தேவனுடைய பெயர்கள் பாகம் 3

IV. புதிய ஏற்பாட்டில் உள்ள சில பெயர்கள்:-

1. கிரேக்க மொழியில் Theos என்று என்று எழுதப்பட்டுள்ள சொல் தமிழில்
தேவன் என்றும் (மத் 1:23) தேவர்கள் என்றும் (யோவா 10:34,35) தெய்வங்கள்
என்றும் (அப் 7:40) தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. இது பழைய ஏற்பாடில்
வரும் ஏலோஹீம் என்ற சொல்லுடன் ஒப்பிடதக்கது. இச்சொல்லை சார்ந்த Thea
என்ற சொல் தேவி என்று அப் 19:27,35,37 ல் எழுதப்பட்டுள்ளது.

2. கிரேக்க மொழியில் Kurios என்பது மத் 1:20; 7:21 போன்ற வசனங்களில்
கர்த்தர் என்று தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. மனிதர்களை குறிப்பதாக
பயன்படுத்தும் வசனங்களில் உடையவர்கள் (உரிமையாளர் Owners லூக்கா 19:33),
ஆண்டவன் (மத் 18:25), எஜமான் (மத் 21:40) என்று எழுதப்பட்டுள்ளது. Kurios
என்ற சொல்லின் பொருள் ஆட்சி செய்பவர், எஜமான், மதிப்பிற்குரியவர்
என்பதாகும். பிதாவையும் கிறிஸ்துவையும் ஆவியானவரையும் இச்சொல்லால்
அழைப்பதை புதிய ஏற்பாட்டின் பல வசனங்களில் காணலாம்.

3. கிரேக்க மொழியில் Despotes என்ற சொல் லூக் 2:29; யூதா 4 போன்ற
இடங்களில் ஆண்டவர் என்றும் அப் 4:24 ல் கர்த்தர் என்றும் மனிதர்களை
குறிக்கும் 1பேது 2:18 போன்ற சில இடங்களில் எஜமான்கள் என்றும்
எழுதப்பட்டுள்ளது. இதன் பொருள் அரசாள்பவர் (சர்வதிகாரி), எஜமானர்
என்பதாகும்.

V. பிதாவாகிய தேவனின் சில பெயர்கள்:-

* திக்கற்ற பிள்ளைகளுக்கு தகப்பன் (சங் 68:5)

* பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதா (மத் 5:16)

* பரம பிதா (மத் 6:14)

* திராட்ச்சை தோட்டகாரர் (யோவா 15:1)

* நீதியுள்ள பிதா (யோவா 17:25)

* நம்முடைய பிதாவாகிய தேவன் (ரோம 1:3)

* அப்பா, பிதா (ரோம 8:15; கலா 4:6)

* நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவன் (ரோம 15:5)

* இரக்கங்களின் பிதா (2கொரி 1:3)

* சகல ஆறுதலின் தேவன் (2கொரி 1:3)

* மகிமையின் பிதா (எபே 1:17)

* எல்லோருக்கும் ஒரே தேவனும் பிதாவும் (எபே 4:6)

* ஆவிகளின் பிதா (எபி 12:9)

* சோதிகளின் பிதா (யாக் 1:17)

* இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் (வெளி 1:8)

* அல்பாவும் ஒமேகாவும், ஆதியும் அந்தமும் (வெளி 1:8)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.