தேவன் நம்மை எதற்காக அழைத்திருக்கிறார்?
நம்மை ஆசீர்வதிக்கவே அழைத்திருக்கிறார் என ஆமோஸ் தீர்க்கதரிசி கூறுகிறார். சாத்தான் நம்மை அழைத்து அடிப்பான். தேவன் கொடுத்த ஆசீர்வாதங்களை நம் கண்காண நயமாக வஞ்சித்து பிடுங்கிக் கொள்வான். பின்பு, நம்மை ஏளனம் செய்து நித்தித்து அவமதிப்பான்.
இஸ்ரவேலைக்குறித்த தேவனது ஆதங்கம்:
ஆமோஸ்: 2:9-11 –
“நானோ: கேதுரு மரங்களைப் போல் உயரமும், கர்வாலி மரங்களைப் போல் வைரமுமாயிருந்த எமோரியனை அவர்களுக்கு முன்பாக அழித்தேன்; உயர இருந்த அவனுடைய கனியையும், தாழ இருந்த அவனுடைய வேர்களையும் அழித்துப்போட்டு, நீங்கள் எமோரியனுடைய தேசத்தைக் கட்டிக்கொள்ளும்படிக்கு, உங்களை நான் எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணி, உங்களை நாற்பது வருஷமாக வனாந்தரத்திலே வழிநடத்தி,உங்கள் குமாரரில் சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், உங்கள் வாலிபரில் சிலரை நசரேயராகவும் எழும்பப்பண்ணினேன்; இஸ்ரவேல் புத்திரரே, இப்படி நான் செய்யவில்லையா என்று கர்த்தர் கேட்கிறார்”.
“இப்படி நான்
செய்யவில்லையா?”– என்று கர்த்தர் நம்மிடம் சூசகமாக கேட்பதை பார்க்கிறோம்.
*.செய்யத்தான்
*.கொடுக்கத்தான்
*.செழிக்கத்தான்
*.ஐசுவரியவனாக்கத்தான்
*.ஞானமுள்ளவனாக்கத்தான்
*.உங்கள் பிள்ளைகளை தீர்க்கதரிசிகளாக்கத்தான், ஊழியர்களாக்கத்தான்
*.தேசத்தின்
அதிபதிகளாக்கத்தான் – தேவனாகிய கர்த்தர் நம்மை அழைத்திருக்கிறார். தேவனாகிய கர்த்தர் நம்மை நடத்தி வந்த பாதைகளை திரும்பி பாருங்கள். தேவனால் அழைக்கப்பட்ட நாளிலிருந்து இந்நாள்வரை நம் வாழ்வில் அவர் செய்த காரியங்களை நினைத்துப் பாருங்கள். ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் எத்தனை? எத்தனை? உலகவாழ்வின் ஆசீர்வாதங்கள் எத்தனை? எத்தனை? இப்படி அவர் நமக்கு செய்யவில்லையா? அவர் செய்த அதிசயங்கள், அற்புதங்கள்,
வழிநடத்துதல்கள், அடையாளங்களை நினைத்து நினைத்து நன்றி சொல்லுங்கள்.
நம்முடைய ஆசீர்வாதங்கள் கர்த்தருடைய வசனத்திற்குள் மறைவாக வைத்திருக்கிறார்.நாம் தான் வேதத்தை வாசித்து தியானித்து கண்டு பிடித்து அவைகளை சுதந்தரிக்க வேண்டும். நீதி: 25:2 – “காரியத்தை மறைப்பது தேவனுக்கு மேன்மை; காரியத்தை ஆராய்வது ராஜாக்களுக்கு மேன்மை”. கர்த்தருடைய வசனத்தின் உள் அர்த்தத்தை கண்டறிய, கர்த்தருடைய பாதத்தில் பொறுமையோடே அமர்ந்து வேதத்தை தியானித்தால்தான் விளங்கும். அதை நாம் சுதந்தரிக்க வழி புலப்படும்.
மூன்று
பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும் வந்த ஆக்கினையிலிருந்து தப்புவது எப்படி?
சங்கீதம்: 107:6,13,19 –
“தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்; அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சிக்கிறார்” என வாசிக்கிறோம். கர்த்தருடைய வார்த்தைகளை மீறி, கட்டளைகளை மீறி பாதகங்களை செய்யும்போது, தேவ ஜனத்திற்கு ஆபத்தும், ஆக்கினையும் வருகிறது. அப்போதெல்லாம் இஸ்ரவேல் ஜனங்கள்கர்த்தரை நோக்கி கூப்பிட்டு தங்களை காத்துக் கொண்டார்கள்என பார்க்கிறோம்.
ஏசாயா: 1:18 –
“வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச்
சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்” என்று அழைக்கிறார். பாவத்தை நோக்கி எவ்வளவு தூரம் பயணப்பட்டிருந்தாலும் பரவாயில்லை. கர்த்தர் அழைக்கிறார். அனைத்து பாதகங்களையும் நம்மை விட்டகற்றி வெண்மையாக்கி, பரிசுத்தமாக்கி நீதிமானாக்க அழைக்கிறார். பாதக மார்க்கத்தை விட்டு விலகி ஜீவ மார்க்கத்தை பின் தொடரும்போது, நம்மேல் வருகிற ஆக்கினைத்தீர்ப்பு மாறி, ஆசீர்வாத வாழ்வை காண்போம்.
ஆபத்திலே கர்த்தரை நோக்கி மனதார கூப்பிடும்போது….(ஆமோஸ்: 9:12-15)
*.விழுந்துபோனதை திரும்ப எடுப்பிக்க உதவிடுவார்
*.திறப்புகளை அடைப்பார்
*.பழுதானவைகளை சீர்படுத்துவார்
*.பூர்வ நாட்களில் இருந்ததைப்போல ஸ்தாபிப்பார்
*.சிறையிருப்பு என்கிற அடிமைத்தனத்தை திருப்புவார்
*.பாழானவைகளை திரும்ப கட்டுவாய்
*.உன் தோட்டம் செழிப்பாகும் (தொழில், வேலை, வியாபாரம், குடும்பம்)
*.குடிவிட்டு ஓட மாட்டாய்; ஊர்ஊராக அலைந்து திரியமாட்டாய்; நிலைத்திருப்பாய் இப்படி அவர் செய்யவில்லையா? என்று கர்த்தர் கேட்கிறார். நாம் என்றால் தேவனுக்கு அவ்வளவு பிரியம். எண்: 24:1 –
“இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம்” என்பதை அறிவோமாக. ஆமென்! அல்லேலூயா!