கடைசி காலங்களைக் குறித்து வேதாகமத்தில் நிறைய காரியங்கள் உள்ளது.
வேதாகமத்தின் ஒவ்வொரு புஸ்தகத்திலுமே கடைசி காலங்களைக் குறித்த
தீர்க்தரிசனம் உள்ளது.
எல்லாத் தீர்க்தரிசனங்களையும் எடுத்து ஒருங்கிணைப்பது சிரமாக இருக்கலாம்.
வேதாகமம் கடைசிகாலங்களில் என்ன சம்பவிக்கும் என்பதன் சுருக்கமான
கருத்துக்களைப் பார்ப்போம்.
கிறிஸ்து மறுபடியும் பிறந்த எல்லா விசுவாசிகளையும் இரகசிய வருகை என்ற
நிகழ்வு மூலம் எடுத்து விடுவார். (தெசலோனிக்கியர் 4:13-18,
Iகொரிந்தியர்15:51-54).
கிறிஸ்துவின் நியாயத்தீர்ப்பின் சிங்காசனத்திலிருந்து, இந்த
விசுவாசிகளுக்கு தாங்கள் பூமியில் இருந்தபோது செய்த நற்கிரியைகளுக்கு
உண்மையுள்ள ஊழியத்திற்கும் வெகுமதி அளிக்கப்படும் அல்லது அளிக்கப்படாது.
ஊழியம் செய்யாததற்கும் கீழ்படியாமைக்கும் அவர் வெகுமதியை இழப்பார்கள் .
ஆனால் நித்திய ஜீவனை அல்ல. ( Iகொரிந்தியர் 3:11-15, 2கொரிந்தியர் 5:10).
அந்திகிறிஸ்து அதிகாரத்தில் வந்து இஸ்ரவேலோடு 7 வருடங்களுக்கு ஒரு
ஒப்பந்தத்தை கையெழுத்திடுவான். (தானியேல் 9:27). இந்த 7 ஆண்டு காலமே
'உபத்திரவக்காலம்'. இந்த உபத்திரவ காலத்தின்போது கொடுமையான யுத்தங்களும்,
பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், இயற்கை சீற்றங்களும் இருக்கும்.
தேவன் பாவம், தீமை பொல்லாங்குக்கு விரோதமாக தன்னுடைய கோபாக்கினையை
கொட்டுவார். இந்த உபத்திரவக் காலம் 'அபோகாலிம்ஸின் நான்கு குதிரைகளையும்
7 முத்திரைகளையும் 7 எக்காளங்களையம், நியாயத்திர்ப்பின் பாத்திரமும்
உள்ளடங்கும்.
அந்திகிறிஸ்து அந்த ஏழு வருடங்களின் நடுவில் தன்னுடைய சமாதான ஒப்பந்தத்தை
உடைத்து இஸ்ரேலோடு யுத்தம் பண்ணுவான்.
அந்திகிறிஸ்து ''பாழாக்கும் அறுவெறுப்பை'' செய்து, தன்னுடைய சுரூபத்தை
ஆராதிக்கும்படி எருசலேமின் ஆலயத்தில் வைப்பான். (தானியேல் 9:27, 2
தெசலோனேக்கியர் 2:3-10) ஆலயம் மீண்டும் அதற்குள் கட்டப்பட்டிருக்கும்.
உபத்திரவ காலத்தின் இரண்டாவது பாதியை 'மகா உபத்திரவக்காலம்'
(வெளிப்படுத்தின் விசேஷம் 7:14) மற்றும் 'யாக்கோபுக்கு இக்கட்டுக்காலம்'
என்று அறியப்படும். (எரேமியா 30:7)
ஏழுவருட உபத்திரவத்திற்குப் பிறகு, அந்திகிறிஸ்து எருசலேம் மீது ஒரு
கடைசித் தாக்குதலை நடத்துவான். அது அர்மெகெடான் யுத்தத்தில் முடியும்.
இயேசு கிறிஸ்து திரும்ப வந்து அந்தி கிறிஸ்துவையும் அவனுடைய படைகளையும்
அழித்து, அக்கினிக் கடலிலே தள்ளுவார் (வெளிப்படுத்தின் விசேஷம்
19:11-21).
அந்த ஆயிரவருட அரசாட்சியின் முடிவில், சாத்தான் விடுவிக்கப்பட்டு,
மறுபடியம் தோற்கடிக்கப்பட்டு அக்கினி கடலிலே நித்தியத்திற்கும்
தள்ளப்படுவான். (வெளிப்படுத்தின விசேஷம் 20:7-10).
கிறிஜ்து எல்லா அவிசுவாசிகளையும் வெள்ளை சிங்காசன நியாத்தீர்ப்பில்
நியாயந்தீர்த்து அக்கினிக் கடலிலே தள்ளுவார். (வெளிப்படுத்தின விசேஷம்
20:10-15).
கிறிஸ்து விசுவாசிகளின் நித்திய தங்குமிடமான புதிய வானத்தைம் புதிய
பூமியையும், புதிய எருசலேமையும் உருவாக்குவார். இங்கு பாவம், துயரம்,
மரணம் இருக்காது(வெளிப்படுத்தின விசேஷம் 21-22).