சங்கீதம்92:12
நீதிமான்பனையைப் போல்செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்.
சங்கீதக்காரன் நீதிமானுக்கு வரும் ஆசீர்வாதம் எப்படியிருக்குமென சொல்லும்போது, பனையைப் போல செழித்து வளருவான் என்று கூறுகிறார். ஏன் அவர்பனையைப் ஒப்பிட்டு சொல்லியிருப்பார் என்றால் பனை மணற்ப்பாங்கான இடத்தில்வளரும். மட்டுமல்ல பனை மரத்திற்கு யாரும் தண்ணீர் ஊற்றியோ அல்லது உரமிட்டோவளர்ப்பதில்லை.
அது இயற்கையாகவே தேவன் வைத்துள்ள சூரிய
வெளிச்சத்தைக்கொண்டு அது தானாகவே செழித்து வளரும். அது மற்ற எந்தஒருவருடைய தயவையும் நாடி அல்லது கை ஏந்தியும் நிற்பதில்லை.
பிரியமானவர்களே நாமும் பரிசுத்தமாய் வாழ்ந்து, நீதிமான் என்ற
பாக்கியத்தைப்பெற்றால் நாமும் யாருடைய தயவையும் நாடவேண்டியதில்லை, யார் முன்பும் கைகட்டி நிற்க வேண்டியதுமில்லை. பரிசுத்த வேதம் கூறுகிறது,
ஏசாயா60:3
உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும்நடந்து வருவார்கள்என்று.
ஆம் யோசேப்பு, தானியேல் போன்றோர்களுடைய தயவு ராஜாக்களுக்கு
தேவைப்பட்டதேயொழிய,
இவர்கள் ராஜாகளுக்கு முன்பு கைகட்டி நிற்கவில்லை.
யாருமே நமக்கு உதவி செய்யாவிட்டாலும், ஒரு வேளை சூரியனும், சந்திரனும் கூடநம்மை மறந்து போனாலும் கர்த்தரே நமக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்.
ஏசாயா60:19
இனிச் சூரியன் உனக்குப் பகலிலே
வெளிச்சமாயிராமலும்,
சந்திரன் தன்வெளிச்சத்தால் உனக்குப்பிரகாசியாமலும்,
கர்த்தர்உனக்கு நித்திய
வெளிச்சமும், உன்
தேவனே உனக்கு
மகிமையுமாயிருப்பார்.
ஏசாயா60:20
உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை,
உன் சந்திரன்மறைவது
மில்லை; கர்த்தரே
உனக்கு நித்திய
வெளிச்சமாயிருப்பார்;
உன் துக்கநாட்கள் முடிந்துபோம்.
தேவன் நம்மை வற்றாத நீரூற்றைப்போலவும்,
பரவிபாய்கிற
ஆறுகளைப்போலவும்,
பூத்துக்குலுங்கும் வளமிக்க தோட்டத்தைப்போலவும் ஆசீர்வதிப்பாராக!
