ஜெபத்தில் மனச்சிதறலை தவிர்ப்பது எப்படி?

தேவனது அனைத்து போராயுதங்களையும் பயன் படுத்துவதற்கான அடிப்படை வல்லமை,
ஜெபத்திலேயே உள்ளது (எபே.6:13-18).

எபேசியர்
6 அதிகாரம்

13. ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும்
செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய
சர்வாயுத வர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

14. சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும்
நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்;

15. சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக்
கால்களிலே தொடுத்தவர்களாயும்,

16. பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம்
அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும்
கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள்.

17. இரட்சணிய மென்னும் தலைச்சீராவையும், தேவவசனமாகிய ஆவியின்
பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

18. எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும்
ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல
பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்
கொண்டிருங்கள்.

எனவே நமது முழங்கால்களை முடமாக்கவும், சிந்தையைச் சிதறடிக்கவும் சத்துரு
தன்னாலான அத்தனையையும் செய்வான்.

அவனது மனத்தாக்குதல்களை எப்படி மேற்கொள்ளலாம் எனில் நமது மனம், ஆவி,
ஆத்துமா அத்தனையும் ஜெபத்தில் ஈடுபடுகின்றன.

~எப்போதும் ~இடைவிடாமல் ஜெப ஆவியைக் காத்துக் கொள்வதோடு மிகுந்த
புத்துணர்வோடிருக்கும் வேளையை ஜெபத்திற்காகத் தெரிந்துகொள்ளுங்கள்.

பிதாவோடு தனித்திருக்க இயேசு அடிக்கடி அதிகாலை வேளையைத் தெரிந்து கொண்டார்.

சூரியன் உதிக்கு முன் பல மணிநேரங்களை ஹட்சன் டெய்லர் தனித் தியானத்தில்
செலவிடுவாராம்.

நமது மனம், ஆவி, ஆத்துமா அத்தனையும் ஜெபத்தில் ஈடுபடுகின்றன. ஆகவே உடலும்
மனதும் களைத்திருக்கையில் ஜெபம் செய்வது அவ்வளவு சுலபமல்ல.

ஜெபமென்றால் கிருபாசனத்திற்கு செல்வதாம்.

கிறிஸ்துவின் இரத்தத்தினாலேயே அங்கு சேரும் சிலாக்கியம் நமக்கு கிடைத்தது.

அந்த இரத்தத்தின் அதிகாரத்தையும் வல்லமையையும் குறித்த தெளிவான நினைவு
சத்துருவின் சதிகளைச் சங்கரிக்கும்.

இரத்தத்தின் ஆசீர்வாதங்களை வாயினால் அறிக்கை யிடுகையில் அவன் நடுங்குவான்
(எபி.4:14-16@ வெளி.12:11).

எபிரெயர்
4 அதிகாரம்

14. வானங்களின் வழியாய்ப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு
என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறபடியினால், நாம் பண்ணின
அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கக்கடவோம்.

15. நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர்
நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும்,
பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.

16. ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில்
சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே
சேரக்கடவோம்.

வெளி
12 அதிகாரம்

11. மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும்
பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின்
வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்.

நமது ஜெபங்கள் துதியினால் பொதிந்திருக்க வேண்டும். தேவன் துதிகளின்
நடுவில் வாசம் பண்ணுகிறார் (சங்.22:3).

சங்கீதம்
22 அதிகாரம்

3. இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசமாயிருக்கிற தேவரீரே பரிசுத்தர்.

இவ்விதம் தேவபிரசன்னத்தை அதிகமதிகமாய் உணரும்போது, ஜெப ஆவியில் திளைத்து
விடுவதால், மனச்சிதறல் மேற்கொள்ளப்படும் (பிலி.4:6).

பிலிப்பியர்
4 அதிகாரம்

6. நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள்
விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும்
தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.

ஜெபத்தில் குறி இல்லாதிருக்கும்போது மனம் சிதறும்.

தெளிவான குறிப்புகள் வைத்து ஜெபியுங்கள். ஒரு பட்டியல் வைத்துக்கொண்டு
ஒவ்வொரு குறிப்புக்காய் ஜெபிப்பது நல்ல முறை.

ஜெபத்தில் கண்களை மூட வேதத்தில் எங்கும் கட்டளையில்லை. மறைந்த பக்தன்
'ஆஸ்வால்ட் ஸ்மித்" தனது ஜெப அறையில் அங்குமிங்கும் நடந்துகொண்டு சத்தமாக
ஜெபிப்பாராம்.

சத்தங்களும், சந்தடிகளும் இல்லாத ஓரிடத்தில் ஜெபத்திற்காய்த்
தெரிந்துகொள்ள வேண்டும். கதவைப் ப ட்டி ஜெபிக்க இயேசு கற்பித்தார். (மத்
6:6).

மத்தேயு
6 அதிகாரம்

6. நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன்
கதவைப்பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு;
அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப்
பலனளிப்பார்.

ஜெபம் ஓர் உரையாடல். திறந்த வேதத்தோடு ஜெபிப்பதை பயனுள்ளதாய்க் கண்டிருக்கிறேன்.

வாசித்து, ஜெபித்து, வாசித்து, ஜெபித்து... (தானி 9:1-3).

இத்தத்துவங்களையெல்லாம் பயிற்சித்தும் இன்னும் மனச் சிதறல் இருக்கலாம்.
ஆம், இது மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, சத்துருவின் ஆவிகளோடுள்ள
போராட்டமல்லவா? சிந்தையை சிதறடிக்க வரும் எண்ணத்தை உடனே சிறைப்பிடியுங்
கள். அதைச் சிந்திக்க நேரம் தரவேண்டாம்.

சத்துருவுக்கு எதிர்த்து நில்லுங்கள், ஓடிப்போவான். ~கிறிஸ்துவின்
நாமத்தில் என்பது ஜெபத்தின் துவக்கத்திற்கும் முடிவுக்குமான வெறும்
சொற்றொடர் அல்ல. அதுதான் ஜெபத்திற்கு அடித்தளமும் அதிகாரமுமாகும். இதை
ஜெப நேர முழுவதிலும் மறக்க வேண்டாம்.
பிதாவின் வலது பக்கத்தில் நமக்காய் ஜெபிக்க இயேசுவும், நமக்காய் மன்றாட
நமக்குள்ளேயே ஆவியானவரும் இருக்கையில் வெற்றி நமக்குத்தான் (ரோ.8:26).

நாம் விடாது உறுதியாயிருக்க வேண்டும். மீதியை தேவன் பார்த்துக்கொள்வார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.