004 -- அப்போஸ்தலர் 01:06-08 (தொடர்ச்சி.......)

நீங்கள் இறைவனுடைய வல்லமையைப் பெற்றுக்கொண்டி
ருக்கிறீர்களா அல்லது இன்னும் உங்கள் பாவத்தில் மரித்த நிலையிலேயே இருக்கிறீர்களா?

நீங்கள் பிதாவின் அன்பில் வாழ்கிறீர்களா? உங்களை விடுவித்தவரினால்
நீங்கள் அனைத்தையும் செய்கிறீர்களா?

அவருடைய பெலன் உங்கள் பெலவீனத்தில் உதவி செய்கிறதா? நீதிமானின் ஊக்கமான
வேண்டுதல் அதிக பெலமுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா?

இறைவனுடைய வல்லமை என்பது ஒரு இரகசியமல்ல. பரிசுத்த வல்லமையாகிய அவர்
நித்திய நித்தியமாக இருப்பவராகவும், இறைவனுடைய பரிசுத்த திரித்துவத்தில்
ஒருவராகவும், நம்முடைய ஆராதனைக்கும் ஒப்படைப்புக்கும் பாத்திரராகவும்
இருக்கிறார்.

முழு நம்பிக்கையோடும் நன்றியறிதலோடும் நாம் இந்த தெய்வீக
ஆவியானவரைத் தொழுதுகொண்டு, பிதா மற்றும் குமாரனுடைய வெளிச்சத்திலே அவரை
மகிமைப்படுத்துகின்றோம்.

அவர் ஏழைகளாகிய நம்மில் உண்மையாகவே வாழ்ந்து, கிறிஸ்துவிலுள்ள நம்முடைய
இரட்சிப்பை உறுதிசெய்து, இறைவனை
அறிந்துகொள்ளும்படி நம்முடைய மனக்கண்களைத் திறந்தருளுகிறார். அவர்
நம்முடைய பரலோக தகப்பன்.

இயற்கையான எந்த மனிதனுக்குள்ளும் இவ்விதமான தெய்வீகத் தன்மை
குடிகொண்டிருப்பதில்லை. அது நமக்கு வெளியே இருந்து உள்ளே வந்து,
கிறிஸ்துவை நேசிப்பவர்களுக்கு வெளிச்சத்தைக் கொடுத்து, அவர்களைத்
தம்முடைய உயிரினாலும், அன்பினாலும், அமைதியினாலும் நிரப்புகிறது.

சத்திய ஆவியினால் வழிநடத்தப்படாத எந்த நபரும் இயேசுவைக் "கிறிஸ்து" என்று
அறிக்கை செய்ய முடியாது. அவர் நம்மிலே உண்மையான விசுவாசத்தை
ஏற்படுத்துகிறார். குமாரனுடைய ஆவியானவர் நம்முடைய வாய்களைத் திறந்து,
பரலோக மொழியில் பேசும்படி நமக்குக் கற்றுக்கொடுக்கிறார். அவர் நமக்கு,
"பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக.

உம்முடைய அரசு வருவதாக. உம்முடைய சித்தம் பரமண்டலங்களில்
செய்யப்படுவதுபோல பூமியிலும் செய்யப்படுவதாக" என்று விண்ணப்பிக்கும்படி
கற்றுக்கொடுக்கிறார். இந்த நல்ல ஆவியானவருக்கு நீங்கள் உங்களைத்
திறந்துகொடுத்தி
ருக்கிறீர்களா? அவர் வந்து உங்களை நிரப்ப விரும்புகிறார் என்பதை நீங்கள்
அறிந்திருக்கிறீர்களா?
பெலனற்ற சீடர்கள் பரிசுத்த ஆவியினால் பெலனைப் பெற்றுக்கொண்டு இயேசுவின்
தெய்வீகத் தன்மையை
அறிந்துகொண்டார்கள்.

அவர் அவர்களில் விசுவாசத்தை உண்டுபண்ணி, அவருடைய சத்தியத்திற்குச்
சாட்சியிடவும், அவருடைய சித்தத்தைச் செய்யும்படி தங்களைத் தாழ்த்தவும்
அவர்களுக்கு பெலன் கொடுத்தார். பரிசுத்த ஆவியானவர் நம்மைக் கிறிஸ்துவின்
சாட்சிகளாக்குகிறார்.

