புளிப்பாக பாகம் பண்ணப்பட்டவை:(லேவியராகமம்: 23:17)
'புளிப்பு'என்பது பாவம், மாய்மாலம், துர் உபதேசம் ஊழலைக் குறிக்கிறது. ஒன்றை அறிந்து கொள்ளுங்கள். ஒருவன் பரிசுத்தாவியைப் பெற்றுவிட்டாலோ அல்லது அந்நிய பாஷையைப் பேசுவதாலோ அவன் சுத்திகரிக்கப்பட்டவனாக பரிசுத்தத்தில் நடக்கிறவனாக ஆகிவிடமாட்டான். ஒரு விசுவாசி இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்ட பின்பும் கூட அவனுக்குள் பாவ சுபாவம் காணப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக அதே ஆவிக்குரிய கூட்டத்தார்களும் பெந்தெகோஸ்தேகாரர்களும் எல்லாவிதமான பாவங்களினாலும் தவறான உபதேசங்களினாலும் பிரிவினையினாலும் மாம்சீகத்தினாலும் நிறைந்து காணப்படுகிறார்கள். கர்த்தரிலே தேறினவர்களாக விளங்குவதற்கு நமக்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகம் தேவை. ஆனால், அதே நேரத்தில் அதை பரிசுத்தத்தோடு நாம் ஒப்பிட்டுப் பேசக்கூடாது.
பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களிடத் -திலும் கலப்படங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
பெந்தெகோஸ்தே என்பது கர்த்தருக்கு முதற்பலனானது. (லேவியராகமம்: 23:17). இது கடைசி அறுவடை அல்ல.பெந்தெகோஸ்தே அனுபவம் என்பது அபிஷேகம் பெற்றவர்களின் முதற்பலனானவர்களின் ஆவியிலே வளரும் அனுபவம்.பெந்தெகோஸ்தே என்பது முடிவு அல்ல. அது ஆதி திருச்சபை இயக்கி வைத்த ராக்கெட் ஆகும். (அப்போஸ்தலர்: 2:1-4).
அசைவாட்டும் காணிக்கை:(லேவியராகமம்: 23:20)
பெந்தெகோஸ்தேயில் அடங்கியுள்ள ஆராதனையை இது குறிக்கும். இந்தப் பண்டிகையில் பிரவேசிக்கும் வரைக்கும் கர்த்தரை ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்க முடியாது. (யோவான்: 4:24).
இளைப்பாறுதலின் பண்டிகை:(
லேவியராகமம்: 23:21)
கர்த்தரில் நாம் இளைப்பாற வேண்டும். தேவனுடைய ஆவியானவர் நம்மில் இறங்கி கிரியை செய்ய விட்டுக் கொடுக்க வேண்டும். அநேக வேளைகளில் நாம் வேலை செய்து கொண்டிருக்கிறபடியால் கர்த்தருடைய கிரியையை தடை செய்து விடுகிறோம்.
பெந்தெகோஸ்தே பண்டிகையின் நிறைவேறுதல்:
நாம் பரிசுத்த ஆவியினாலே அபிஷேகிக்கப்பட்டு அந்நிய பாஷையிலே பேசும்போது நாம் தனிப்பட்ட வாழ்க்கையில் பெந்தெகோஸ்தே பண்டிகையைக் கொண்டாடுகிற
வர்களாகிறோம்.
பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக் குறித்த சில உண்மைகள்:
1. பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்பது இரட்சிப்பு அல்ல; அது திட்டமான இரண்டாவத அனுபவம். (அப்போஸ்தலர்:
8:14-16; 19:1-6)
2. பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்பது ஒவ்வொரு விசுவாசிக்கும் உரியது. (உபாகமம்: 16:11; அப்போஸ்தலர்: 2:39; யோவான்: 7:37).
3. பரிசுத்த ஆவி பெற்றுக் கொண்டதற்கு அடையாளம் - அந்நிய பாஷையில் பேசுவதாகும். (அப்போஸ்தலர்: 2:4; 10:46: 19:6)
பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொள்வது எப்படி?:
1. நீ மறுபடியும் பிறந்திருக்க வேண்டும். (யோவான்: 3:3)
2. இது ஒரு வரம். இதற்காக நீ அலறவோ, போராடவோ, கட்டுப்பாட்டை இழக்கவோ தேவையில்லை. அப்படியே விட்டுக் கொடு.
பெற்றுக் கொள். (லூக்கா: 11:9-10; அப்போஸ்தலர்: 2:38).
3. விசுவாசத்தினால் பெற்றுக் கொள். (கலாத்தியர்: 3:14).
4. பரிசுத்த ஆவியினால் அபிஷேகிக்கிற இயேசுவிடம் வா. (யோவான்: 7:37).
5. உனது நாவினாலும், குரலினாலும்,
உதடுகளினாலும் பேச ஆரம்பி. (அப்போஸ்தலர்: 2:4). ஆங்கிலத்திலோ, தமிழிலோ அல்ல. பரலோக புது மொழியில் பரிசுத்த ஆவியானவர் உனக்குத் தரும் பாஷையிலே பேசு.