*.ஆமோஸ்: 1:3 – “…தமஸ்குவினுடைய மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும்…”
*.ஆமோஸ்: 1:6 – “..காத்சாவினுடைய மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும்…”
*.ஆமோஸ்: 1:9 – “…தீருவினுடைய மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும்…”
*.ஆமோஸ்: 1:11 – “…ஏதோமுடைய மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும்…”
*.ஆமோஸ்: 1:13 – “…அம்மோன்புத்திரரின் மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும்…”
*.ஆமோஸ்: 2:1 – “…மோவாபின் மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும்…”
*.ஆமோஸ்: 2:4 – “…
யூதாவின் மூன்று
பாதகங்களினிமித்தமும், நாலு
பாதகங்களினிமித்தமும்…”
*.ஆமோஸ்: 2:6 – “…இஸ்ரவேலின் மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும்…”
ஆமோஸ் தீர்க்கதரிசி தன் புத்தகத்தில் நான்கு தேசங்களையும், நான்கு வம்சங்களையும் (அல்லது இனங்கள்) அவர்கள் செய்த மூன்று நாலு பாதகங்களையும், அதனால் அவர்களுக்கு கர்த்தரால் வருகிற ஆக்கினைத்தீர்ப்பையும் குறிப்பிடுகிறதை வாசிக்கிறோம்.
பாதகங்களைச் செய்த நாடுகளும், வம்சங்களும் அதற்கு வரும் தண்டனைகளும்
தாழ்ப்பாள் உடையும்
சங்காரம்
சிறையிருப்பு
-
-
-
-
காத்சா
தீக்கொளுத்துதல்
சங்காரம்
விரோதம்
அரண்மனை பட்சிப்பு
-
-
-
தீரு
தீக்கொளுத்துதல்
அரண்மனை பட்சிப்பு
-
-
-
-
-
ஏதோம்
தீக்கொளுத்துதல்
அரண்மனை பட்சிப்பு
-
-
-
-
-
அம்மோன்
தீக்கொளுத்துதல்
அரண்மனை பட்சிப்பு
யுத்த முழக்கம்
பெருங்காற்று புசல்
சிறை இருப்பு
-
-
மோவாப்
தீக்கொளுத்துதல்
அரண்மனை பட்சிப்பு
சங்காரம்
கொலை
-
-
-
யூதா
தீக்கொளுத்துதல்
அரண்மனை பட்சிப்பு
-
-
-
-
-
இஸ்ரவேல்
புகலிடம்
இல்லை
பலப்படுவது
இல்லை
தப்புவது இல்லை
நிலைநிற்பது இல்லை
இரட்சிப்பு இல்லை
நிர்வாண ஓட்டம்
இருத்துவேன் (அடிப்பேன்)
நாடுகள்:
தமஸ்கு, காத்சா, தீரு, இஸ்ரவேல்
வம்சங்கள் / இனங்கள்:
ஏதோம், அம்மோன், மோவாப், யூதா
நாடுகளும், வம்சங்களும் செய்த பாவங்கள் ஒரே மாதிரியானவைகள். ஆனால், ஆக்கினைத்தீர்ப்பு, தண்டனைகளில் மட்டும் வித்தியாசப்படுவதை காணலாம்.
ஏன் இந்த வித்தியாசம்?
லூக்கா: 12:47,48 –
“தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும், அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான். அறியாதவனாயிருந்து, அடிகளுக்கு
ஏதுவானவைளைச் செய்தவனோ, சில அடிகள் அடிக்கப்படுவான். எவனிடத்தில் அதிகங் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங் கேட்கப்படும்; மனுஷர் எவனிடத்தில் அதிகமாய் ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாய்க் கேட்பார்கள்”
இரண்டு வித மக்கள் இருக்கிறார்கள்:
1. சத்தியத்தை
அறிந்தவர்கள்
2. சத்தியத்தை
அறியாதவர்கள்.
அட்டவணையில் நாம் காணும்போது இவ்விரு பிரிவினரை நாடுகளிலும் இனங்களிலும் காணலாம். அறிந்தவனுக்கு ஆக்கினைத்தீர்ப்பு அதிகம். அறியாதவனுக்கு ஆக்கினைத்தீர்ப்பு குறைவு. இவைதான் வித்தியாசத்திற்கு காரணம்.
“மூன்று பாதகங்கள், நாலு பாதகங்கள்” என்றால் என்ன?
விரிவாக ஆய்வு செய்வோம்.
யாத்திராகமம்: 20:2–17 வரையுள்ள வசனங்களில்10 கட்டளைகள் உள்ளதை காணலாம். அவை:
1.உன்னை
அடிமைத்தனத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே. என்னையன்றி வேறே தேவர்கள் உனக்கு உண்டாயிருக்க வேண்டாம்.
2.மேலே வானத்திலும் கீழே பூமியிலும், பூமியின் கீழ்த்தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு
சொரூபத்தையாகிலும், யாதொரு
விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம். நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்.
3.உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே
வழங்காதிருப்பாயாக.
4.ஓய்வுநாளை பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக. ஆறுநாளும் வேலை செய்து உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக.
5.உன் தகப்பனையும், உன் தாயையும் கனம் பண்ணுவாயாக.
6.கொலை
செய்யாதிருப்பாயாக.
7.விபசாரம்
செய்யாதிருப்பாயாக.
8.களவு
செய்யாதிருப்பாயாக.
9.பிறனுக்கு விரோதமாக பொய்சாட்சி
சொல்லாதிருப்பாயாக.
10.பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக.
- தேவனாகிய கர்த்தர் கொடுத்த பத்து கட்டளைகள் இவையே.