வசனம் 2:11-12



வசனம் 2:11-12

நான் எருசலேமுக்கு வந்து, அங்கே மூன்றுநாள் இருந்தபின்பு, நான் சில மனுஷரைக் கூட்டிக்கொண்டு, ராத்திரியில் எழுந்து நகரசோதனை செய்தேன். ஆனாலும் எருசலேமுக்காகச் செய்யும்படி என் தேவன் என் மனதிலே வைத்ததை நான் ஒருவருக்கும்
அறிவிக்கவில்லை. நான் ஏறிப்போன
மிருகமேயல்லாமல் வேறொரு மிருகமும் என்னோடிருந்ததில்லை.

நெகேமியா அமைதலுடன் தங்கியிருந்தான். அவர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர் என்ற செய்தி அவனைச் சிறிதும் கலங்கடிக்கவில்லை. முதன் முதலில் அவன் மூன்று நாள் காத்திருந்தான். அவன் கர்த்தரிடத்தில் பெற்ற அழைப்பின் கட்டனையை யாரிடமும் கூறவில்லை. அவனே அதைச் செய்ய ஆரம்பிக்கவேண்டுமென்று முதலில் விரும்பினான். பெறப்படக்கூடிய அனைத்து உதவிகளையும், தெரிந்துகொள்ளவேண்டிய அனைத்து செய்திகளையும், தங்கு தடையின்றிப் பெறவேண்டும் என்பது அவனுக்கு நன்கு தெரியும். ஆகையால் ஒரு மிருகத்தின்மீது எறிக்கொண்டு சில மனுஷரைக் கூட்டிக்கொண்டு இராத்திரியில் எழுந்து நகர சோதனை செய்து எருசலேமின் வாசல்களையும் இடிந்துபோன அலங்கங்களையும் பார்வையிட்டுக் கவனித்தான்.

வசனம் 2:13-15

நான் அன்று ராத்திரி பள்ளத்தாக்கின் வாசல்வழியாய்ப் புறப்பட்டு, வலுசர்ப்பத் துரவைக் கடந்து, குப்பைமேட்டு வாசலுக்கு வந்து, எருசலேமில் இடிந்துபோன
அலங்கத்தையும், அக்கினியால்
சுட்டெரிக்கப்பட்ட அதின் வாசல்களையும் பார்வையிட்டேன். அவ்விடத்தை விட்டு ஊருணி வாசலண்டைக்கு, ராஜாவின் குளத்தண்டைக்கும் போனேன். நான் ஏறியிருந்த மிருகம் அங்கே நடந்துபோகிறதற்கு வழியில்லாதிருந்தது. அன்று ராத்திரியிலேயே நான் அற்றோரமாய்ப் போய், அலங்கத்தைப் பார்வையிட்டுத் திரும்பி, பள்ளத்தாக்கின் வாசல்வழியாய் வந்துவிட்டேன்.

நெகேமியாவும் அவனுடன் சில உதவியாளர்களான நண்பர்களும் தங்கள் வாகனங்களாகிய மிருகங்களின்மேல் ஏறிக்கொண்டு, குப்பை குவியல்கள் மீது மெல்ல கடந்து வாசல்களைத் தாண்டி நகரத்தைச் சுற்றி வந்தனர். ஓரிடத்தில் அவன் ஏறி வந்த மிருகம் கடந்து செல்லக்கூட வழியில்லாதிருந்தது. அங்கே நெகேமியா காலால் நடந்து அலங்கங்களைப் பார்வையிட்டான். சென்ற சில ஆண்டுகளிலே நடந்த போர்களின் விளைவாக அலங்கங்கள் இடிபட்டு போயிருந்த அவலநிலை நெகேமியாவின் மனதை மிகவும் உறுத்தியிருக்கக்கூடும். இடிந்துபோன
அலங்கங்களைப்பற்றியும் இதர பாழ்க்கடிப்புக்களைப் பற்றியும் யாதொரு முனனேற்ற முயற்சியும் செய்யப்படாமையால், அந்த நகரம் பாதுகாப்பற்ற நிலையில் இருந்தது. இத்தகைய சீர்கெட்ட அவல நிலைமையைப்பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கக் கூடும். ஆனால் நேரில் பார்ப்பது மிகவும் கடுமையான மனவெழுச்சியை உண்டாக்கவல்லது.

