ஒருவர்:
பாஸ்டர் உங்கள் சபையில் எத்தனை ஆடுகள்.
மத்தவர்:
என் சபையில் ஆடுகளே இல்லை. ஐம்பது பன்றிகள் தான் உண்டு. காரணம் அனைவரும்
பின்மாற்றம் அடைந்து திரும்ப சபைக்குள் வந்தவர்கள்.
ஒருவர்:
அப்படியானால் பன்றிகள் மேய்க்கிற நீங்களும் தகப்பன் வீட்டை விட்டு வெளியே
போன இளைய குமாரன் தானா?
மற்றவர்:
...?...?...?
ஒருவர்:
பெரிய ஊழியக்காரர் ,சிறிய ஊழியக்காரர் என்று சொல்கிறார்களே, அதன் அர்த்தம் என்ன?
மற்றவர்:
தேவசித்தப்படி ஓர் குறிப்பிட்ட இடத்தில் சபையை நடத்தி ஆத்துமாக்களை
ஆதாயம் செய்து வருகைக்கு ஆயத்தப்படுதுபவர்கள் இன்றைக்கு சிறிய ஊழியர்கள்
எனவும்
எந்த சபையுமே இல்லாமல் பல சபை மக்களை அழைத்து மண்டபத்திலே கூட்டி உபவாச
ஜெபமும், தீர்க்கதரிசன முகாம்களும், பாடல் ஆராதனை என்ற பெயரில் கும்மாளம்
போடுகிறவர்கள் ஜனங்களின் பார்வையில் பெரிய ஊழியர்கள் எனவும்
அறியப்பட்டிருகிறார்கள்.
ஒருவர்:
அப்போஸ்தலர் ஊழியம் என்றால் என்ன?
மற்றவர்:
அப்போஸ்தலர் ஊழியம் என்பது அப்போ வேறு, இப்போ வேறு .
அப்போ:
அப்போஸ்தலர்கள் பட்டணங்கள், கிராமங்கள் தோறும் புறப்பட்டு போய்
சுவிசேஷத்தை பிரசங்கித்து; ஜனங்களை இரட்சிபிட்குள் வழிநடத்தி, சபைகளை
கட்டி, ஊழியர்களை நியமித்து, மந்தைக்கு மாதிரியாய் கண்காணிப்பு செய்து,
சகலவற்றிலும் நற்சாட்சியை விளங்கப்பண்ணி இரத்தசாட்சியாய் மரித்தார்கள்.
இப்போ :
சுவிசேஷத்தை உலகமெங்கும் விற்று பணம் சம்பாதித்து அப்பாவியான ஊழியங்களை
விலைக்கு வாங்கி அடிமை படுத்தி, பத்திரிகைகள், டிவியில் தங்களை
விளம்பரப்படுத்தி உல்லாச வாழ்க்கை வாழ்ந்து ஏசி கார்களில் வலம் வந்து,
சீடீ, புத்தகங்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் தான் இன்றைய
அப்போஸ்தலர்கள்.