4-6 அக்கிரமகாரரின்
நிலை.
வச.7 நான் எப்படி
இருப்பேன்.
வச.8 வழி நடத்துதலுக்காக
விண்ணப்பம்.
வச.9-10 துன்மார்கருக்கு எதிரான ஜெபம்.
வச.11-12 கர்த்தரை நம்புகிறவர்களின் ஆசீர்வாதங்கள்.
குறிப்பு:-
இந்த சங்கீதத்தை காலை நேர சங்கீதம் எனலாம்.
வசனங்களுக்கான
விளக்கங்கள்:-
வச.1-3:- தாவீது விண்ணப்பம் செய்கிறவராகவும், தியானிக்கிறவராகவும் இருந்தார். காலைதோறும் கர்த்தரின் பாதத்தில் காத்திருந்தார். நாமும் அப்படியே செய்வோமாக.
வச.4-6:- தேவன் வெறுக்கும் ஏழு காரியங்கள் இந்த பகுதியில் உள்ளது.
வச.7-12:- தனக்காவும் (வச.7-8) தனது எதிரிகளுக்காகவும் (வச.9-10) விண்ணப்பித்த தாவீது இறுதியில் தேவனை நம்புகிறவர்களுக்காகவும் விண்ணப்பித்தார்(வச.11-12). தேவனுடைய பிள்ளைகளுக்காகவும் வேண்டுதல் செய்வது நமது கடமை ஆகும்.
வச.7:- அ). தாவீதின் காலத்தில் உடன்படிக்கை பெட்டி இருந்த கூடாரத்தை ஆலயம் என குறிப்பிட்டனர். அதற்க்கு முந்தைய காலத்தில் சீலோவில் இருந்த ஆசரிப்பு கூடாரத்தை ஆலயம் என அழைத்தனர். (சங் 27:4; 1சாமு1:9)
ஆ). நானோ: வச.4-5ல் கர்த்தர் எவ்வாறு தீமையை வெறுக்கிறார் என கூறிய தாவீது “நானோ” இப்படி இருக்கிறேன் என கூறியுள்ளார். “மற்றவர் அனைவரும் பொய்யராய் இருக்கலாம், நனோ உண்மையாய் இருப்பேன். மற்றவர்கள் ஏமாறறலாம், கெட்ட வாழ்க்கை வாழலாம், அசுத்தமான நூல்களையும், காட்சிகளையும் நிகழ்ச்சிகளையும் விரும்பலாம், நானோ அப்படி இராமல் வேதத்தை மட்டும் விரும்புவேன். மற்றவர்கள் கெட்ட வார்த்தை பேசலாம், கெட்ட சிந்தையோடு இருக்கலாம் நானோ அப்படி இருக்கமாட்டேன்” என்பவை போன்று “நானோ” கர்த்தருக்கு உகந்தவனாக நடப்பேன் என்று தீர்மானியுங்கள்.
இ). உமது மிகுந்த கிருபையினாலே: என்னுடைய நற்செயல்களால் அல்ல, நற்பண்புகளால் அல்ல, உமது மிகுந்த கிருபையினாலே உமது ஆலயத்திற்க்குள் பிரவேசிப்பேன் என்பதை தியானியுங்கள்.
வச.8:- என்னுடைய நீதியும், வழியும் சிறந்ததல்ல. எனவே உம்முடைய நீதி, உம்முடைய வழி என்கிறார் தாவீது.
வச.9-12:- வச.9-10 ஐயும் வச.11-12 ஐயும் ஒப்பிட்டு தியானியுங்கள். தேவனை நம்புகிறவர்களின் ஆசீர்வாதங்களை ஒவ்வொன்றாக எழுதுங்கள். அவற்றிற்ககாக தேவனை துதியுங்கள்.
வாழ்த்துக்கள் சகோதரரே.
ReplyDelete