பர்த்தலோமேயு
சீகன்பால்க் பாகம் 4
இளைஞர்களுக்கு பயிற்சிப் பள்ளி துவங்கப்பட்டது:
தொலதூர நோக்கோடு வாலிபர்களை ஆசிரியப் பணிக்கும் போதகப் பணிக்கும் சீகன்பால்க் பயிற்றுவித்தார். இந்த நோக்கத்திற்காக கிறிஸ்தவ வாலிபர்கள் தங்கள் இல்லங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு காப்பகங்களில் தங்க வைத்து கல்வியும் பயிற்சியும் அளிக்கப்பட்டனர். இந்த வாலிபர்களுக்கு உணவு, உறைவிடம், உடுக்க துணிகள் கொடுத்து பயிற்சி அளிக்கப்பட்டது. திருச்சபைகளிலும் பாடக சாலைகளிலும் இவர்களுக்கு வேலைவாய்ப்பு தரப்பட்டது. ஏனையோருக்கு குடியமைப்பு நிர்வாகத்தில் உயர்பதவி தரப்பட்டு பொருளாதார தாழ்வு நிலையிலிருந்த கிறிஸ்தவ குடும்பங்கள் பராமரிக்கப்பட்டன.
இலக்கியப் பணி வளர்ச்சி அடைதல்:
1713 ம் ஆண்டு ஹாலே பல்கலைக்கழகத்திலிருந்து மூன்று எழுத்து வடிவமைப்பும் அச்சு இயந்திரமும்மிஷனரிப்பணிக்கென தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழ் எழுத்துக்களைக் கொண்ட ஒரு அச்சகததைபிராங்கே உருவாக்கியிருந்தார். இறுதியில் ஆங்கில எழுத்துக்களைக் கொண்ட அச்சகமும் அச்சுத்தாளுடன் வந்துசேர்ந்தது. இந்த வசதிகளைக் கொண்டு தமிழ் இலக்கியப் பணி வெகுவாய் விரிவுப்படுத்தப்பட்டது. பாமாலை நூல்,பாடல் நூல் தமிழாக்கம் செய்து அச்சிடப்பட்டது. ஜெபப்புத்தகமும், தியானப்புத்தகங்களும் பின்னை
மொழியாக்கம்பெற்று அச்சிடப்பட்டு,
இவ்விலக்கியங்கள் தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதியில் விரிவான முறையில்வி
நியோகிக்கப்பட்டது.
கடலூர், சென்னை மற்றும் இலங்கைக்கு அருட்பணி விரிவு செய்தல்:
சீகன்பால்க் டென்மார்க் குடியமைப்போடு தன் அருட்பணியை முடித்துவிடாது தன் பரந்த நோக்கோடும் ஆழ்ந்தபாரத்தோடும் நற்செய்தி இதுவரை எட்டாத மற்ற இடங்களுக்கும் தனது பணியை விரிவு செய்து கொண்டார்.சென்னை மாநகருக்கும் அண்டை நகரமாகிய கடலூருக்கும் அடிக்கடி பயணம் மேற்கொண்டுகிறிஸ்தவல்லாதவருக்கு நற்செய்தியை பிரசங்கித்தும் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு தேவையானஆன்மீக போதனைகள் தந்தும் வந்தார். இலங்கையில் அருட்பணிக்கான வாய்ப்புகளை கண்டறியுமாறு அங்கும்அவர் விஜயம் செய்தார். அங்கு வாழ்ந்த ஜெர்மானியர்களுக்கு போதக விசாரணைத் தர திட்டம் வகுத்தார். ஆனால்இந்த திட்டங்கள் பின் வந்த மிஷனரிகளால் தான் நிறைவேற்ற முடிந்தது. இவ்விதமாக தமிழகத்தின் பலபகுதிகளிலும் இலங்கையிலும் ஆரம்பித்து வைத்த அருட்பணி பின்னர் ஏனைய மிஷனரிகளால் விரிவானமுறையில் செயல்படுத்தபட அனுகூலமாயிருந்தது.
