அப்போஸ்தலர் 1:13-14
13 அவர்கள் அங்கே
வந்தபோது மேல்வீட்டில்
ஏறினார்கள்; அதில்
பேதுருவும்,
யாக்கோபும்,
யோவானும்,
அந்திரேயாவும்,
பிலிப்பும்,
தோமாவும்,
பர்த்தொலொமேயும்,
மத்தேயும்,
அல்பேயுவின்
குமாரனாகிய
யாக்கோபும்,
செலோத்தே என்னப்பட்ட
சீமோனும்,
யாக்கோபின்
சகோதரனாகிய
யூதாவும்
தங்கியிருந்தார்கள். 14
அங்கே
இவர்களெல்லாரும்,
ஸ்திரீகளோடும்
இயேசுவின் தாயாகிய
மரியாளோடும்,
அவருடைய
சகோதரரோடுங்கூட
ஒருமனப்பட்டு,
ஜெபத்திலும்
வேண்டுதலிலும்
தரித்திருந்தார்கள்.
இயேசு தம்முடைய சீடர்கள்
உலகம் முழுவதும் செல்ல
வேண்டும் என்று
கட்டளையிட்டார். அவர்கள்
இந்தப் பணியைச்
செய்யும்படி அவர்கள்
தங்கள் சொந்த பெலத்தை
நம்பிப் புறப்படவில்லை
என்பது எவ்வளவு
அற்புதமான ஒன்றாகும்.
மேலும் அவர்கள் வெறும்
மனித வார்த்தைகளைப்
பேசிக்கொண்டும் அவர்கள்
புறப்பட்டுச்
செல்லவில்லை. அவர்கள்
விண்ணப்பிப்பதற்காக ஒரு
தனி இடத்தில் ஒதுங்கி,
பிதாவினுடைய
வாக்குத்தத்தம்
நிறைவேறும்வரை
காத்திருந்ததன்
மூலமாகவே
கிறிஸ்துவின் இரண்டாம்
கட்டளையை நிறைவேற்ற
விளைந்தார்கள். உலகத்தின்
நிலை பயங்கரமானது,
பாவத்தில்
மரணமடைந்திருப்பவர்களி
ன் எண்ணிக்கை
பெருவெள்ளத்தைப்
போன்றது. தங்கள் சுய
ஞானத்தில்
இவ்வுலகத்திற்குப்
பிரசங்கிக்கச்
செல்கிறவர்களுடைய கதி
பயங்கரமானது. அவர்கள் அந்த
வெள்ளத்திலே
மூழ்கிப்போய்விடுவார்க
ள். உங்களுடைய தனிப்பட்ட
திறமையினாலேயோ
யுக்தியினாலேயோ
நீங்கள் யாரையாவது
மாற்றிவிடலாம் என்றோ,
கிறிஸ்துவிடம்
வழிநடத்திவிடலாம்
என்றோ
சிந்தித்துவிடாதீர்கள்.
அமைதியாயிருந்து
விண்ணப்பம் செய்யுங்கள்.
கடவுள்
செயல்படுவதற்காகக்
காத்திருங்கள்.
அப்போஸ்தலருடைய
நடபடிகள்
விண்ணப்பத்தில்தான்
ஆரம்பமாகிறது, பெரிய
வார்த்தை ஜாலங்களில்
ஆரம்பிக்கவில்லை
என்பதை
மறந்துவிடாதீர்கள்.
கிறிஸ்துவினுடைய
சீடர்களின் முதல்பணி
காத்திருந்து
விண்ணப்பம்பண்ணுவதே.
தங்களுடைய
திறமையினால்
எதையும் செய்ய
முடியாது என்று
அவர்கள்
அறிந்திருந்தார்கள்.
ஏனெனில் மனிதர்கள்
அனைவரும்
வழுவிப்போகக்கூடியவர்
களாயிருக்கிறார்கள்.
ஆனால் இறைவனால்
தெரிந்துகொள்ளப்பட்ட
உண்மையான மனிதன்
மட்டுமே நமக்காகப்
போராடுகிறார்.
உண்மையான
வெற்றியாளர் யார்
என்பதை நீங்கள்
அறிவீர்களா? அவருடைய
பெயர் இயேசு கிறிஸ்து.
