Septuaginta என்பது பழைய ஏற்பாட்டின் தலைசிறந்த கிரேக்க மொழிபெயர்பாகும்.
இது கி.மு.3-2 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இது அன்று வழக்கிலிருந்த
"Koine" என்றழைக்கபடும் நடைமுறை கிரேக்கத்தில் எழுதப்பட்டது ஆகும்.
செப்துவஜிந்தா மொழிபெயர்பின் வரலாறும் பெயர்க் காரணமும்:-
இலத்தின் மொழியில் செப்துவஜிந்தா என்பதன் பொருள் "எழுபது" என்பதாகும்.
எழுபது அல்லது எழுபதிரண்டு பேர் இந்த மொழிபெயர்பில் ஈடுபடுத்தபடியினால்
"எழுபதின்மர் மொழிபெயர்ப்பு" என்ற பொருள் தரக்கூடிய வார்த்தையாகிய
செப்த்துவஜிந்தா என்ற பெயர் வழங்கப்பட்டது. இதன் தமிழில் கூறும் போது
"எழுபது உரையாளர்களின் மொழிபெயர்ப்பு" (translation of the seventy
interpreters) என்று வருகிறது. இலத்தின் மொழியில் Interpretation
septuaginta virorum என்று அழைக்கப்பட்டது. அதிலிருந்து சுருக்கமாக
செப்துவஜிந்தா (septuaginta=எழுபது) என்னும் பெயர் பெற்றது.
செப்துவஜிந்தா குறிந்த வரலாற்று கதை:-
* கி.மு.3ஆம் நூற்றாண்டில் எகிப்திய நாட்டை இரண்டாம் தாலமி ஃபிலடெல்புசு
ஆண்டுவந்தார்.
* அவர் அலெக்ஸான்டிரியாவில் அமைந்திருந்த உலக புகழ்பெற்ற நூலகத்தில்
வேதாகமத்தின் பிரதிகளை சேகரிக்க வேண்டும் என்று விரும்பினார்.
* எனவே, எருசலேமில் பிரதான ஆசாரியனாக இருந்த எலியேசரை அனுகி தம்
விருப்பத்தை தெரிவித்தா* எனவே, எருசலேமில் பிரதான ஆசாரியனாக இருந்த
எலியேசரை அனுகி தம் விருப்பத்தை தெரிவித்தார்.
* அதன்படி பிரதான ஆசாரியன் எலியேசார் இஸ்ரவேலின் 12
கோத்திரத்திலிருந்தும் ஒரு கோத்திரத்திற்க்கு 6 பேர் என்ற விகிதத்தில்
(12X6=72) 72 யூத அறிஞர்களை தெரிந்தெடுத்து, அலெக்ஸான்டிரியாவுக்கு
அனுப்பினார்.
* எகிப்திய அரசர் அந்த 72 பேரிடமும் எபிரேய மொழியிலுள்ள பழைய ஏற்பாட்டு
வேதாகமத்தை கிரேக்க மொழிக்கு மொழியாக்கம் செய்யும்மாறு கூறினார்.
* ஒவ்வொரு அறிஞருக்கும் தனித்தனி அறை ஒதுக்கப்பட்டது.
* ஒருவர் மற்றவரிடம் கலந்து பேச கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டது.
* அந்த 72 அறிஞர்களும் 72 நாட்களில் தனித்தனியே இருந்தது மொழிபெயர்ப்பு
பணிகளை முடித்தனர்
* பின்னர், அந்த 72 பேரும் செய்த மொழிபெயர்ப்புகளை ஒன்றோடு ஒன்று
ஒப்பிட்டு பார்த்தனர். அதில் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. என்னவென்றால்
72 பேருடைய மொழிபெயர்பும் எந்த வித வித்தியாசமும் இன்றி ஒன்று போலவே
இருந்தது.
* இந்த கதையை எடுத்துரைக்கும் ஃப்ளாவியுசு ஜொசிஃபஸ் என்னும் வரலாற்று
அறிஞர் கி.பி.37-100 காலத்தில் எபத்திரண்டு என்னும் எண்ணை எழுபது
என்னும் முழு எண்ணாக மாற்றி எழுபதின்மர் (Septuaginta) என்ற மரபுக்கு
வழிவகுத்தார்.
மேலே கூறப்பட்டுள்ள செப்துவஜிந்தா கிரேக்க மொழிபெயர்பு தோன்றிய கதை
கூறும் முக்கிய செய்திகள்:-
* பண்டைய யூத மக்கள் இம்மொழிபெயர்பை பெரிதாக மதித்தனர்.
