‘தெய்வ பயம்’ நிறைந்த சீஷர்களின் ஐக்கியமே சபை! - சகரியா பூணன்

ஓர் சீஷன் ஒருபோதும் தனித்து நிற்பவனாய் இருக்க மாட்டான். ஒரு ஸ்தல சபையில் உள்ள மற்ற சீஷர்களுடன் கொண்ட ஐக்கியத்திலேதான் அவன் எப்போதும் வாழ்வான்!

தன் சீஷர்களின் பிரதான அடையாளத்தை “ஒருவரை ஒருவர் நேசிக்கும் அன்பு” என்றே இயேசு கூறினார் (யோவான் 13:35).இந்த பாக்கியமான நிலை, ஒரு சீஷன் மற்றொரு சீஷனோடு தொடர்பு உடையவனாய் இருந்தால் மாத்திரமே கிட்டும்! ஆகவே “ஓர் தனிமையான சீஷன்” எனக் கூறுவதற்கு புதிய ஏற்பாட்டில் இடமே இல்லை!

கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகவில்லையென்றால், தனித்தேதான் கைவிடப்படும் எனயோவான் 12:24-ல் இயேசு தெளிவுபடுத்தினார். ஆனால் மரிக்கும் விதையோ மிகுந்த பலனைக் கொடுக்கும்!

இவ்வித பலன் தரும் சீஷன், வேறு சீஷர்களைக் கண்டடைவான் அல்லது சீஷர்களை உருவாக்குவான். . . பின்பு, அவர்களோடு இணைத்துக் கட்டப்பட்டு கிறிஸ்துவின் சரீரத்தைப் பிரதிபலிக்கும் ஓர் ஸ்தல சபையை உருவாக்குவான்!

இதுபோன்ற ஓர் ஸ்தல சபையில்தான் ஒவ்வொரு சீஷனும் பங்கு பெற்றிருக்க வேண்டும்! இவ்வாறு இல்லாமல், நீங்கள் தனிமையில் இருந்தால் நீங்கள் நிலத்தில் விழுந்து உங்கள் சுயத்திற்கு மரிக்கவில்லை என்பதே நிரூபணமாகிறது!

கர்த்தருக்குப் பயப்படும் பயம் :

புதிய ஏற்பாட்டில் காணப்படும் சபை, தேவன் கட்டும்“ஓர் வீடாகவே” சித்தரிக்கப்பட்டுள்ளது. அந்த வீடானது ஞானத்தினால்தான் கட்டப்பட வேண்டும் என்று நீதிமொழிகள் 24:3 எடுத்துரைக்கிறது.

ஒரு சீஷன் வேதவாக்கியங்களை மாத்திரமே கற்றுக்கொண்டு ஞானமுள்ளவனாய் மாறமுடியாது. அது வெறும் அறிவைத்தான் பெருகச் செய்யும்! ஆம், கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்!!
(நீதிமொழிகள் 9:10). கர்த்தருக்குப் பயப்படுதலே கிறிஸ்தவ ஜீவியத்தின் ஆரம்ப ABC ஆகும். இவ்வாறு “பரத்திலிருந்து வருகிற ஞானமே முதலாவது சுத்தமுள்ளது!” என
யாக்கோபு 3:17கூறுகிறது. ஆகவே கிறிஸ்துவின் சரீரத்தை கட்ட விரும்பும் யாவரும் கர்த்தருக்குப் பயப்படுதலையே முதலாவதாக கற்றுக்கொள்ள வேண்டும்.

சங்கீதம் 34:11கூறுகிறபடி, “வாருங்கள், வந்து எனக்குச் செவிகொடுங்கள். கர்த்தருக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன்” என்றே நாம்
மற்றவர்களுக்கு கூற
திராணியுள்ளவர்களாயிருக்க வேண்டும்.

தூய்மையான உபதேசத்தைக் குறித்தும், எழுச்சியான அனுவங்களைக் குறித்தும், துதி ஆராதனையைக் குறித்தும், சுவிசேஷ ஊழியம் மற்றும் யாதொன்றைக் குறித்தும் நாம் முக்கியப்படுத்தி பேசிக்
கொண்டேயிருக்கலாம். ஆனால் இவை அனைத்திற்கும் பின்னால்கர்த்தருக்கு பயப்படுகிற
பயம்அஸ்திவாரமாய் இல்லையென்றால், நாம் என்னத்தைக் கட்டினாலும் அவை அனைத்தும் ஒருநாளில் விழுந்து அழிந்துவிடும்!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.