அவர் மட்டுமே
இரட்சிக்கிறவர், மீட்கிறவர்,
வெற்றி பெறுகிறவர்.
நாம் அவருடைய
அடிச்சுவடுகளைப்
பின்பற்றி அவருடைய
வெற்றியையே
சாட்சியிடுகிறோம்.
அவருடைய சீடர்கள்
இவ்வுலகத்தை விட்டு
தனித்திருக்கும்படி
குகைகளை நோக்கியோ
அல்லது வனாந்தரத்தை
நோக்கியோ
சென்றுவிடவில்லை.
அவர்கள் மனமுடைந்த
நிலையில்
இவ்வுலகத்தின்
அறியக்கூடாத
இரகசியங்களைத்
தியானிக்கும்படி
சென்றுவிடவோ அல்லது
தீமைநிறைந்த
இவ்வுலகத்தை வெறுத்து
ஒதுக்கவோ அவர்கள்
முற்படவில்லை. அவர்கள்
ஒன்றாகக் கூடி
விண்ணப்பம் செய்தார்கள்.
ஐக்கியத்திற்கும்
விண்ணப்பத்திற்கும்
அவர்கள் தொடர்ச்சியாகத்
தங்களை
ஒப்புக்கொடுத்தார்கள்.
பொதுவான
விண்ணப்பமே
அவர்களுடைய ஒன்று
கூடுதலின்
பொருளாயிருந்தது.
அவர்களே தங்கள் வாழ்வில்
அனுபவித்திருந்த
இயேசுவின்
செயல்களுக்காக அவர்கள்
இறைவனைத்
துதித்தார்கள். அவர்கள்
தங்கள் தோல்விகளை
உணர்ந்து, உண்மையாகவே
அவற்றிலிருந்து
மனந்திரும்பி, தங்கள்
அனுபவங்களையும்
எதிர்பார்ப்புகளையும்
குறித்து விண்ணப்பம்
செய்தார்கள். அவர்கள்
வாழ்விலிருந்த
கவலைகளை தங்கள் பரலோக
தகப்பனிடத்தில் எடுத்துச்
சொல்லி, தங்கள்
பாவங்களை
அறிக்கையிட்டு,
அவருக்கு நன்றி
செலுத்திக் கெஞ்சி,
விண்ணப்பம் செய்தார்கள்.
விண்ணப்பம்தான்
அவர்களுடைய முக்கிய
தொழிலாகவும்,
வாழ்வாதாரமாகவும்,
முயற்சியாகவும்
இருந்தது.
மேலறை அவர்கள் வழக்கமாக
கூடிவரும் இடமாக
இருந்திருக்கலாம். அது
இயேசு தம்முடைய
சீடர்களுடன் தம்முடைய
கடைசி இரவு
உணவருந்திய இடமாகவும்
இருக்கலாம். அவர்கள்
அவ்வாறு உணவருந்திய
போது அந்த அப்பம்
அவர்களுடைய
வயிற்றிற்குள்
செல்லும்போது அவர்
அவர்களில் வாழ்கிறார்
என்றும் திராட்சைரசம்
அவர்களுடைய
நரம்புகளில்
பாயும்போது
அவருடைய இரத்தம்
அவர்களை முழுமையாக
சுத்திகரிக்கிறது
என்றும் அவர்
சொல்லியிருந்தார்.
அவர்கள் அவரை மையமாகக்
கொண்டு வாழ்வதன்
மூலமாக அவர்கள்
முழுவதுமாகப்
புதுப்பிக்கப்பட
வேண்டியவர்களாயிருந்த
ார்கள்.
கிறிஸ்துவோடு
புதிய
உடன்படிக்கையினால்
இணைக்கப்பட்டவர்களாக, இந்த
பரிசுத்த இடத்தில்
நடைபெறும் கூட்டத்தில்
தொடர்ந்து பங்கு பெறும்
இவர்கள் யார்? முதலாவதாக
நாம் பேதுருவை
அடையாளம்
காண்கிறோம். அவர் ஒரு
தீவிரமான மீனவர். அவர்
மூன்று முறை
கிறிஸ்துவை
மறுதலித்திருந்தாலும்,
கலிலேயாக் கடற்கரையில்
கிறிஸ்துவை மீண்டும்
சந்தித்ததன் மூலமாக
பாவமன்னிப்பைப்
பெற்றுக்கொண்டவர்.
