அழைப்பு:-
ஆவியானவரால் நிரப்பப்பட்ட பிறகு அழிந்து போகிற ஆத்துமாக்களைக் குறித்த
பாரத்தினால் தேவன் நிரப்பினார். பலமணி நேரங்கள் ஆத்துமாக்களுக்காக கதறி
ஜெபித்துக் கொண்டிருக்கும் பொழுதுதான் கர்த்தர் தமது கனமான ஊழியத்திற்கு
அழைத்தார்.
தேவனுடைய ஊழியத்தை எப்படி செய்வது என்று திகைத்து நின்ற பொழுது 1975ம்
ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒரு நாள் தேவன் முகமுகமாய் தரிசனமாகி சுமார்
அரைமணி நேரம் பேசினார். சகோதரன் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் பதில்
கொடுத்தார்.
முடிவாக என் பெலத்தினால் ஊழியம் செய்ய முடியாது, நான் உம்முடைய கையைப்
பிடித்துக் கொண்டு நடந்தால் ஒரு வேளை உலக ஆசைகள், பாடுகளைக் கண்டு உம்மை
விட்டுவிடக்கூடும். நீர் என் கையைப் பிடித்துக் கொண்டால் ஊழியத்திற்கு
வருகிறேன் என்று கண்ணீரோடு வேண்டிக் கொண்டபொழுது
ஏசாயா 41:13 ன் படி உன் தேவனாகிய, கர்த்தராகிய நான் உன் வலதுகையை
பிடித்து, பயப்படாதே, நான் உனக்கு துணை நிற்கிறேன் என்று சொல்லுகிறேன்
என்று வாக்குபண்ணினார்.
தரிசனம்:-
ஆண்டவரின் அழைப்பிற்கு கீழ்ப்படிந்து ஊழியத்திற்கு அர்ப்பணித்த பொழுது
விசுவாச பயிற்சிக்காக வேதாகம கல்லூரியில் சில வருடங்கள் கல்வி கற்க தேவன்
அனுமதித்தார். இயேசுவையே முற்றிலும் சார்ந்து நிற்கும் கிருபையை தேவன்
இங்குதான் கற்றுக் கொடுத்தார்.
தெருப்பிரசங்கங்களில் பயன்படுத்தினார்.
இந்நிலையில் 1977ம் ஆண்டு சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காடு மலையிலுள்ள
ஆதிவாசி மக்களுக்கு சுவிசேஷத்தை அறிவிக்க ஒரு குழுவாக சென்ற பொழுது தேவன்
இவ்வூழியத்தைக் குறித்த தரிசனத்தைக் கொடுத்தார்.
ஒரு நாள் அதிகாலைநேரம் மலையுச்சியில் தனித்து தேவ சமூகத்தில் காத்திருந்த
பொழுது இயேசு விடுவிக்கிறார் என்ற பெயரைக் கர்த்தர் கொடுத்தார்.
வேதாகமக் கல்லூரிப்படிப்பை முழுவதுமாக படித்து முடிக்க ஆண்டவர் அனுமதிக்
கொடுக்கவில்லை. முழு நேரமாக ஊழியம் செய்ய வேண்டும் என்ற அழைப்பு வந்த
உடன் சென்னையை மையமாக வைத்து ஊழியம் செய்ய பெற்றோர்கள் ஆலோசனை கொடுத்தனர்
அப்பொழுது உன் சொந்த கிராமத்திற்கு போ, அங்கிருந்துதான் என் ஊழியத்தை நீ
நிறைவேற்ற வேண்டும் என்று ஆவியானவர்
திருவுளம்பற்றினார்.
ஆண்டவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து சொந்த கிராமமாகிய நாலுமாவடியில்
இருந்து கொண்டு அழைக்கிற சபைகளில் சென்று ஊழியம் செய்து வந்தார்கள்.
மீதியான நேரங்களில் வனாந்திர பகுதிக்கு சென்று பலமணி நேரங்கள்
தேவசமூகத்தில் காத்திருப்பார்கள்.
1978ம் ஆண்டு ஜூன் மாதம் 26ம் தேதி திங்கட்கிழமை இந்த வனாந்திரத்தில்
ஜெபித்துக் கொண்டிருக்கும்போது கர்த்தர் ஒரு தரிசனத்தைக் கொடுத்தார்.
ஆண்டவருக்காக செய்து முடிக்க வேண்டிய அநேக ஊழியங்களைக் காண்பித்தார்.
அன்று காண்பித்த தரிசனங்கள்தான் கடந்த 30 ஆண்டுகளாக இவ்வூழியத்தில் காலா
காலங்களில் நிறைவேறி வருகிறது.
அழைத்தவர்
உண்மையுள்ளவர். இதுவரை நடத்தினார். இனிமேலும் நடத்துவார் என்று விசுவாசிக்கிறோம்.
இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள் 1.தெச. 5:13