1. அப்.மத்தேயு :
எத்தியோவ்பியாவில் சிறையாக்கி, அங்கே தறையோடு சேர்த்து ஆணி அடித்தனர்;
அதன்பிறகு தலைவெட்டப்பட்டு இரத்தசாட்சியாய் மரித்தார்.
2. அப்.சீமோன் பேதுரு :
ரோம் மாநகரில் சிலுவையில் அறையப்பட்டு இரத்தசாட்சியாய் மரித்தார்.
இயேசுவை போல மரிக்க தனக்கு தகுதி இல்லை, அதனால் என்னை தலைகீழாக
சிலுவையில் அறையுங்கள் என்று போர்சேவகாரை வேண்டிக்கொண்டார். அப்படியே
அறைந்தார்கள்.
3. அல்பேயுவின் குமாரன் அப்.யாக்கோபு :
தேவாலயத்திலிருந்து கீழே தூக்கி எறியப்பட்டு, பிறகு கற்களால் எறியுண்டு
இரத்தசாட்சியாய் மரித்தா.
4. செபதேயுவின் குமாரன் அப்.யாக்கோபு :
பாலஸ்தீனாவில் ஏரோது அகிரிப்பா 1 மன்னனால் ஏறக்குறைய கி.பி 44-வது ஆண்டு
சிறைச்சேதம் பண்ணப்பட்டு
இரத்தசாட்சியாய் மரித்தார்.
5. அப்.அந்திரேயா :
அக்காயா என்னப்படும் கிரேக்கப்பட்டணத்தில் ஒலிவ மரத்தினால் செய்யப்பட்டு
x வடிவிலான சிலுவையில் அறையப்பட்டு இரத்தசாட்சியாய் மரித்தார்.
6. அப்.பிலிப்பு :
டோமிட்டியன் காலத்தில் ஹீரப்போலிஸ் என்ற பட்டணத்தில் பேதுருவை போல
தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டு இரத்தசாட்சியாய் மரித்தார்.
7. அப்.பற்தொலொமேயு :
அர்மேனியாழில் உள்ள அல்லானும் என்னும் பட்டணத்தில் சவுக்கால்
அடிக்கப்பட்டு, பிறகு தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டு இரத்தசாட்சியாய்
மரித்தார்.
8. அப்.சீமோன் :
இவரை குறித்ததான சரியான ஆதாரம் இன்னும் கிடைக்கவில்லை இவரும் சிலுவையில்
இரத்தசாட்சியாய் மரித்தார் என்று கருதுகின்றனர்.
9. அப்.தோமா :
இந்தியாவிலுள்ள சென்னைப்பட்டணத்தில் ஈட்டியால் குத்தப்பட்டு
இரத்தசாட்சியாய் மரித்தார்.
10. அப்.ததேயு :
பெரிட்டஸ் என்ற இடத்தில் இரத்தசாட்சியாய் மரித்தார்.
11. அப்.யோவான் :
வயது முதிர்ந்து நல்லபடி மரித்த ஒரே அப்போஸ்தலர் இவரே ஆகும்.
12. அப்.மத்தியா :
யூதாஸ் காரியோத்துக்கு பதிலாக தெரிந்து கொள்ளப்பட்ட (அப் 1:26) இவர்
கற்களால் எறியுண்டு பிறகு சிறைச்சேதம் பண்ணப்பட்டு
இரத்தசாட்சியாய் மரித்தார்.
குறிப்பு : கிறிஸ்துவை காட்டிகொடுத்ததான யூதாஸ்காரியோத்து நான்று கொண்டு,
தலைகீழாக விழுந்து, வயிறும் வெடித்து செத்தான் (மத் 27:5; அப் 1:8)