பத்து கட்டளைகளை இரு பிரிவாக பிரிக்கலாம். அவை:
1.பத்து கட்டளைகளில் முதல் மூன்று கட்டளைகள் கர்த்தருடைய பரிசுத்த நாமத்தின் மகிமைக்குரியது. அதை நாம்
பரிசுத்தகுலைச்சலாக்கக் கூடாது. அதை நாம் மீறி நடந்துகொள்ளும்போது அந்நிய தேவனை தொழுது கொள்ளுகிறவர்களுக்கு ஒப்பாக இருப்போம். அது கர்த்தருடைய பார்வையில் பாதகமாக அமையும். கர்த்தரின் நாமத்திற்கு மகிமையை கொண்டு வருகிற முதல் மூன்று கட்டளைகளை மீறுவதே
“மூன்று பாதகங்கள்” என ஆமோஸ்
குறிப்பிடுகிறார்.
மனிதன் தன் ஆவி, ஆத்துமா, சரீரத்திற்கு எதிராக மற்றும் திரியேக தேவனுக்கு பிதா, குமாரன் பரிசுத்தாவிக்கு விரோதமாக செய்யும் மூன்று பாதகம் இதுவே.
2.அடுத்து வரும் 4,5,6,7 ஆகிய கட்டளைகள் நமக்கு நாமே மற்றும் பிற மனிதனுக்கு அல்லது சக மனிதனுக்கு விரோதமாக எவ்வித எதிரான காரியங்களையும் செய்யாதபடிக்கு கொடுக்கப்பட்ட கட்டளைகள். அதை மீறி நடக்கும்போது சக மனிதனுக்கு தீமையும், மனித சமுதாயத்திற்கு மிகப் பெரிய சேதத்தையும் விளைவிக்கும். அது ஒரு தேசத்தை மட்டுமல்ல… முழு உலகத்தையே
நாசமாக்கி விடும். தனிமனித ஒழுக்கம் சீர்கெட்டுப் போய்விடும். 4,5,6,7, ஆகிய இந்நான்கு கட்டளைகளையும் மீறி நடக்கும்போது தனிமனித ஒழுக்கம், சமுதாய ஒழுக்கம், தேசங்களின் ஒழுக்கம் சீர்கெடுகிறது. சக மற்றும் பிற மனிதனுக்கு விரோதமாக மனிதன் செய்யும்
“நாலு பாதகங்கள்” இதுவே என ஆமோஸ் குறிப்பிடுகிறார்.
இதற்கடுத்து வரும் 8,9,10 ஆகிய கட்டளைகளும் 4,5,6,7 ஆகிய கட்டளைகளைப் போலவே தனி மனித ஒழுக்கம், சமுதாய ஒழுக்கத்தைப்பற்றியதே. எனவே, பத்து கட்டளைகளில் கடைசி மூன்று கட்டளைகள்
4,5,6,7 ஆகிய
கட்டளைகளுக்குள் அடங்கி விடுகிறதை பார்க்கலாம். எனவே, மூன்று பாதகங்கள் மற்றும் நாலு பாதகங்கள் என்பது இக்கட்டளைகளை மீறி நடப்பதையே குறிக்கிறது.
1.ஒரு மனிதன் தன் ஆவி, ஆத்துமா, சரீரத்திற்கு விரோதமாக செய்யும் பாதகங்கள் மூன்று
2.ஒரு மனிதன் பிற மனிதனுக்கு விரோதமாக செய்யும் பாதகங்கள் நாலு.
அ) ஒரு மனிதன் தன் ஆவி, ஆத்துமா, சரீரத்திற்கு விரோதமாக செய்யும் பாதகங்கள் மூன்று:
சங்கீதம்: 107:17 – “நிர்மூடர்தங்கள் பாதகமார்க்கத்தாலும்தங்கள் அக்கிரமங்களாலும் நோய் கொண்டு
ஒடுங்கிப்போகிறார்கள்” என்று பரிசுத்த வேதாகமம் சொல்லுகிறது. பத்து கட்டளைகளில் முதல் மூன்று கட்டளைகள் நீதியின் மார்க்கத்தை நமக்கு காட்டுகிறது. போதிக்கிறது. அதை விட்டு வழிவிலகி சென்றால்… பாதகமான மார்க்கத்தை
பின்பற்றுகிறவர்களாவோம். அது நமது ஆவி ஆத்துமா சரீரத்தை ஆக்கினைக்குள்ளாக தீர்த்து விடும். கட்டளையை விட்டு விலகுவதே பாதகம். பாதக மார்க்கம்.
ஆ) ஒரு மனிதன் பிற மனிதனுக்கு விரோதமாக செய்யும் பாதகங்கள் நாலு:
சங்கீதம்: 107:34 – “குடிகளுடைய
பொல்லாப்பினிமித்தம் செழிப்பான தேசத்தை உவர் நிலமாகவும் மாற்றுகிறார்”
ஆதியாகமம்: 3:17 –
“… பூமி உன்னிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்…” பாவம் மற்றும் பாதகங்களினிமித்தம், பூமி, தேசங்கள், வம்சங்கள் அனைத்தும்
சாபத்திற்குள்ளாகிறது. முடிவில் ஆக்கினைத்தீர்ப்புக்கு ஏதுவாகிறது.
இப்படிப்பட்ட
பாதகங்களைத்தான் ஆமோஸ் குறிப்பிடுகிற நாடுகளும், வம்சங்களும் செய்து
ஆக்கினைக்குள்ளானர்கள் என அறிகிறோம்.
மூன்று, நாலு பாதகங்கள் என்பது பாவத்தின் எண்ணிக்கையை காட்டுகிறது. 3 4=7; ... என மனிதன் பாவத்தோடே பாவத்தை செய்வதினால் பாவத்தின் கூட்டுத்தொகை கூடுதலாகிக் கொண்டே போகிறதை வேதத்தில் நாம் காணலாம். மாற்கு: 7: 21-22 வரை 13 பாதகங்கள்; கலா: 5:19-21 - வரை 17 பாதகங்கள்; 2தீமோ: 3:1-8 வரை 21 பாதகங்கள். பரிசுத்தத்தை விரும்புகிற கூட்டத்தைவிட பாவத்தையும் பாதகத்தையும் விரும்பிச் செய்கிற கூட்டம் அதிகமாக உள்ளதை உலகில் பார்க்கிறோம். ஆதாமில் ஆரம்பம் ஆன மீறுதல் என்கிற பாவம் பெருகி பெரும் பாதகத்தை நோக்கி பயணம் செய்து முழு
மனுக்குலத்தையும் சர்வ நாசம் செய்து கொண்டிருப்பதை மனிதன் உணராமலிருப்பதை காணும்போது... மனந்திரும்புதலின் செய்தி மனுக்குலத்திற்கு எவ்வளவு அவசியமானது என்பதை நமக்கு உணரச் செய்கிறது.