* கி.மு.270 அளவில் எகிப்த்து நாட்டு அலெக்ஸாண்டிரியா நகரில் யூத மக்கள்
பெருமளவில் குடியேறியிருந்தனர்.
* வேதாகமம் அந்நாட்களில் எபிரேய மொழியில் மட்டுமே இருந்தது.
* கல்வி அறிவு பெருகியிருந்த மக்கள் நிறைந்த அலெக்ஸாண்டிரியாவின்
மக்களுக்கு யூதர்களின் வேதாகமத்தை அறிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆவல்
அதிகமாக * கல்வி அறிவு பெருகியிருந்த மக்கள் நிறைந்த அலெக்ஸாண்டிரியாவின்
மக்களுக்கு யூதர்களின் வேதாகமத்தை அறிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆவல்
அதிகமாக இருந்தன.
* எனவே, கிரேக்க மொழி பேசிய யூதர்களின் தேவையை முன்னிட்டும்,
கிரேக்கர்களுக்கு எபிரேய ஞானத்தை அறிவிக்கும் நோக்கத்துடனும் வேதாகமம்
கிரேக்க மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டது.
* யூத அறிஞர்கள் எபிரேய மொழி வேதாகமத்தையே பெரும்பாலும் பயன்படுத்தினர்.
அதோடு, Targum என்ற அரமேயு மொழிபெயர்பும் வழங்கப்பட்டது.
* செப்த்துவஜிந்தா மொழிபெயர்ப்பு தேவனுடைய ஏவுதலால் எழுதப்பட்டது என்று
ஃபீலோ, யோசேஃபசு போன்ற அறிஞர்கள் கருதினார்கள்.
* பழைய லத்தீன் மொழிபெயர்ப்புக்கு அதுவே மூலப்பாடமாக இருந்தது.
* அதுபோலவே, சுலோவோனியம், சிரியம், அர்மேனியம், கோப்தியம், பழைய
சியோர்சியன் (georgian) போன்ற மொழிகளில் எழுந்த பெயர்ப்புகளுக்கு எல்லாம்
செப்த்துவஜிந்தா மூலபாடமாக பயன்படுத்தப்பட்டது.
* புதிய ஏற்பாடு நூல்களில் எபிரேய வேதாகம் மேற்கோள் காட்டப்படும்போது
செப்துவஜிந்தா பெயர்பே பயன்படுத்தப்பட்டது.
* தொடக்ககாலத்து கிறிஸ்துவ அறிஞர்களும் செப்த்துவஜிந்தா
மொழிபெயர்பிலிருந்தே மேற்கோள் காட்டுகின்றனர்.
செப்துவஜிந்தா பெயர்ப்பின் முக்கிய தோள்சுவடிகள்:-
* முற்காலத்தில் கன்றுகுட்டி, ஆடு போன்ற விலங்குகளின் தோலை பதனிட்டு,
சீராக்கி எழுதப்பட்டதால் "தோல்சுவடிகள்" Parchments என்று அழைக்கப்ட்டன.
* வத்திகன் தோல்சுவடிகள் (Codex vaticanus) - கி.பி.4ஆம் நூற்றாண்டு
* சீனாய் தோல்சுவடிகள் (Codex sinaiticus) - கி.பி.325-60 காலக்கட்டம்
* அலெக்ஸான்டிரிய தோற்சுவடி (Codex alexandrinus) கி.பி.5ஆம் நூற்றாண்டு
மொழிபெயர்புகள் நிகழ்ந்த காலம்:-
* தோரா எனப்படும் பென்டடுக் (ஆதி முதல் உபாகமம் வரை) அலெக்ஸான்டிரியாவில்
கி.மு.3ஆம் நூற்றாண்டில் கிரேக்க மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டது.
* கி.மு.185 அளவில் சங்கீதம் அலெக்ஸான்டிரியாவில் கிரேக்கத்தில் மொழியாக்கமானது.
* அதற்குபின் எரேமியா, எசேக்கியல் மற்றும் ஓசியா முதல் மல்கியாவரை யுள்ள
அனைத்தும் மொழியாக்கம் செய்யப்பட்டது.
* தொடர்ந்து, வரலாற்று நூல்கள் யோசுவா முதல் 2 இராஜாக்கள் வரை
மொழியாக்கம் செய்யப்பட்டது.
* இறுதியில் ஏசாயா மொழியாக்கம் செய்யப்பட்டது.
* கி.மு.150 அளவில் தானியேல், யோபு மொழியாக்கம் செய்யப்பட்டது.
* கி.மு. முதல் நூற்றாண்டில் பாலஸ்தீனத்தில் உன்னதபாட்டு, புலம்பல்,
ரூத்து, எஸ்தர், பிரசங்கி மொழிபெயர்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.