இரண்டாவதாக நாம்
அடையாளம் காணும்
வாலிபன்,
சாந்தமுள்ளவனும்,
அமைதியும்
மென்மையான
குணமுமுடைய
சீடனாகிய யோவான். அவர்
இயேசுவின் மார்பில்
சாய்ந்திருந்தார். அவர்
கர்த்தருடைய மகிமையைப்
பார்த்தவராகவும் அதைப்
பற்றி மற்ற எவரையும்விட
அதிகமாக
சாட்சியிடுபவராகவும்
இருக்கிறார். அங்கு
விண்ணப்பித்துக்கொண்டி
ருப்பவர்களில், நாம்
அடுத்ததாக அடையாளம்
காண்பது யாக்கோபு
என்னும் சீடரையே. அவர்
யோவானுடைய
சகோதரனாகவும்
ஒருமுறை கிறிஸ்து
தம்முடைய அரசை
நிறுவும்போது
அவருடைய வலது
பக்கத்தில் அமர வேண்டும்
என்று விரும்பியவர்.
பின்னாட்களில் அவர்தான்
தங்கள் மரணத்தின் மூலமாக
கிறிஸ்துவை
மகிமைப்படுத்திய இரத்த
சாட்சிகளில் முதலாவது
இடத்தைப் பெற்றவர். இந்த
யாக்கோபு
அந்திரேயாவின்
நண்பராவார். அந்திரேயா
அனைத்து சீடர்களுக்கும்
முன்பாகவே இயேசுவை
விசுவாசித்தவரும்,
உடனடியாக தம்முடைய
நண்பராகிய பேதுருவை
கிறிஸ்துவினிடத்தில்
வழிநடத்தியவருமாகிய
முக்கிய சீடராவார்
(யோவான் 1:40-41). இன்னும்
விண்ணப்பித்துக்
கொண்டிருப்பவர்களில்
பிலிப்புவையும் நாம்
காணலாம். அவர்
இயேசுவின் ஆரம்ப கால
சீடர்களில் ஒருவராக,
இயேசுவினால்
கண்டுபிடிக்கப்பட்டு,
"என்னைப் பின்பற்றி வா"
என்ற கட்டளையை
இயேசுவினிடத்தில்
பெற்றவர் இவர் (யோவான்
1:43-45). அவர்
பர்தலொமேயு என்று
அழைக்கபட்ட நத்தான்வேலை
உடனடியாகத் தேடி
இயேசுவிடம்
அழைத்துக்கொண்டு
வந்தார். அவர் அத்திமரத்தின்
கீழ் அமர்ந்திருக்கும்
போதே இயேசு அவரை
அறிந்திருந்தார் என்பதை
அறிந்தபோது
தன்னுடைய இருதயத்தை
அவரிடம் ஊற்றிவிட்டார்.
அதுமுதல் அவரும்
அவருடனிருந்த சக
சீடர்களும் மனுமகன் மீது
தேவதூதர்கள்
ஏறுகிறதையும்
இறங்குகிறதையும்
காணக்கூடிய
பாக்கியத்தைப்
பெற்றார்கள்.
கலிலேயாவிலிருந்த
பெத்சாயிதாவைச் சேர்ந்த
இந்த ஆறு சீடர்களைத் தவிர,
தோமாவும்
பிரச்சனைகளிலிருந்து
தப்பிக்கும்படி
அவர்களோடிருப்பதை
நாம் காணலாம். முன்பு
நம்பிக்கையற்றிருந்த இந்த
சீடர், இயேசுவைக்
குறித்து சந்தேகக்
கேள்வியைக் கேட்டதால்,
மற்ற அனைத்து சீடர்களைக்
காட்டிலும் அவரைக்
குறித்த ஆழமான
அறிவைப்
பெற்றுக்கொண்டவர்.