சீகன்பால்க்
சிறையிலிடப்படுதல்:
டென்மார்க் குடியமைப்பின் ஆளுநராகிய ஹாஸியஸ் மிஷனரிகளை ஒடுக்கும் எண்ணத்துடன்
கோட்டையில்தன்னை வந்து சந்திக்குமாறு 1701 ம் ஆண்டு நவம்பர் மாதம் சீகன்பால்க்கை அழைத்தார். அவரை அழைத்து வரஇராணுவம் மிஷனரி இல்லத்தை நோக்கி விரைந்தது. முழங்காலினின்று சீகன்பால்க் ஜெபித்துக் கொண்டிருந்தபடியால் பல மணி நேரம் இராணுவத்தினர் காத்திருக்க வேண்டியதாயிற்று. பொறுமையிழந்த இராணுவ தளபதிஅவரை சபித்து ஜெபத்தை நிறுத்த வைத்து தன்னோடு அழைத்துச் சென்றான்.
ஆளுநர் ஹாஸியிஸ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்பவராகவும் நீதிபதியாகவும் செயல்பட்டார். சீகன்பால்க்கிற்குவிரோதமாக எந்த சாட்சியும் நிறுத்தப்படவோ விசாரிக்கப்படவோ இல்லை. அவரை கேட்டபோது இயேசுகிறிஸ்துவைப் போன்று அமைதியாய் இருந்தார். இறுதியாக அவரைக் கைது செய்து சிறையிலடைக்க ஹாஸியஸ்உத்தரவிட்டார்.
மிகவும் கொடூரமாக வெப்பமிகுந்த அறையில் சீகன்பால்க்
சிறைவைக்கப்பட்டார். அவரது சிறைக் கோட்டைசமையலறைக்கு அடுத்து அமைக்கப்பட்டு சமையலறை வெப்பமும் சூரிய வெப்பமும் அவரை வெகுவாய்வாட்டியது. அவரது சக மிஷனரியாகிய புளூட்சோ அவரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. எழுத பேனாவும்காகிதமும் கூட அவருக்கு
மறுக்கப்பட்டதால் அவர் தனது திருமறை தமிழாக்கத்தை தொடரமுடியாமற் போயிற்று.
அமைதியினால் அவரது மிஷனரிப் பணி பாரமும் வாஞ்சையும் அவிக்கப்படவும், தனிமையின்
கொடுமையும்கொடும் வெப்பமும் அவர் உடலிலிருந்த நோய் எதிர்ப்பு தன்மையையும் பெலனையும் முற்றிலும் அழித்துபோடவும் எதிரிகள் சதி செய்தனர். இருப்பினும் புளுட்சோவைப் போல் சீகன்பால்க்கும் துவண்டு போகாதுமனதைரியத்துடன் பாடலாலும் ஜெபத்தாலும் சிறையைத் தூய்மைப்படுத்தினார்.
இதன் காரணமாக மக்கள் திரள் ஹாஸியஸ்ஸிற்கு எதிராக எழும்பியதால் சிறைதண்டனையை நீண்டநாள் அவர்நீடிக்க முடியவில்லை. சீகன்பால்க்கின் மேல் பொதுமக்கள் வைத்திருந்த பாசம், மதிப்பு, மரியாதைக்குஅளவில்லை.
1709 ம் ஆண்டு மார்ச் 26 ம் நாள் நான்கு மாத சிறைவாசத்தின் பிறகு சீகன்பால்க்
விடுதலைச்செய்யப்பட்டார். சிறையிலிருந்து வெளிவந்தவுடன் பல மாறுதல்கள் ஏற்பட்டன. சிறையில் அவர் அனுபவித்தபாடுகள் தேவன் அவருக்கு நன்மை பயக்கும்படி செய்தார். அவர் பொதுமக்களின் மிகுந்த
மரியாதைக்குரியவரானார்.