வசனம் 2:16-17

நான் போனதும், நான் செய்ததும் அதிகாரிகள் ஒருவருக்கும் தெரியாது. அதுவரையிலும் நான் யூதருக்காகிலும், ஆசாரியர்கள் பெரியவர்கள் அதிகாரிகளுக்காகிலும், வேலைசெய்கிற மற்றவர்களுக்காகிலும் ஒன்றும் அறிவிக்கவில்லை. பின்பு நான் அவர்களை நோக்கி: எருசலேம் பாழாயிருக்கிறதையும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டுக் கிடக்கிறதையும், நாம் இருக்கிற சிறுமையையும் பார்க்கிறீர்களே. நாம் இனி நிந்தைக்குள்ளாகாதபடிக்கு, எருசலேமின் அலங்கத்தைக் கட்டுவோம் வாருங்கள் என்று சொல்லி,

இதனையெல்லாம் பார்த்துப் பின்பு அவர்கள் செய்யவேண்டிய வேலை எவ்வளவு பெரியதென்பதை அவன் உணர்ந்தான். ஆனால் மனச்சோர்வினாலோ, முடியாமையினாலோ அவன் அந்த வேலையைத் தள்ளிப்போட
நினைக்கவில்லை.
ய+தர்களை ஒரு கூட்டமாகக்கூட்டித் தனது திட்டத்தைக் கூற முற்பட்டான். அவர்களோடு பேசும்போது நான் என்று ஆரம்பிக்கவோ, அல்லது அவர்களைக் கடிந்துகொள்ளவோ, அல்லது அவர்களை அந்த வேலையைச் செய்யுங்கள் என்று ஆலோசனை கூறவோ இல்லை. ஆனால் அன்று இருந்த எருசலேமின் நிலையைமட்டும் கூறி விளக்க ஆரம்பித்தான். எருசலேம் பாழாய்க் கிடக்கிறதைப் பார்க்கிறீர்களே என்று ஆரம்பித்தவன், மேலும் அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டுக் கிடக்கிறதையும் பாருங்கள் என்று கூறியபின், எருசலேமின் அலங்கத்தைக் கட்டுவோம், வாருங்கள் என்று தனது வழக்கமான பாணியிலேயே, அழைப்பு விடுவித்தான். தேவனாகிய கர்த்தரின் அனைத்துப் பணிகளிலேயும், உதவிடமுன் வருபவர்களின் வழக்கமான அறைகூவலே இது. கட்டுவோம் வாருங்கள் பெரிய இழப்புகள் நமக்குண்டு. பெரிய பின்னடைவுகள் நமக்குண்டு. துயரம் நம்மைச் சூழ்ந்திருக்கிறது. இருந்தபோதிலும் நாம், ஊக்கத்துடன் எழுந்திருந்து, வேலையில் அமர்ந்து கட்டக்கடவோம். சேர்ந்து கட்டக்கடவோம் என்றான் அவன். மேலும் அவன் ஒரு நல்ல காரணத்தைக் கூறுகிறான். நாம் இனி நிந்தைக்குள்ளாயிராதபடிக்கு..... என்று காரணம் காட்டும் நெகேமியா அவர்களை அழைக்கிறான். பல ஆண்டுகளாக அவர்களின் அவலநிலையைக் கண்டு இழிவாகவும், எரிச்சலாகவும், இதர நாட்டினர் ய+தர்களைப் புறக்கணித்து வந்தனர். இப்போது கட்டப்படவேண்டிய நேரம் நெருங்கி வந்ததை அவர்கள் நன்குணர்ந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.