இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் ஸ்தாபகர் சகோ. மோகன் சி லாசரஸ் அவர்களைப் பற்றி...
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒன்றான தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள
நாலுமாவடி என்னும் அழகிய கிராமத்தில் பக்தி வைராக்கியமுள்ள இந்துக்
குடும்பத்தில் பிறந்தவர்தான் நம் அன்பு சகோதரர் மோகன் சி. லாசரஸ்
அவர்கள்.
சிறுவயதிலேயே தனது பாட்டியின் மூலம் இராமாயாணம், மகாபாரதம் போன்ற
புராணக்கதைகளை அதிகமதிகமாய் கேட்டறிந்தபடியால் தெய்வத்தின் மீதும், தான்
சார்ந்திருந்த மதத்தின் மீதும் அளவற்ற பக்திவைராக்கியம் எற்பட்டது.
இயேசுவைக் குறித்து அறிவித்தபொழுது அவர் தெய்வமல்ல என்று வாதாடியதோடு
மாத்திரமல்ல அவரைக் குறித்து எவ்வளவு கேவலமாக பேசமுடியுமோ அவ்வளவு
கேவலமாக பேசிய அவரைதான் அன்புள்ள நேசர் இயேசு தேடிவந்து தனக்கென்று
வல்லமையுள்ள சாட்சியாக நிறுத்த சித்தம்கொண்டார்.
அற்புதம்:-
1968ம் ஆண்டு
சகோதரருடைய 14வது வயதில் ஒரு கொடிய வியாதி அவருடைய வலது காலைத்
தாக்கிற்று. எத்தனையோ சிறப்பு மருத்துவர்களிடம் கொண்டு சென்று காண்பித்த
பொழுதும்
என்னவியாதியென்றே கண்டு பிடிக்க முடியவில்லை.
வலது கால் முற்றிலும் செயலிழந்துவிட்டது.
இருதயமும் வீங்கியது, எலும்பும் தோலுமாய் மரணப் படுக்கைக்குள்ளானார்கள்.
மருத்துவர்கள் கைவிட்டார்கள். வேண்டிய தெய்வங்களாலும் ஒன்றும் செய்ய
முடியவில்லை.
இந்நேரத்தில்தான் இயேசு தேடி வந்தார். குடும்ப நண்பராகிய ஒரு கர்த்தருடைய
பிள்ளை சகோதரரை பார்க்க வந்தபொழுது அவரிடம் சகோதரின் தாயார் என் மகனை
எல்லோரும் கைவிட்டுவிட்டார்கள். நீ என் மகனுக்காக இயேசுவிடம் வேண்டுதல்
செய்வாயா. . . . என்று கேட்டார்.
உடனே அவர் சகோதரரின் படுக்கை அருகில் முழங்கால்படியிட்டு ஜெபிக்க
ஆரம்பித்த அந்த நேரத்தில்தானே அதிசயம் நிகழ்ந்தது திடீரென்று ஒரு தேவ
வல்லமை சகோதரரின் சரீரத்தில் இறங்கியது.
கால்களை அசைக்க முடியாதபடி படுத்திருந்த சகோதரன் நொடிப்பொழுதில் குணமாகி
படுக்கையில் எழுந்து அமர்ந்துவிட்டார். அப்பொழுதுதான் இயேசுகிறிஸ்துவே
மெய்யான தேவன் என்பதை அறிந்து கொண்டார்.
இரட்சிப்பு:-
இயேசு தன்னை சுகமாக்கிவிட்டார் என்ற மகிழ்ச்சியில் சென்னை பாடி CSI ஆலய
ஆராதனைக்கு சென்றாலும், வேதம் வாசித்து பக்தியோடிருந்தாலும் வாழ்க்கை
மாறவில்லை.
1972 ஆண்டு மார்ச் மாதம் 17ம் தேதி இரவில் இயேசு என்னோடு பேசவேண்டும் என்
பாவங்களை மன்னிக்க வேண்டும், அதுவரை என் முழங்காலைவிட்டு
எழுந்திருப்பதில்லை என்ற தீர்மானத்தோடு ஜெபிக்க ஆரம்பித்தார்.
இரவு முழுவதும் அதுவரை தான் செய்த பாவங்களை கண்ணீரோடு அறிக்கையிட்டு
ஜெபித்தார். இரக்கமுள்ள தேவன் மார்ச் 18ம் தேதி அதிகாலை 4 மணிக்கு நீ
சாகாதபடிக்கு நான் உன் பாவங்களை மன்னித்தேன் என்று பேசினார் இரட்சிப்பின்
நிச்சயத்தை கொடுத்தார். வாழ்க்கையில் ஆச்சரியமான மாற்றங்கள் உண்டாயின.
அபிஷேகம்:-
பரிசுத்தமுள்ள வாழ்க்கைக்காக ஒரு நாள் சகோதரர் தன் அறையில் ஜெபித்துக்
கொண்டிருந்த பொழுது தேவன் தமது வல்லமையால் சகோதரரை அபிஷேகித்தார்.
1974ம் ஆண்டு தஞ்சாவூரில் நடைபெற்ற ஆசீர்வாத முகாமில் பரிசுத்த
ஆவியானவரைக் குறித்து தெளிவாக அறிந்து கொண்டு ஜெபித்த பொழுது தேவன் பல
மணி நேரம் பரிசுத்த ஆவியால் நிறைந்து பற்பல பாஷைகளை பேசும் கிருபையை
கொடுத்தார்.