கனி கொடுக்கும் காலம் இல்லாவிட்டாலும் பழம் இருக்குமா?


“அத்திப்பழம் காலமாயிராத
படியால் அவர் அவ்விடத்தில் வந்தபோது, அதில் இலைகளையல்லாமல் வேறொன்றையும் காணவில்லை” (மாற் 11:13).


“இனி ஒருக் காலும் உன்னிடத்தில் கனி
உண்டாகா திருக்கக்கடவது என்றார்” (மத் 21:19).

இந்த வசனங்களைப் பார்க்கும் போது அத்திப்பழம் பழுக்கும் காலம் இல்லாத போது அத்திமரத்தில் தேவன் எப்படி பழத்தை எதிர்பார்க்கலாம்; எப்படி சபிக்கலாம் என்ற கேள்விகள் எழுகின் றன.


இயேசுகிறிஸ்து சீஷர்களோடு பெத்தானியாவிலிருந்து புறப்பட்டு வருகின்றார். ஆனாலும் சீடர்களுக்கு, சபித்தப்போது புரியவில்லை. மறுநாள் காலையிலே அந்தவழியாய் வரும் போது தான் பட்டுப்போனதைக் கண்டார்கள் (மாற்11:20). இது சம்பந்தமாய் இயேசு சொன்னதைப் பாருங்கள். (மாற்11:22) ‘பெத்தானியா’ என்றால் ‘அத்திப்பழவீடு’ என்று அர்த்தமாகும். பெயருக்கு ஏற்ற படியே இந்த ஏரியாக்களில் அத்திப்பழம் கிடைக்குமாம். இயேசு வரும்போது பசி உண்டாகி, இலைகளுள்ள ஒரு அத்தி மரத்தை துôரத்திலே கண்டு, கனியைத் தேடி வந்தார். அத்திமரத்தில் இலைகள் துளிர்விட்டு பசுமையாக இருந்தாலே கனி இருக்கும் என்று அர்த்தம். இலைகள் இல்லாத போது கனி இருக்காது.

""இந்த அத்தி மரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள். அதிலே இளங் கிளை தோன்றி துளிர்விடும்போது வசந்தகாலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள்'' (மத் 24:34) என்று இயேசு இஸ்ரவேலரின் அரசியலமைப்பைப் பற்றிச் சொன்னதை நினைவு கூறுங்கள்.

>p>
வசந்தகாலத்தில்தான் அத்திமரம் பழம்கொடுக்கும். ஆனால் இங்கோ அத்திப்பழக் காலமில்லை என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது அந்தக் காலம் வசந்தகாலமில்லை என்று அறிகிறோம். அப்படியானால் அந்த மரத்தில் இலைகள் எப்படி இருக்கும்? இயேசு கனிகளை எப்படி எதிர்பார்த் திருப்பார்? இதற்கு பதில் கிடைக்குமுன் அத்திமரத்தைப் பற்றி அறிந்து கொள்வது நல்லது.

அத்திமரங்களிலே இரண்டு வகை உண்டு என வேதத்தின்மூலம் அறிகிறோம்.

ஒன்று பழக்காலத்துக்கு முன்பே கனி கொடுக்கும் மரம் (எரே 24:2 எசே 28:4)

மற்றது பின்னால் கனி கொடுக்கும் மரம்
(எரே 8:19; 28:17).

எந்தக்காலத்தில் கனி கொடுத்தாலும் இலைகள் நிறைந்து இருக்கும்போதே அது கனி கொடுக்கும். இங்குள்ள சம்பவத்தில், இது பழக்காலமல்ல என அறிகிறோம். பழக்காலமில்லாததற்கு முன்பே கனிதரும் மரமாய் இந்த மரம் இருந்திருக்க வேண்டும்.

(ஏனென்றால், இந்த ஊரின் பெயரே அத்திப்பழவீடு என்பதால் எப்போதுமே பலவகைப்பட்ட மரங்களில் பழங்கள் எப்போதுமே கிடைக்க வாய்ப்பு பெயருக்கேற்றபடி இருந்திருக்கலாம்).

அதனால்தான் இலைகள் வளர்ந்திருந்தன; இலைகள் இருந்தாலே கனிகள் வேண்டும்; காலம் பற்றி கவலையில்லை. ஏனென்றால் காலத் திற்கு முன்பே கனி தரும் மரவகைகளில் ஒன்றாய் இந்த மரம் இருக்கல்ôம்.

இது சம்பந்தமாய் தேவன் தரும் ஆவிக் குரிய கருத்து என்ன?

பழம் பழுக்கும் காலம் இல்லாத போது கனி கொடுக்கத் திராணியை தேவன் கொடுக்கிறார். இலைகள் துளிர் விடுகின்றன. அப்படியே நீயும் நானும் கடைசி காலத்தில் இருந்தாலும் சரி, இராக்காலத்தில் இருந்தாலும் சரி, உன்னையும் என்னையும் தேவன் ‘ஜீவன்’ தந்து துளிர்விட வைத்திருக்கிறார். பாவத்திற்கு மரித்து நீதிக்குப் பிழைக்கும் நீதிமானாய் ஆக்கியிருக்கிறார்; பரிசுத்த ஆவியினால் நிரப்பி இருக்கிறார். பல தரப்பட்ட வரங்களால்
நிறைத்திருக்கிறார். அப்படி அவர் செய்ததற்கு காரணம் என்ன? பசி தாகம் என்ன? அவருடைய பசி தாகத்திற்கு அவர் என்ன எதிர் பார்க்கிறார்? உன்னோடே போஜனம் பண்ண விரும்புகிறாரே அது என்ன போஜனம்? (வெளி 3:20).

அதுதான் அவர் விரும்புகிற உன் ஆவியின் கனி; நீதியின் கனி. அந்தக் கனி உன்னில் இருக்க வேண்டும் என்றுதான் (கலா 5:22) இம்மட்டுமாய் உன்னைப் பராமரிக்கிறார். இந்தக் கனி இல்லா விட்டால் நமக்கு அக்கினியும் கந்தகமும் எரிகிற கடல்தான். லுôக் 13-ல் தேவன் சொன்ன உவமையைப் பாருங்கள். கனி கொடாத மரத்தை வெட்டிப்போடு என்கிறார் தோட்டக்காரர். ஆக, ஆவியின் கனி
இல்லாவிட்டால் உனக்கும் எனக்கும் தண்டனை தான்.

இயேசுவோடு வந்த சீடர்களுக்கு இந்த உண்மையை புரிய வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் தேவன் அந்த அத்தி மரத்தை சபித்தார். (See மத்3:10)
நமக்கு விசுவாசம் பெருகவே தேவன் இப்படியாய் சபித்திருக்கக்கூடும் என்று நிதானிக்கலாம். இந்தக் காலம் எப்படிப் பட்ட
காலமாயிருந்தலும் உன்னைத் துளிர்விட வைத்தாலே நீ கனி கொடுத்தே ஆகவேண்டும். கனிகொடாத மரம் சபிக்கப்படும் என்ற விசுவாசம் உனக்கு இப்போதே வரவேண்டும்.

அல்லேலுôயா!


நீ காலம் பற்றி
கவலையில்லாமல் எப்போதும் கனி கொடுக்கிறவனாக -
மரமாக வாழ்ந்து காட்டு.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.