வசனம் 1:11
ஆண்டவரே, உமது
அடியானின்
ஜெபத்தையும், உமது
நாமத்துக்குப்
பயப்படவேண்டும் என்று
விரும்புகிற உமது
அடியாரின்
ஜெபத்தையும் உமது
செவிகள்
கவனித்திருப்பதாக.
இன்றைக்கு உமது
அடியானுக்குக்
காரியத்தைக் கைகூடி
வரப்பண்ணி, இந்த
மனுஷனுக்கு முன்பாக
எனக்கு இரக்கம்
கிடைக்கப்பண்ணியருளும்
என்று பிரார்த்தித்தேன்.
நான் ராஜாவுக்குப்
பானபாத்திரக்காரனா
யிருந்தேன்.
அன்றைய தினத்திலே
அவன் தேவனிடத்திலே
மன்றாடினான். அன்றைய
தினம் தேவன் அவனுடைய
ஜெபத்தைக் கேட்கும்படி
மன்றாடியது ஏனென்றால்
அந்த நன்னாளிலே அவன்
இராஜாவோடே பேச
இருந்தான். அவனுடைய
வேலை இராஜாவின்
சமுகத்திலே
என்னவென்றும் நாம் இங்கு
அறியமுடிகிறது. அவன்
இராஜாவிற்குப்
பானபத்திரக்காரனாயிருந்
தான். அது அந்நாட்களில்
மிகவும் சிக்கலான
ஒருவேலையாகும்.
இராஜாவிற்கு
பரிமாறப்படும்முன் அந்த
திராட்சைரசத்தை அவன்
ருசி பார்த்து, அதில்
விஷம்
ஏதுமில்லையென்று
திட்டப்படுத்திக்கொள்ளவே
ண்டும். மேலும் இப்பணி
அவனை இராஜாவின்
சமுகத்திலேயே
அடிக்கடி தங்கியிருக்கச்
செய்ததினால் அவன்
இராஜாவுக்கு நன்கு
அறிமுகமானவனாக
இருக்க வேண்டும்.
இப்போது அவன்
ஜெபிக்கிறான்.
இன்றைக்கு உமது
அடியானுக்குக்
காரியத்தைக்
கைகூடிவரப்பண்ணி,
இராஜாவுக்கு முன்பாக
எனக்கு இரக்கம்
கிடைக்கப்பண்ணியருளும்
என்று ஜெபித்தான்.
நெகேமியா எருசலேம்
நகரத்திலே
வசிக்காதிருந்தபோதில
ும் அந்த
நகரத்தைப்பற்றியும், நகர
மக்கள் பற்றியும் உளம்
உறுத்தப்பட்டிருந்தான்.
அவன் அவைகளை எண்ணி
அழுதான். அதற்காக
உபவாசித்திருந்தான்.
தேவனை நோக்கி
ஜெபித்தான். மோசேயின்
ஜெபத்தை மேற்கோள்
காட்டி தேவனிடத்தில்
அந்த மக்களுக்காக
மன்றாடினான். இப்போது
செயல்ப்படத்
துவங்குகிறான்.
வசனம் 2:1-3
அர்தசஷ்டா ராஜாவின்
இருபதாம் வருஷம்
நிசான் மாதத்திலே,
திராட்சரசம் ராஜாவுக்கு
முன்பாக
வைத்திருக்கையில், நான்
அதை எடுத்து
அவருக்குக் கொடுத்தேன்.
நான் முன் ஒருபோதும்
அவர் சமுகத்தில்
துக்கமாயிருந்ததில்லை.
அப்பொழுது ராஜா
என்னைப் பார்த்து: நீ
துக்கமுகமாயிருக்கிறத
ு என்ன? உனக்கு
வியாதியில்லையே,
இது மனதின் துக்கமே
ஒழிய வேறொன்றும் அல்ல
என்றார். அப்பொழுது
நான் மிகவும் பயந்து,
ராஜாவை நோக்கி: ராஜா
என்றைக்கும் வாழ்க. என்
பிதாக்களின் கல்லறைகள்
இருக்கும் ஸ்தலமாகிய
நகரம் பாழானதும், அதின்
வாசல்கள் அக்கினியால்
சுட்டெரிக்கப்பட்டதுமாய்க்
கிடக்கும்போது, நான்
துக்கமுகத்தோடு
இராதிருப்பது எப்படி
என்றேன்.
