அநேக கிறிஸ்தவர்கள் தசமபாகத்தைக் குறித்த விவகாரத்தில்
கஷ்டப்படுகிறர்கள். சில ஆலயங்களில் தசமபாகத்தை அதிகமாக கூறுகிறார்கள்.
அதே சமயம், அநேக கிறிஸ்தவர்கள், வேதத்தில் தசமபாகத்தைக் குறித்து கூறுவதை
ஏற்றுக் கொள்வதில்லை.
தசமபாகம் கொடுப்பது சந்தோஷமும், ஆசீர்வாதமும் ஆகும்.
ஆனால் சில ஆலயங்களில் இது கிடையாது என்பது வருந்தத்தக்கது.
தசமபாகம் கொடுத்தல் என்பது பழைய ஏற்பாட்டின் பிரமாணம். சட்டத்தின்படி,
இஸரவேலர்கள் தாங்கள் சம்பாதித்த எல்லாவற்றிலும் பத்தில் ஒரு பங்கு
தசமபாகமாக பலிபீடத்தில்/கோவிலுக்கு கொடுக்க வேண்டும் (லேவியராகமம் 27:30,
எண்ணாகமம் 18:26, உபாகமம் 14:24, 2 நாளாகமம் 31:5).
லேவியராகமம்
27 அதி
30. தேசத்திலே நிலத்தின் வித்திலும், விருட்சங்களின் கனியிலும், தசமபாகம்
எல்லாம்கர்த்தருக்குஉரியது; அதுகர்த்தருக்குப் பரிசுத்தமானது.
எண்ணாகமம்
18 அதி
26. நீ லேவியரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் புத்திரர்
கையில் வாங்கிக்கொள்ளும்படி நான் உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த
தசமபாகத்தை நீங்கள் அவர்கள் கையில் வாங்கும்போது, தசமபாகத்தில் பத்தில்
ஒரு பங்கைக்கர்த்தருக்குஏறெடுத்துப்படைக்கும் படைப்பாகச்
செலுத்தவேண்டும்.
உபாகமம்
14 அதி
24. உன் தேவனாகியகர்த்தர்உன்னை ஆசீர்வதிக்கும் காலத்தில், உன்
தேவனாகியகர்த்தர்தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொண்ட ஸ்தானம் உனக்கு
வெகு தூரமாயிருக்கிறதினால், வழிப்பிரயாணத்தின் வெகு தொலையினிமித்தம், நீ
அதைக் கொண்டுபோகக் கூடாதிருக்குமானால்,
II நாளாகமம்
31 அதி
5. இந்த வார்த்தை பிரசித்தமானபோது, இஸ்ரவேல் புத்திரர் தானியத்திலும்,
திராட்சரசத்திலும், எண்ணெயிலும், தேனிலும், நிலத்தின் எல்லா வரத்திலும்
முதற்பலன்களை திரளாகக்கொண்டுவந்து, சகலத்திலும் தசமபாகத்தைப்
பரிபூரணமாய்க் கொடுத்தார்கள்.
பழையேற்பாட்டின் சட்டப்படி, இந்த தசமபாகம் அநேக மடங்காய், அதாவது 23.3%
கொடுக்கப்பட வேண்டும்.
சில பழையேற்பாட்டில் சொல்லப்பட்ட இந்த தசமபாகம், ஆலயத்தை நடத்துகிற
ஊழியர்களுக்கும், அவர்கள் தேவைகளை சந்திப்பதற்கும் உதவுகிறது என
நினைக்கிறார்கள்.
ஆனால் புதியேற்பாட்டில், இந்த தசமபாகம் குறித்து எங்கும் கூறப்படவில்லை.
பரிசுத்த பவுல், விசுவாசிகள் தங்கள் வருமானத்தில் ஒரு தொகையை ஆலயத்தின்
உதவிகளுக்கு எடுத்து வைக்க வேண்டும் எனக் கூறுகிறார் (1 கொரிந்தியர்
16:1-2).
I கொரிந்தியர்
16 அதி
1. பரிசுத்தவான்களுக்காகச் சேர்க்கப்படும் தர்மப்பணத்தைக்குறித்து நான்
கலாத்தியா நாட்டுச் சபைகளுக்குப் பண்ணின திட்டத்தின்படியே நீங்களும்
செய்யுங்கள்.
2. நான் வந்திருக்கும்போது பணஞ்சேர்க்குதல் இராதபடிக்கு, உங்களில் அவனவன்
வாரத்தின் முதல்நாள்தோறும், தன்தன் வரவுக்குத் தக்கதாக எதையாகிலும்
தன்னிடத்திலே சேர்த்து வைக்கக்கடவன்.
புதியேற்பாட்டில் தசமபாகம்-அதாவது தன் வருமானத்தில் சில சதவீதம் எடுத்து
வைக்க வேண்டும் எனக் கூறவில்லை.
அதற்கு பதிலாக "வரவுக்கு தக்கதாக எதையாகிலும் தன்னிடத்தில் சேர்த்து
வைக்க வேண்டும்" (1 கொரிந்தியர் 16:2) எனக் கூறுகிறது. ஆனால் சில
கிறிஸ்தவ ஆலயங்கள் பழையேற்பாட்டில் கூறப்பட்ட 10% தத்தை
கடைபிடிக்கின்றார்கள். புதியேற்பாட்டில் கொடுப்பதின் முக்கியத்துவம்
கூறப்பட்டுள்ளது. சில நேரங்களில் அது 10% மேலாகவும், அல்லது அதற்கு
குறைவாகவும் இருக்கும். ஒவ்வொரு கிறிஸ்தவனும் தேவனிடம் தான் எவ்வளவு
தசமபாகம் கொடுக்க வேண்டும் (யாக்கோபு 1:5).
தசமபாகம் ஒரு நல்ல நோக்கத்தோடும், தேவனை ஆராதிப்பதிலும், கிறிஸ்துவின்
சரீரத்தை சேவையில் செய்ய வேண்டும்.
ஒவ்வொருவரும் தாம் விரும்பியதை கொடுப்பதோடு, கட்டாயத்தால் கொடுக்கலாகாது.
சந்தோஷத்தோடு கொடுப்பவர்களை தேவன் விரும்புகிறார் (2 கொரிந்தியர் 9:7).
II கொரிந்தியர்
9 அதி
7. அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே
கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன்
பிரியமாயிருக்கிறார்.