துரதிருஷ்டவசமாக இன்று தங்களை
மனந்திரும்பியவர்களாகக் கூறிக்கொள்பவர்களில்கூட பெரும் பாலோனோர் மெய்யான
மனந்திரும்பியவர்களாய் இல்லை
வாழ்வின் பல்வேறு பகுதிகளில் இவர்கள் மனந்திரும்ப வேண்டிய விதத்தில் சரியானபடி மனந்திரும்பாமலே தேங்கியிருக்கிறார்கள்! ஒருவேளை, இவர்கள் சென்ற சுவிசேஷ கூட்டத்தில்
“மனந்திரும்ப வேண்டும்! பிறர் பொருட்களை திரும்ப செலுத்த வேண்டும்!! போன்ற முக்கியமான பகுதிகள் ஒரு வார்த்தைகூட
பிரசங்கிக்கப்படாமலே. .
நீங்கள் இயேசுவை விசுவாசித்தால் அதுவே போதும்!”
என பிரசங்கிக்க கேள்விப்பட்டிருப்பார்கள். இதுபோன்ற நிலையில் மனந்திரும்பியவர்கள் இயேசுவிடம் கிட்டிச் சேர்ந்து, தங்கள்
பாவங்களை விட்டு
விடுவதற்கல்லாமல்
‘ஆசீர்வதிக்கப்பட்டு சுகம் பெறவே’
வந்தார்கள்!
இவ்வாறு இரட்சிக்கப்படுகிறவர்கள், பிறப்பதற்கு இன்னமும் தயாராயில்லாத குறைமாத வளர்ச்சியிலுள்ள குழந்தைகளைப்போலவே இருக்கிறார்கள்.......... ஆம், தங்கள் கணக்கு விபரத்தை உயர்த்த விரும்பும் இச்சையினிமித்தம், பொறுமையின்றி கருப்பையிலிருந்து பிடுங்கிப் பிறக்க வைக்கும் மருத்துவச்சிகளைப் போலவே இன்றைய சுவிசேஷகர்களும் இருக்கிறார்கள்! இவ்வாறு முதிர்ச்சியுறாமல் அரைகுறையாகப் பிறந்த குழந்தைகள் அநேகமாய் வெகுசீக்கிரத்தில் செத்துப்போகிறார்கள்! அல்லது தங்கள் ஜீவகாலமெல்லாம் பிரச்சனைக்குரியவர்களாய் வாழ்ந்து அவர்கள் செல்லும் சபையில் உள்ள நல்ல மூப்பர்களுக்கு அல்லது உத்தம மேய்ப்பர்களுக்கு ஏராளமான தொல்லை தருகிறவர்களாய் மாறிவிடுகிறார்கள்!
இக்கேடான நிலையிலிருக்கும் ஜனங்கள்
“பின்மாற்றக்காரர்கள்” என அழைப்பதற்குகூட தகுதியற்றவர்கள் ........ பின் என்ன, இவர்கள் என்றைக்காவது தங்கள் வாழ்க்கையில் முதல் அடி எடுத்து வைத்து, ஒரு அடியாவது “முன்னேறிச் சென்றிருந்தால் தானே” பின்மாற்றம் என்றால் என்னவென்று இவர்களால் அறிந்துகொள்ள முடியும்!? “மனந்திரும்புகிற பாவிகள்” நிமித்தமே பரலோகத்தில் மிகுந்த மகிழ்ச்சிஉண்டாகும் என இயேசு
கூறினாரேயல்லாமல். . . வெறுமனே விசுவாசித்துவிட்டு மனந்திரும்பாதவர்களுக்காக அல்ல!! (லூக்கா 15:7,10).
தன் கடந்த கால வாழ்க்கையில் பண விஷயத்தில் செய்த எல்லா பாவங்களிலேயும் “நான் திரும்ப செலுத்திவிடுகிறேன்!” என சகேயு உறுதியான தீர்மானம் எடுத்த பின்பே, அவனுடைய வீட்டிற்கு இரட்சிப்பு வந்ததாக இயேசு கூறினாரேயல்லாமல். . . அதற்கு முன்பாக அல்லவே அல்ல! (லூக்கா 19:9). ஆனால் இன்றைய சுவிசேஷகர்களோ “பிறர் பொருளை திரும்ப செலுத்த வேண்டும்!” என ஒரு வார்த்தைகூட பிரசங்கிக்காமலே “உங்களுக்கு இரட்சிப்பு வந்துவிட்டது!” என ஜனங்களிடம் அறிவித்துவிடுகிறார்களே. . . ஆ, இது துரதிருஷ்டம்!