005 -- அப்போஸ்தலர் 01:09-12 (தொடர்ச்சி........)

இயேசுவின் பரமேறுதல் சீடர்களுடைய
வாழ்க்கையிலும் வரலாற்றிலும் அதிரடியான மாற்றத்தை உண்டுபண்ணியது என்று
அவர்கள் அறிந்தார்கள். அவர்கள் தொடர்ந்து உற்றுப்
பார்த்துக்கொண்டிருந்தபோது அவர்களுடைய கர்த்தர் மேகங்களில் மறைந்து
போனார்.

நாமும் பிதாவோடு கிறிஸ்து வீற்றிருக்கும் இடத்தை மேலோக்கிப் பார்த்து,
நம்முடைய இதயங்களை அவரைநோக்கி எழுப்புவது நல்லது. நம்முடைய பிரயாணம்
பரலோகத்தை நோக்கியது, நம்முடைய வீடு நம்முடைய பிதாவாகிய இறைவனுடைய
வீடுதான்.
தம்முடைய சீடர்கள் பரலோகத்தையும் இனிவரும் வாழ்வையும் பற்றி
நினைத்துக்கொண்டு, ஒரு ஆன்மீக மாயையில் வாழ வேண்டும் என்று உயிருள்ள
கர்த்தர் விரும்பவில்லை.

அவர் அவர்களை பூமியிலே நிலைநிறுத்த விரும்பினார். ஆகவே அவர் காணப்படாத
உலகத்திலிருந்து இரண்டு தேவதூதர்களை அவர்களிடத்தில் அனுப்பினார்.

தூய்மையானவர்களாகிய அந்த தூதர்கள் கிறிஸ்து உள்ளபடியே பரலோகத்திற்கு
எடுத்துக்கொள்ளப்பட்டார்கள் என்பதை அவர்களுக்கு அறிவித்தார்கள். அவருடைய
பரமேறுதல் என்பது சீடர்களுடைய பகல்கனவல்ல என்றும் அது உண்மையில் நடைபெற்ற
நிகழ்வு என்றும் அப்போது
நிலைநிறுத்தப்பட்டது.

மேலும் அந்த இரண்டு தூதர்கள், விசுவாசிகளுடைய நம்பிக்கை இத்துடன்
முடிவடைந்துவிடவில்லை என்றும் கிறிஸ்து தாம் பரலோகத்திற்குச் சென்ற
விதமாகவே மீண்டும் மேகங்களில் இவ்வுலகத்திற்கு வருவார் என்றும்
அவர்களுக்கு
உறுதியளித்தார்கள்.

கர்த்தராகிய இயேசு திரும்ப வருவார் என்ற இந்த ஒரே அறிவிப்பில் வரலாற்றின்
நோக்கம் முழுமையும் அடங்கியிருக்கிறது. இந்த விசுவாசத்தை கிறிஸ்தவம்
உறுதியாகவும் அசையாமலும் பற்றிக்கொண்டிருக்கிறது.

நம்முடைய கர்த்தர் வாழ்கிறார். அவர் திரும்ப வருவார். ஏனெனில் அவர் நம்மை
நேசித்து, நமக்காக ஏங்குகிறார். அவர் எப்போது வருவார் என்று நமக்குத்
தெரியாது. ஆனால் அவர் நிச்சயமாக சீக்கிரம் வருவார். நீங்கள்
இயேசுவுக்காகக் காத்திருக்கிறீர்களா? உங்கள் சிந்தனைகளில் அவர்
மையமாயிருக்கிறாரா? நீங்கள் கிறிஸ்துவை நேசிக்கிறீர்களா? நீங்கள் தினமும்
அவரை நினைக்கிறீர்களா? உங்கள் விண்ணப்பங்களை
அவரிடம் நீங்கள் கொண்டுவருகிறீர்களா? அவருடைய வருகைக்காக நீங்கள்
காத்திருக்கிறீர்களா? அவருக்காக காத்திருப்பவர்களைத் தவிர யாராலும்
இவ்வுலகில் ஞானத்தோடு வாழ முடியாது.

சீடர்கள் அதிக மகிழ்ச்சியுள்ள இருதயத்தோடு கிதரோன் பள்ளத்தாக்கிற்குச்
சென்றார்கள். கெத்சமனேக்கு அருகிலுள்ள ஒலிவ மலையில்தான் அவர்கள் அவருக்கு
முன்பாக நின்றுகொண்டிருந்தார்கள். அங்கிருந்து அவர்கள் எருசலேமை நோக்கிச்
சென்றார்கள். கர்த்தர் தம்முடைய மரணத்தோடும் இறைவனுடைய கோபத்தோடும்
போராடிக்கொண்டி
ருந்தபோது அவர்கள் கெத்சமனேயில்தான் உறங்கிக்கொண்டிருந்தார்கள்.

இறுதியாக அவர் கைது செய்யப்பட்டு சங்கிலிகளால் கட்டப்பட்டவராக கொண்டு
செல்லப்பட்டார். அந்த நிகழ்வுகள் நடந்தபோது அவர்களுக்கிருந்த பயம்
இப்போது அவர்களுக்கில்லை.
ஏனெனில் கிறிஸ்துவின் வெற்றியினால் அவர்களுடைய இருதயம் நிறைந்திருந்தது.
இரண்டு தேவதூதர்களுடைய மகிமையான அறிவிப்புகளும் அவர்களுடைய மனங்களில் ஆலய
மணியோசையாக ஒலித்துக்கொண்டிருந்தன: கர்த்தர் வருகிறார். அவர் சீக்கிரமாக
வருகிறார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.