அதனால்தான் "என்
ஆண்டவரே, என் இறைவனே"
என்று அவர் இயேசுவைப்
பணிந்துகொண்டார்.
பரிசுத்த
ஆவியானவருக்குக்
காத்திருக்கும் இந்த
சீடர்களுக்கு நடுவில்
வரிவசூலித்தவரும்,
வியாபாரியும்,
கணக்கரும், திறமைவாய்ந்த
மொழிபெயர்ப்பாளருமா
கிய மத்தேயுவையும்
நாம் காணமுடிகிறது.
அவர் கிறிஸ்துவின்
அழைப்புக்கு
உடனடியாகக் கீழ்ப்படிந்தவர்.
பின்னாட்களில் அவர்
தன்னுடைய இரட்சகரின்
வார்த்தைகளையும்
செய்கைகளையும்
தம்முடைய அற்புதமான
நற்செய்தி நூலில்
எழுதி அவரை
மகிமைப்படுத்தியவர்.
மற்ற மூன்று
அப்போஸ்தலருடைய
வாழ்வைப் பற்றி நமக்கு
அதிகம் தெரிவதில்லை.
மற்ற அப்போஸ்தலர்களைப்
போலவே இவர்களும்
பிசாசுகளைத்
துரத்தவும்
நோயாளிகளைக்
குணமாக்கவும்
தேவையான வல்லமையை
கிறிஸ்துவிடமிருந்து
பெற்றுக்கொண்டிருந்தா
ர்கள். அவர்களுடைய
பெயர்கள் பரலோகத்தில்
எழுதப்பட்டிருக்கிறது
என்பதைக் குறித்து
அவர்களும்
சந்தோஷப்பட்டவர்களாக
விடுதலையின்
நற்செய்தியைத் தமது
அயலகத்தாருக்கு
அறிவித்ததன் மூலம்
கிறிஸ்துவை
மகிமைப்படுத்தினார்கள்.
அவர்களுடைய வாழ்வைக்
குறித்த அதிக விவரங்கள்
நமக்குக் கிடைக்காததைக்
குறித்து நாம்
கவலைப்படத்
தேவையில்லை.
ஏனெனில் அனைத்து
அப்போஸ்தலருடைய
வாழ்க்கையையும்
விவரித்து எழுதுவது
லூக்காவின் நோக்கமாக
இருக்கவில்லை. தங்கள்
இருதயத்தை பரிசுத்த
ஆவியானவருக்கும்
அவருடைய
வழிநடத்தலுக்கும்
திறந்துகொடுத்த
மதிப்பிற்குரிய
அப்போஸ்தலர்கள் மூலமாக
உயிருள்ள
கிறிஸ்துவின் செயல்
எவ்வாறு வெளிப்பட்டது
என்பதைக் காண்பிப்பதே
லூக்காவினுடைய
நோக்கமாக இருந்தது.
இந்தத் தொடர்ச்சியான
கூடுகைகளில்
பெண்களும்
காணப்படுவது எத்தனை
அற்புதமானது.
அனைவரும்
கிறிஸ்துவை விட்டுச்
சென்றபோதும்
இவர்கள்தான்
சிலுவையருகில்
தனிமையாக நின்று
கொண்டிருந்தவர்கள்.
இயேசு கிறிஸ்து
உயிர்த்தெழுந்த வாரத்தின்
முதலாம் நாளிலே அந்த
நற்செய்தியை தம்முடைய
சீடர்களுக்கு அறிவிக்கும்
கட்டளையைப்
பெற்றுக்கொண்டவர்களும்
இவர்களே. அந்தப்
பெண்களும் மற்றவர்களுடன்
சேர்ந்து பரிசுத்த
ஆவியின் வருகைக்காகக்
காத்திருந்தார்கள்.
பரிசுத்த ஆவியானவர்
ஆண்களுக்கு மாத்திரம்
தரப்படாமல் பொதுவாகப்
புறக்கணிக்கப்பட்டவர்களாய
ிருந்த பெண்களுக்கும்
தரப்பட்டார்.
பிதாவின்
வாக்குத்தத்தத்திற்காக
காத்திருந்தவர்களில்
இயேசுவின் தாயாகிய
மரியாளும் இருந்தார்.