நெகேமியா மிகவும்
விடாமுயற்சியாய்
இருந்தான். அவனுடைய
உபவாசமும் ஜெபமும்
மாதங்கள் தொடர்ந்து
நடந்தேறின. நாம் சில
வேளைகளில் ஒரு
காரியத்தைக் குறித்து
ஜெபிக்கும்போது
இரண்டு, மூன்று,
இரவுகள் ஜெபித்தபின்
சோர்ந்து போகிறோம்.
ஆனால் நெகேமியா
அவ்வாறு
சோர்ந்துபோகவில்லை.
கர்த்தர் பதிலளிக்கும் நாள்
வந்தது. வழக்கம்போல
அன்றும் நெகேமியா
இராஜாவின் அரண்மனைப்
பணியைச்
செய்தவண்ணமேயிருந்தா
ன். இராஜாவும் அவரது
ஆசனத்தில்தானேயிருந்த
ார். நெகேமியா
திராட்சைரசம்
பரிமாறிக்கொண்டு
இருந்தான். இங்கே
நெகேமியா ஓர்
அருமையான செய்தியை
அறிவிக்கிறான். அவன்
எப்போதும்
இராஜாவிற்கு முன்பாக
இதற்குமுன், அவர்
சமுகத்தில் துக்கமாய்
இருந்ததில்லை.
எப்போதும் மகிழ்ச்சியான
முகத்துடனே இருந்தான்.
இதுபோல நம்மைப்பற்றிக்
கூறமுடியுமோ? ஓர்
உண்மைக்
கிறிஸ்தவனைவிட
யாரும் மனமகிழ்ச்சியாய்
இருக்கமுடியாது.
ஆனால் நாம் பல
நேரங்களில் பலவகைத்
தொல்லைகளினால்
பாதிக்கப்பட்டவர்களாய்க்
காண்கிறோம். இன்று
நெகேமியாவின்
முகமும் அவனது மனதின்
துயரத்தைக்
காண்பித்துக்கொண்டிரு
ந்தது.
இராஜா அதைப் பார்த்தான்.
நீ துக்கமாயிருக்கிறது
என்ன? உனக்கு
வியாதியில்லையே.
இது மனதின் துக்கமே
ஒழிய வேறொன்றும் அல்ல
என்று இராஜா
சொன்னான். அந்த
வார்த்தைகள்
நெகேமியாவை
மிகவும் பயப்படச்செய்தன.
ஓர் இராஜாவைத்
துக்கப்படுத்துவதென்பது
அந்நாட்களில் மிகவும்
அஞ்சப்படவேண்டியஒரு
காரியம். பலவேளைகளில்
இத்தகைய
காரணங்களுக்குச்சிலர்
சிரச்சேதம் செய்யப்பட்டும்
இருக்கின்றனர். ஆனால்
இராஜா அதைப் பற்றிக்
கேட்டபோது
நெகேமியா பயந்து
மயங்கிவிழவில்லை.
உடனே அவன் பதில்
சொல்லுகிறான். அவன்
பதிலிலே வழக்கமான
வாழ்த்துதல் வார்த்தைகளை
நாம் காண்கிறோம்.
இராஜா என்றைக்கும்
வாழ்க (தானி.3:9
ஒப்பிடுக). அதன்
பிறகுதான் அவன்
செய்தியைச்
சொல்லுகிறான். என்
பிதாக்களின் கல்லறைகள்
இருக்கும் நகரம்
பழானதும், அதன் வாசல்கள்
அக்கினியால்
சுட்டெரிக்கப்பட்டதுமாய்
கிடக்கும்போது நான்
துக்கமுகத்தோடு
இராதிருப்பது எப்படி?
எருசலேம் நகரம் என்ற
பெயரை அவன்
குறிப்பிடவில்லை.
அதை உரிமையான ஓர்
இடமாகக் குறிப்பிட்டு,
என்னுடைய
முன்னோர்களின் நகரம்
என்று குறிப்பிட்டுப்
பேசுகிறான். எஸ்தரும்,
ஒருமுறை அகாஸ்வேரு
இராஜாவினிடத்தில்
பேசும்போது அவ்வாறே
கூறுகிறாள்.... என்
ஜீவன்.... என் மன்றாட்டு.... என்
ஜனங்கள்... (எஸ்.7:3). இந்த
இரண்டு முறையும் யார்
இவ்வார்த்தைகளைப்
பேசினார்களோ அவர்கள்
நிமித்தம் அரசர்கள்
இவ்வார்த்தைகளுக்குச்
செவி சாய்த்தனர்.
நெகேமியா தன்
வார்த்தைகளை
வளர்க்கவில்லை.
அவனுடை மாறுத்தரம்
யாவும்
சுருக்கமாயிருந்தது.