நாம் நம்மையே புதுப்பித்துக்கொள்ளவோ, நம்முடைய மறுபிறப்பைக் குறித்து
பெருமைகொள்ளவோ தேவையில்லை. நம்முடைய இரட்சகரும் நம்மைப்
புதுப்பிப்பவருமாகிய கிறிஸ்துவை நாம் காண்பித்து, நம்முடைய பாவங்களை
அவருக்கு முன்பாக அறிக்கை செய்து, பாவத்தை மன்னிக்கும் அவருடைய
வல்லமைக்கு சாட்சி கொடுத்து, பரிசுத்த ஆவியினால் பிறந்தவர்கள் அனைவரும்
உண்மையான இறைவனுடைய பிள்ளைகளாயிருக்கிறார்கள் என்பதைக் காண்பிக்க
வேண்டும்.

அவர் தம்முடைய இரத்தத்தினால் நம்மைப் பரிசுத்தப்படுத்தி, தம்முடைய
ஆவியினால் நம்மை பெலப்படுத்துகிறார். கர்த்தராகிய இயேசு தம்முடைய
நற்செய்தியின் ஆவியானவரினால் இன்றும் பலரை மாற்றுகிறார் என்பதை நாம்
விசுவாசித்து மற்றவர்களுக்குப் போதிக்க வேண்டும். அவர் தம்முடைய
வசனத்தினால் பாவமுள்ள மனிதர்களிடத்திலிருந்து தீய ஆவிகளைத் தம்முடைய
வார்த்தையினால் துரத்திவிட்டு, உடைந்துபோன இருதயங்களில் தம்முடைய அரசைக்
கட்டுகிறார்.

"ஷாஹித்" என்ற அரபிய வார்த்தை "சாட்சி" என்பதையும் "இரத்த சாட்சி"
என்பதையும் குறிக்கும் வார்த்தையாகும். இந்த உலகத்தின் ஆவி நமக்கு எதிராக
எழுந்து வருமானால் நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.
ஏனெனில் அது ஏற்கனவே எழுந்து நம்முடைய கர்த்தரை சிலுவையில்
அறைந்திருக்கிறது.

பரிசுத்த ஆவியானவர் எருசலேமில் எழுந்தருள ஆரம்பித்தார். அது நெருப்பைப்
போல யூதேயாவிற்குப் பரவி, சமாரியாவைச் சென்றடைந்து, அந்தியோகியாவிற்கு
முன்னேறி, சின்ன ஆசியா முழுவதும் பரவியது. அதே வேளையில் அது வடக்கு
ஆப்பிரிக்காவுக்கும், எத்தியோப்பியாவிற்கும், ஈராக்குக்கும் பரவி,
கிரேக்கத்தில் நுழைந்து, தலைநகரமாகிய ரோமாபுரியைக் கைப்பற்றியது.

இறைவனுடைய அன்பின் தீவிரமான பரவுதலை நற்செய்தியாளனாகிய லூக்கா
உணர்ந்துகொண்டவராக அதைத் தன்னுடைய நூலில் பதிவு செய்திருக்கிறார்.
அன்புள்ள விசுவாசியே, இன்று நற்செய்தி உங்கள் கரங்களில்
கொடுக்கப்பட்டிருக்கிறது. நாங்கள் உங்களைப் பார்த்து: "இறைவனுடைய மகனுடைய
அன்பை உங்கள் சுற்றுப்புறத்தில் எங்கும் ஒளிரச் செய்யுங்கள்.

ஏனெனில் நீங்களே உலகத்தின் ஒளியாயிருக்கிறீர்கள்" என்று சொல்கிறோம்.
ஆனால் முதலில் உங்களை நீங்கள் ஆராய்ந்து பாருங்கள். நீங்கள் இறைவனுடைய
வல்லமையைப் பெற்றுக்கொண்டி
ருக்கிறீர்களா? பரிசுத்த ஆவியானவர் உங்களில் வாழ்கிறாரா?
இல்லையென்றால், பிதாவினுடைய வாக்குத்தத்தம் உங்களில் நிறைவேறும்படி
காத்துக்கொண்டிருங்கள்.

விண்ணப்பத்தோடு கேளுங்கள் அப்போது உங்களுக்குக் கொடுக்கப்படும்.
நற்செய்தியை வாசிக்கும்போது பிதாவின் வாக்குறுதியை நீங்கள்
கண்டுகொள்வீர்கள். அது உங்களுக்கு முன்பாக திறந்து வைக்கப்படும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.