பிலேயாமின் பொருளாசை, எச்சரிக்கை!
- சகரியா பூணன்
பிலேயாமின் மாதிரியை சற்று பாருங்கள்! "பாலாக் ராஜாவிடம் நீ
போகவேண்டாம்!" என தேவன் மிகத் தெளிவாகவே பேசியிருந்தார். ஆனால், அந்த
ராஜா "அதிக பணம்" தருவதாகக் கூறியதும் "மீண்டும் தேவனுடைய சித்தத்தை
அறிந்திட" பிலேயாம் விரும்பினான்.
அவனுடைய
இருதயத்திலிருந்த "பொருளாசையைக்" கண்ட தேவனும், இந்த பிலேயாம்.....
பாலாக்கிடம் செல்லும்படி அனுமதி கொடுத்து விட்டார். இந்த பிலேயாமைப்போலவே
இன்றும் அனேக விசுவாசிகள் இருக்கிறார்கள்! இவர்கள், தாங்களும் "தேவனுடைய
சித்தத்தைத் தேடுவதைப்போல்" பாவனை செய்கிறார்கள்..... ஆனால்,அவர்களுடைய
இருதயமோபொருளாசையின் இச்சைக்குப் பின்னால் சென்று கொண்டிருக்கிறது.
இவர்களுடைய மனநோக்கத்தை தேவன் அறிந்திருக்கிறபடியால், அவர்கள் எங்கு
செல்ல விரும்புகிறார்களோ, அங்கே செல்லுவதற்கு 'பிலேயாமை
அனுப்பியதைப்போல்' அனுமதித்து விடுகிறார்!
இன்றைய நாட்களில், விசுவாசிகளும் வேலை வாய்ப்பிற்காக
அயல்நாட்டிற்குச் செல்லுகிறார்கள். அவ்வாறு இவர்கள் செல்லுவதற்குரிய
காரணங்கள் 'வெவ்வேறாய்' இருப்பதை நாம் காண்கிறோம்.
இந்தியாவிலுள்ள தன் ஏழை குடும்பத்திற்கு உதவி செய்யும்படி ஒருவர்
செல்லுகிறார்! அது நிச்சயமாய் நல்லதொரு காரணமேயாகும். ஆனால், தன்னுடைய
தேவைக்கென்று இல்லாமல், ஏராளமான பணம் சம்பாதிப்பதற்காகவே மற்றொருவர்
செல்லுகிறார்! எனவே, இந்த இருவருடைய "கடைசி முடிவு" ஒரேவிதமாய் இருப்பது
இல்லை!தன் தேவையினிமித்தம் சென்றவர்,தன் ஆவிக்குரிய ஜீவியத்தில் ஓங்கி
வளருகிறார்....
தன்பொருளாசையைப் பூர்த்தி செய்திட சென்றவரோ,
பின்மாற்றம்
அடைந்துவிடுகிறார்!!
ஏனெனில் "உங்களுக்கு எவ்வளவு தேவையோ அதைத் தேவன் உங்களுக்குத்
தருவார்"என்பதையே நீங்கள் விசுவாசித்து, அவர் தந்து.... நீங்கள்
பெற்றுக்கொண்டது எவ்வளவாயிருந்தாலும் "அது போதும்" என்ற திருப்தி
கொண்டவர்களாயுமே நீங்கள் இருந்திட வேண்டும்!
உங்கள் தேவைகள் பூர்த்தியாகாமல் இருக்கும் சமயத்தில், "ஆண்டவரே, என்
சம்பாத்தியம் என் தேவையைப் பூர்த்தி செய்திட போதுமானதாய் இல்லை" என,
ஜெபத்தில் தேவனிடத்தில் தெரிவிப்பதே திவ்வியமான வழியாகும். உங்கள்
ஜெபத்தைக் கேட்கும் தேவன், உங்கள் தேவையை நிச்சயமாய் பூர்த்தி செய்வார்!!
எதிர்காலத்திற்காகப் பணம் சேமிப்பதைக் குறித்து என்ன? ஒரு இயேசுவின்
சீஷன் தனக்கென்று ஓர் வங்கி சேமிப்பு கணக்கு அல்லது வைப்பு நிதி (fixed
deposit)) அல்லது கம்பெனி பங்கு பத்திரங்கள் அல்லது வேறு எந்த ரூபத்திலான
சொத்துக்கள்
வைத்திருக்கலாமா?
"பூமியிலே அல்ல, பரலோகத்திலே உங்களுக்கு பொக்கிஷங்களைச்
சேர்த்துவையுங்கள்" என்றல்லவா இயேசு கூறியிருக்கிறார்?!
இங்கு இயேசு கூறிய சத்தியத்திலுள்ள உண்மையான கேள்வி என்னவென்றால் "உங்கள்
சேமிப்புகளில் யாதொன்று "எந்த சமயத்தில்" 'உங்கள் பொக்கிஷமாய்'
மாறுகிறது?" என்பதேயாகும். இந்த கேள்விக்கு தெளிவான பதிலை நாம் கூறிட
முடியாது! அல்லது, இக்கேள்வியை வைத்து நாம் "பிறருக்கு" சட்டதிட்டங்கள்
வகுத்திடவும் நிச்சயமாய் முடியாது!!
இவ்வுலகின் 'யாதொன்று' 'எப்போது' என்னுடைய பொக்கிஷமாய் மாறுகிறது
என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பை அவரவர்கள்மீதே ஆண்டவர்
வைத்துவிட்டார்!!
இதைக் கண்டு கொள்ள ஒரே வழி என்னவென்றால், "நான் எதைக் குறித்து அடிக்கடி
சிந்தித்துக்
கொண்டிருக்கிறேன்?" என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டு பார்ப்பதுதான்!
இந்த கேள்விக்கு "பணம்" என்பது 'உங்கள் விடையாக' இருக்குமென்றால், "பணமே
உங்கள் பொக்கிஷமாய்!" மாறிவிட்டது என்பதைக் கண்டு கொள்ளலாம்.
இதற்கு பதிலாய் "ஆண்டவரும் அவருடைய ஊழியமும்" 'உங்கள் விடையாய்'
வருமென்றால்...... உங்களுக்கு எவ்வளவுதான் பூமிக்குரிய ஆஸ்தி
அதிகமாயிருந்தாலும், "உங்கள் பொக்கிஷம் பரலோகத்தில் தான்
சேமிக்கப்பட்டிருக்கிறது" என்பதை நீங்கள் தீர்க்கமாய் நிச்சயப்படுத்திக்
கொள்ளலாம்!!
தமிழ் வடிவம் :
டி. ரத்தினகுமார்