Type Here to Get Search Results !

தேவனின் பண்புகள் யாவை?

முயற்சிக்கும் போது தேவனை குறித்த அனேக காரியங்களை அறிய முடியும். இதை
ஆராய்கிறவர்கள் இந்த விளக்கங்களை முழவதுமாய் கொடுக்கப்பட்டுள்ள வேத வசன
குறிப்புகளோடு ஒப்பிட்டு பாருங்கள் வேதாகம குறிப்பு
இன்றியமையாததாகும்.
வேதத்தின் ஆலோசனை இல்லாமல், மனிதனுடைய ஆலோசனை இருக்குமானால் அவைகள் வீண்.

ஆண்டவர் தன்னை வெளிப்படுத்துவது மற்றவர்கள் அறியும்வண்ணம் இருக்க
வேண்டும் என்று தன்மை தெரிந்து கொண்டார் தேவனின் பண்புகளில் ஒன்று "ஒளி"
தன்னைத் தானே வெளிப்படுத்தி காண்பித்தல் (ஏசா 60:19 யாக் 1:17) தன்னை
வெளிப்படுத்தின தேவனை புறக்கணியாமல் அவரை பற்றி அறிய முற்படுவோம் இயேசு
கிறிஸ்து தேவனைப் பற்றி அறிய தயை செய்வாராக.

முதலாவது தேவன் நம்மை படைத்தார் நாம் அவருடைய கரத்தின் கிரியைகள் என்பதை
அறிந்துகொள்வோம்
(ஆதி 1:11 சங். 24:1) தேவன் மனிதனை தன்னுடைய சாயலாக சிருஷ்டித்து அவருடைய
மற்ற படைப்புகளை ஆள அவனை வைத்தார் (ஆதி. 1:26-28) இந்த பரந்த படைப்பு
அதின் அழகு அதின் ஒழுங்குகள் ஆகியவற்றின் மூலம் தேவனுடைய பண்புகளை நாம்
காணமுடியும். தேவன் எப்படிப்பட்டவர் என்பதை ஆராய்ச்சி செய்யும் நமக்கு
கீழே கொடுக்கபட்டுள்ள தேவனுடைய சில பெயர்கள் நமக்கு உதவியாக இருக்கும்.

ஏலோஹிம் -
வல்லமையுள்ளவர் (ஆதி:1:1)

அடோனாய் கர்த்தர் (எஜமானுக்கும் வேலைகாரனுக்கம் உள்ள உறவை காட்டுகிறது)
(யாத். 4:10,13)

எல்எலியோன் - உன்னதமான தேவன் (ஆதி. 14:20)

எல்ரோன் - காண்கிற தேவன் (ஆதி 16:13)

எல்ஷடாய் - சர்வவல்லவர்
(ஆதி17:1)

எல்ஹோலம் - அநாதி தேவன் (ஏசா 40:28)

யாவே - கர்த்தர் நானே
(யாத் 3:13,14)
இருக்கிறவராகவே இருக்கிறேன் நாம் ஆண்டவருடைய பண்புகளைப் பார்ப்போம்

அவர் நித்தியமானவர்.

அப்படியானால் அவருக்கு துவக்கமும் இல்லை முடிவும் இல்லை. அவருக்கு அழிவில்லை.
அவரை அளவிடமுடியாது
(உபா 33:27) (சங் 90:2)
(தீமோ. 1:17)

அவர் மாறாதவர் (மல் 3:6) (எண்.23:19) (சங். 102:26-27)

அவர் எங்கும் நிறைந்தவர்.

எங்கும் நிறைந்தவர் என்பதினாலே எல்லாமே தேவனல்ல (சங்.139:7-13,
எரே 23:23)

அவர் எல்லாம் அறிந்தவர்

நம்முடைய கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் நம்முடைய சிந்தனைகள்
எல்லாவற்றையும் அறிந்தவர் (சங் 139:1-5, நீதி 5:21)

தேவன் ஒருவரே, அவரையன்று வேறு தேவனல்ல, அவர் ஒருவரே பாத்திரர் (உபா. 6:4)
தேவன் நீதியுள்ளவர், தவறான காரியங்களை விரும்பாதவர்.
ஆவருடைள நீதியும், நியாயமும் நம்முடைய பாவங்களை மன்னிப்பதற்கே! இயேசு
கிறிஸ்துவும் நம்முடைய பாவங்களுக்காய் தேவனுடைய நியாயத்தீர்ப்பை
சந்தித்தார் (யாத் 9:27,
மத்.27:45இ46, ரோ 3:21-26)

தேவன் பேரரசர், அவர் உன்னதமானவர், அவர் செய்கின்ற காரியங்களுக்கு நாம்
இடையுராய் இருக்க முடியாது (சங் 93:1, சங். 95:3, எரே 23:20)

தேவன் ஆவியாய் இருக்கிறார். அவரை நாம் காணமுடியாது
(யோவான் 1:18, 4:24)

தேவன் திரித்துவமுள்ளவர். திருத்துவம் என்றால் மூவரில் ஒருவர். மகிமையில,
வல்லமையில் சமமானவர்கள், கருத்தில் ஒன்றுபட்டவர்கள், பெயரில் "ஒருமை".
"ஒருமை" என்பது தன்மையில் மூன்று பேரும் வேறுபட்டவர்கள்
என்பதைக்காட்டுகிறது. பிதா, குமாரன், பரிசுத்த ஆவி
(மத் 28:19 மாற் 1:9-11).

தேவன் சத்தியமுள்ளவர், அவர் பொய்சொல்கிறவர் அல்ல, அவர் கறைபடாதவர் (சங்
117:2, 1சாமு 15:29)

தேவன் பரிசுத்தமானவர். ஆவர் அநீதீக்கு விலகுகிறவரும். அதை
வெறுக்கிறவருமாய் இருக்கிறார். அவர் தீமையைக்கண்டு கோபம் கொள்கிற தேவன்.
வேதத்திலே அக்கினியானது பரிசுத்த ஆவியோடு ஒப்பிட்டு
சொல்லப்பட்டிருக்கிறது. தேவன் பட்சிக்கிற அக்கினியாய் இருக்கிறார். (ஏசா
6:3) (ஆபகூக் 1:13,
யாத் 3:2-5, எபி 12:29)

'தேவன் கிருபை உள்ளவர்" என்ற வார்த்தையானது அவருடைய அன்பு, தயவு, கருணை,
நற்குணங்கள் போன்றவைகளோடு ஒருங்கிணைந்த வார்த்தையாகும். ஆவர் கிருபை
உள்ளவராக இல்லை என்றால், அவருடைய பண்புகள் நம்மை அவரை விட்டு
விலக்கியிருக்கும். ஆனால் அப்படி ஒன்றும் நிகழாமல் நாம் ஒவ்வொருவரையும்
தனிப்பட்ட முறையிலே அறிய வேண்டுமென்று தேவன் விரும்புகிறார் (யாத் 34:6
சங் 31:19, யோவா3:16, 17:3).

Post a Comment

0 Comments