008 -- அப்போஸ்தலர் 01:21-26 (தொடர்ச்சி.....)

பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்படுவதற்கு முன்பாக இறைவனுடைய சித்தத்தைக்
கண்டுபிடிப்பதற்காக சீட்டுப் போட்டார்கள். அதன்பிறகு, அவர்கள்
உதவிக்காரர்களைத் தெரிவுசெய்யும்போது, அப்போஸ்தலர்களே திருச்சபையை
வழிநடத்தினார்கள்.

அவ்விதமாகவே அந்தியோக்கியாவிலும் மூப்பர்கள்
விண்ணப்பத்தோடும் உபவாசத்தோடும் கிறிஸ்துவின் வழிநடத்துதலை நாடியபோது,
பரிசுத்த ஆவியானவரே பவுலையும் பர்னபாவையும் தெரிவுசெய்து அனுப்பினார்.
உண்மையில் அப்போஸ்தலர்களுடைய வரலாறு கிறிஸ்துவினுடைய வரலாறாகவே
இருக்கிறது.

அது இறைவனுடைய அரசை விரிவுபடுத்துவதற்கான அவருடைய செயல்பாடுகளின்
வரலாறாகும். நாம் போப்பின் அதிகாரத்திற்கு கீழாகவோ, ஜனநாயக அரசியலுக்குக்
கீழாகவோ, சோசலிச சர்வாதிகாரத்திற்குக் கீழாகவோ இல்லை. மாறாக நாம்
கிறிஸ்துவின் ஆளுகைக்கும்
வழிநடத்துதலுக்கும் கீழாக இருக்கிறோம். அவருடைய வல்லமை விசுவாசிகளுடைய
இருதயத்தில் செயல்படும் பரிசுத்த ஆவியானவரினால் உணரப்படுகிறது.

மூப்பர்கள், உதவிக்காரர்கள் மற்றும் அவர்களுக்கு துணையாயிருப்பவர்களிடம்
நாம் பொறுப்புகளை ஒப்படைப்பது நல்லது. நம்முடைய அறிவையோ, சித்தத்தையோ,
குடும்பத் தகுதிகளையோ நாம் சார்ந்திராமல் இறைவனை விண்ணப்பத்தில்
சார்ந்திருக்க வேண்டும். இயேசுவே திருச்சபைத் தலைவர்களை அவர்களுடைய
செல்வம், திறமைகள் மற்றும் சமூக அந்தஸ்து ஆகியவற்றின் அடிப்படையில்
தேர்ந்தெடுக்காமல் தம்முடைய சொந்த விருப்பத்தின்படி தேர்ந்தெடுக்க
வேண்டும் என்று நாம் எப்போதும் விண்ணப்பிக்க வேண்டும்.

அப்போது மட்டுமே கர்த்தருடைய பணி நிறைவேறும், அவருடைய பணியாளர்கள்
பரிசுத்த ஆவியானவரினால் நிரப்பப்படுவார்கள். ஒரு ஆசாரியனுடைய, மூப்பருடைய
அல்லது பிஷப்பினுடைய வெற்றியானது அவருடைய இறையியல் பட்டத்திலோ,
அவருக்கும் மற்ற உயர்வகுப்பினருக்கும் இடையிலுள்ள தொடர்பிலோ
சார்ந்திராமல், அவருக்கும் கிறிஸ்துவுக்கும் இடையிலான தொடர்பிலும்,
அவருடைய நேரடியான அழைப்பிலுமே சார்ந்திருக்கிறது. இந்த அழைப்பைப்
பெற்றுக்கொள்ளாமல், இறைவனுடைய ஊழியத்தில் ஈடுபடுபவர்கள் சடுதியில்
நரகத்திற்குச் செல்லும் ஆபத்திற்கு
உட்பட்டவர்க
ளாயிருக்கிறார்கள்.

பன்னிரெண்டு
அப்போஸ்தலர்களும் கிறிஸ்துவின் சேவையை தங்களுடைய விருப்பத்தின்
பகிர்ந்துகொடுக்கவில்லை. யாருமே மனிதர்களுடைய இருதயத்தையும்,
மனநிலைகளையும், தாலந்துகளையும், மனிதர்களுடைய உண்மைத் தன்மையையும்
அறியமுடியாது என்பதை நன்கு உணர்ந்திருந்தார்கள்.

நூற்றியிருபது சகோதர்கள் ஒருமித்துக்கூடி, தங்களில் ஒருவரை இந்தக்
கிருபையின் சேவைக்காக கர்த்தர் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் அதற்கான
வல்லமையை அவருக்குக் கொடுக்க வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டார்கள்.
நற்செய்திப் பணியாளர்களை நியமிப்பதில் இறைமைந்தன் இடைப்படாவிட்டால்
அனைத்துப் பணிகளும் பயனற்றதாகவே போய்விடும்.
அந்தப் பணிக்காக அவர்கள் இரண்டுபேரைத் தெரிவுசெய்தார்கள். சம அளவு தகுதி
வாய்ந்த இந்த இரண்டுபேரைப் பற்றிய மற்ற விவரங்கள் நமக்குத் தெரியாது.
அவர்களில் ஒருவரைத் தெரிவு செய்வதற்கு எவ்விதமாக சீட்டுப் போட்டார்கள்
என்பதும் நமக்குத் தெரியாது. தெரிந்துகொள்ளப்பட்டவர் முதலாவது நபர் அல்ல.

அறியப்படாத மத்தியா என்பவரே தெரிவு செய்யப்பட்டார். அவர்தான் புதிய
அப்போஸ்தலனாக இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். சில நாட்களுக்குள்ளாகவே
கிறிஸ்து அவரையும் பரிசுத்த ஆவியானவரினால் நிறைத்து, அவருடைய அழைப்பை
உறுதிப்படுத்தினார். தெரிந்துகொள்ளப்பட்ட மத்தியாவைப் பற்றிய வேறு தகவல்
எதுவும் நமக்குத் தெரியாது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.