சீடர்கள்
விண்ணப்பித்துக்கொண்டும் தியானித்துக்கொண்டும் இருக்கும்போது,
நீதியுள்ளவராகிய கிறிஸ்துவை வஞ்சகமான முறையில் அநீதியுள்ளவர்களுடைய
கையில்
ஒப்புக்கொடுத்து, இறைவனுடைய எதிரிகளின் வழிகாட்டியாக மாறிய யூதாஸின்
முடிவைப்பற்றி சிந்தித்திருப்பார்கள்.
இயேசுவோடு அவர்கள் ஐக்கியத்திலிருந்த காலத்தில் யூதாúஸôடு அவர்கள்
செலவிட்ட நாட்களை நினைத்துப் பார்த்தார்கள். யூதாஸ் இறைவனுடைய அரசின்
உள்ளான அங்கத்தவராயிருந்தார். கர்த்தரால் அவர் அழைப்பையும், ஒரு
பதவியையும்,
அதிகாரத்தையும் பெற்றிருந்தார். ஒரு காலகட்டத்தில் அவர் மற்ற சீடர்களுடன்
சேர்ந்து இறைவனுக்கு சேவை செய்தார்.
ஆனால் யூதாஸ பணத்தையே நேசித்து, லூக்கா சொல்வதைப் போல அநீதத்தின் கூலியை
நாடிச் சோரம்போனான். பாதிப்புக்குள்ளான தன்னுடைய ஆத்துமாவிற்கு
பாதுகாப்பு வேண்டி, நகரத்திற்கு வெளியே ஒரு நிலத்தை வாங்கினான். ஆனால்
இறைவனுடைய சாட்டையடி அவனது மனசாட்சியைக் காயப்படுத்தியிருந்த
காரணத்தினால், அவனால் அமைதியாக இருக்க முடியவில்லை. பிசாசும் தொடர்ந்து
அவனைக் குற்றஞ்சாட்டிக்கொண்டிருந்த காரணத்தினால் அவன் நம்பிக்கை
இழந்தவனானான்.
ஆகவே அவன் ஓடிப்போய் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டான். அவன் தூக்கில்
தொங்கிய கயிறு அறுந்தபடியால் அவன் ஒரு கூர்மையான பாறையின் மேல் விழுந்து
அவனுடைய குடல்கள் எல்லாம் வெளியேறியது. இப்படிப்பட்ட நிகழ்வு எவ்வாறு
இருந்திருக்கும் என்பதை மருத்துவராயிருந்த லூக்காவினால் யோசித்து எழுத
முடிந்தது.
எருசலேமில் இருந்த அனைவரும் அவனுடைய மரணத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு,
அது இறைவனுடைய கோபத்தினால் துரோகிக்கு கொடுக்கப்பட்ட தண்டனைதான் என்பதை
உணர்ந்துகொண்டார்கள். இவ்வாறு சபிக்கப்பட்ட மனிதனுடைய இரத்தம்படிந்த
நிலத்தைவிட்டு அவர்கள் விலகியிருந்தார்கள்.
யூதாஸ் தன்னைக் காட்டிக்கொடுப்பான் என்பதை கிறிஸ்து ஏற்கனவே அறிந்திருந்த
காரணத்தினால் தம்முடைய பிரசங்களில் பலமுறை அவனை எச்சரித்திருக்கிறார்.
ஆனால் தன்னுடைய வாழ்க்கையைக் காத்துக்கொள்வதற்கு உயிருள்ள கர்த்தருடைய
வல்லமையைக் காட்டிலும் பணத்தின் வல்லமையையே அவன் அதிகமாக
நம்பியிருந்தான். அதனால் அவன் தன்னுடைய பரலோக இடத்தையும் பூமியின்
இடத்தையும் இழந்து போனான். அவனுடைய அப்போஸ்தல பணி இன்னொருவருக்குக்
கொடுக்கப்பட்டது. அவன் புதிதாக வாங்கியிருந்த வீடு பாழாய்ப்போனது. அதன்
சுவர்கள் இடிந்துபோய், அங்கே வெளவால்கள் குடிகொண்டன.
கடைசி இரவு உணவு வேளையில் இயேசு அவர்கள் ஒருவன் தன்னைக்
காட்டிக்கொடுப்பான் என்று சொன்னபோது அவர்கள் யார் என்பதை
அறியாதிருந்தார்கள். ஒவ்வொரு சீடருமே தாங்கள் அதற்குப் பொருத்தமானவர்களா
என்று
எண்ணிப்பார்த்தார்கள்.
ஆனால் காட்டிக்கொடுப்பவனுடைய வழியை
இறைவனுடைய ஆவியானவர்
முன்னறிந்திருந்தார் என்பதை தங்கள் கூட்டு விண்ணப்பத்தின் போது
உணர்ந்துகொண்டார்கள்.
இந்தத் துரோகியைக் காட்டிக்கொடுக்கும் பாவத்தைச் செய்யும்படி பரிசுத்தமான
இறைவன் வழிநடத்தவில்லை. காரணம் ஒவ்வொரு மனிதனுக்கும் அவர் சுயாதீன
சித்தத்தைக் கொடுத்திருக்கிறார். எந்த மனிதனும் தன்னுடைய சுயாதீன
சித்தத்தை மீறிப் பாவம் செய்யும்படி வற்புறுத்தப்படுவதில்லை.
யூதாஸ் கிறிஸ்துவின் அன்பை உணராமல் தன்னுடைய இருதயத்தைக்
கடினப்படுத்தினார். அதன் விளைவாக இறைவனுடைய சாபத்திற்குக் கீழாக
இறந்துபோனான். இதைத்தான் ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகவே தாவீதின்
மூலமாகப் பரிசுத்த ஆவியானவர்
சொல்லியிருந்தார் (சங்கீதம் 69:26; 109:8).
அன்பான சகோதரனே பரிசுத்த ஆவியின் செயலுக்கு உங்கள் இருதயத்தைக்
கடினப்படுத்தாதீர்கள். அவர் உங்களை பண
ஆசையிலிருந்து விடுவித்து, தியாகத்தோடு அவருக்குச் சேவைசெய்யும்படி
வழிநடத்த அவருக்கு இடம்கொடுங்கள். பணத்தையோ, மதிப்பையோ, அந்தஸ்தையோ,
அதிகாரத்தையோ உங்களுக்கு நீங்கள் தேடாதீர்கள்.
தாழ்மையையும், திருப்தியையும், சாந்தத்தையும், எளிமையையும் நாடுங்கள்.
பொருளாதாரத்தில் ஏழையாகவும் பரிசுத்த ஆவியில் ஐசுவரியராகவும் இவ்வாறுதான்
கிறிஸ்து தம்முடைய சீடர்கள் நடுவில் வாழ்ந்தார்.