கிறிஸ்தவ ஞானஸ்னானத்தின் முக்கியத்துவம் என்ன? எனக்கு ஏன் ஞானஸ்நானம் தேவை?

வேத்த்தின்படி, கிறிஸ்தவ ஞானஸ்நானம் என்பது ஒரு விசுவாசியின்
வாழ்க்கையில், உள்ளத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் மூலம் வெளியில் சாட்சியாக
ஜூவிப்பது. ஒரு விசுவாசி கிறிஸ்துவின் மரணத்திலும், உயிர்த்தெழுதலிலும்
தன்னை ஒருங்கிணைத்துக் கொள்வது தான் கிறிஸ்தவ ஞானஸ்நானம். வேதம்
கூறுகிறது: நாம் ஞானஸ்நானம் பெறும் பொழுது, இயேசு கிறிஸ்துவின்
மரணத்திலும் ஞானஸ்நானம் பெறுகிறோம். எனவே, ஞானஸ்நானம் மூலம் கிறிஸ்துவோடு
மரித்தது மல்லாமல், அவரோடு அடக்கம்பண்ணப்பட்டு, அவர்
உயிர்த்தெழுந்ததுபோல் நாமும் புது மனிதர்களாக மாறுகிறோம். ஞானஸ்நானம்
பெற்ற நாமனைவரும், அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை
அறியாமலிருக்கிறீர்களா? தண்ணீரில் மூழ்குதல் என்பது பாவத்துக்காக
மரிப்பது.

அதுபோல தண்ணீரிலிருந்து வெளிவருவது கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் குறிக்கிறது.

ஒரு மனிதன் கிறிஸ்தவ ஞானஸ்நானம் பெற இரண்டு தேவைகள் உண்டு:

1. ஞானஸ்நானம் எடுக்க விரும்புகிறவன் இயேசு கிறஸ்துவை இரட்சகராக ஏற்றுக்
கொள்ள வேண்டும்

2. ஞானஸ்நானத்தின் முக்கியத்துவத்தை விளங்கி கொள்ள வேண்டும்

ஒருவன் இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக் கொண்டு, கிறிஸ்தவ
ஞானஸ்நானத்திற்கு கீழ்ப்படியும் பொழுது, அவன் இயேசு கிறிஸ்துமீதுள்ள
விசுவாசத்தை அனைவர் முன்னிலும் கூறும்பொழுது அவன் ஞானஸ்நானம் எடுக்க எந்த
தடையும் இல்லை. எனவே, வேதத்தின் பிரகாரம் ஒருவன் கிறிஸ்தவ
ஞானஸ்நானத்துக்கு கீழ்ப்படியும்பொழுது, அவன் கிறிஸ்துவின் மேலுள்ள
விசுவாசத்தை எல்லார் முன்பாகவும் அறிக்கையிட்டு, அவனை கிறிஸ்துவின்
மரணத்துக்கும், அடக்கம்ப்பண்ணப்படுதலுக்கும், உயிர்த்தெழுதலுக்கும்
இணைக்கப்பட்டிருக்கிறோம்.




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.