இந்த இடத்தில்தான்
மரியாளைக் குறித்த
இறுதியான குறிப்பை
நாம் புதிய ஏற்பாட்டில்
வாசிக்கிறோம். அவர்
பரலோகத்தின்
இராணியாக இங்கு
நமக்குக் காட்சி தராமல்,
பரிசுத்த ஆவியின்
வல்லமைமையைப்
பெற்றுக்கொள்ள
வேண்டிய தேவையுள்ள
ஒரு தாழ்மையும்
விண்ணப்பமும் நிறைந்த
பெண்மணியாக அவர்
நமக்கு காட்சி தருகிறார்.
நற்செய்தியாளனாகிய
லூக்காவுக்கும்
இயேசுவின் தாயாகிய
மரியாளை நன்கு
தெரிந்திருந்தது.
அவரிடமும் தமது
மகனைப் பற்றிய
கேள்விகளை லூக்கா
கேட்டிருப்பார்.
இயேசுவுக்கு
சகோதரர்கள் இருந்தார்
என்று லூக்கா
தெளிவுபடுத்துகிறார்.
அவர்கள் தங்கள்
குடும்பத்திற்கு எந்தப்
பாதகமும் ஏற்பட்டுவிடக்
கூடாது என்பதற்காக,
இரட்சகராக இயேசு
தம்முடைய பணியைச்
செய்வதற்கு
தடையாயிருந்தார்கள் (மத்.
13:55; மாற்கு 3:21; 31-35; 6:3;
யோவான் 7:3-8).
இயேசுவின்
உயிர்த்தெழுதலுக்குப்
பிறகு அவர் தம்முடைய
சகோதரனாகிய
யாக்கோபுக்கு
தரிசனமானார் (1
கொரிந்தியர் 15:7).
இயேசுவின்
தெய்வீகத்தினால் கவரப்பட்ட
அவர் பின்னாட்களில்
தன்னுடைய மற்ற
சகோதரர்களையும்
அப்போஸ்தலருடைய
வட்டாரத்திற்குள்
கொண்டுவந்தார்.
அப்போஸ்தலர்கள்
அவர்களுக்காக
விண்ணப்பித்தபோது
அவர்களும் மனமாற்றம்
அடைந்தார்கள். அதன்
பிறகு அவர்களும்
பிதாவினுடைய
வாக்குத்தத்தத்திற்காகக்
காத்திருந்தார்கள். அதன்
பிறகு யாக்கோபு
பரிசுத்த
ஆவியானவரினால்
நிறைந்து, மாதிரியான
விண்ணப்பத்தை
ஏறெடுத்தார்.
பின்னாட்களில்
திருச்சபையினுடைய
தூண்களில் ஒருவராகக்
கருதப்பட்டார் (அப். 12:17;
15:13; கலா. 2:9).
உயிரோடு எழுப்பப்பட்ட
இயேசு தம்முடைய சீடர்கள்,
உண்மையுள்ள பெண்கள்,
உலக ரீதியான அவருடைய
குடும்பத்தார்
அனைவரையும் ஒன்றாகக்
கூட்டி ஒரு
விண்ணப்பிக்கும்
திருச்சபையாக
உருவாக்கியிருந்தார்.
அவர்கள் அனைவரும் ஒரே
ஆத்துமாவும் ஒரே
இருதயமும்
உடையவர்களாக
போராட்டமுள்ள
விண்ணப்பத்திலே
ஒன்றிணைந்து
காணப்பட்டார்கள். எனக்கு
அன்பான விசுவாசியே,
மற்ற சகோதர,
சகோதரிகளோடு
ஐக்கியத்தில் இணைந்து,
இறைவனுடைய
சித்தத்திற்கான
ஏக்கத்தோடு நீங்கள்
விண்ணப்பம்
செய்கிறீர்களா? அல்லது
நீங்கள் தனிமையில்
விண்ணப்பிக்கிறீர்களா?
இந்த விண்ணப்பிக்கும்
கூட்டம்தான் அப்போஸ்தல
நடபடிகளுக்கும் முழுத்
திருச்சபைக்குமான
ஆரம்பமாயிருந்தது.