சபையை விட்டு விலக்கப்பட வேண்டியவர்கள்

1 கொரிந்தியர் 5:13

"புறம்பே இருக்கிறவர்களை குறித்து தேவனே தீர்ப்பு செய்வார். ஆகையால்
அந்த பொல்லாதவனை உங்களை (சபையை) விட்டு தள்ளிப்போடுங்கள்".

யாரை எல்லாம் சபையைவிட்டு தள்ளிவிடவேண்டும்:-

1). சபையிலுள்ள ஒருவருக்கு விரோதமாக குற்றம் செய்ததோடு சபையாரின் சமாதான
ஆலோசனைகளையும் ஏற்றுக்கொள்ளாதவர்களை (மத் 18:15-17)

2). வேதத்தின் உபதேசத்திற்க்கு விரோதமாக பிரிவினைகளையும் இடறல்களையும்
உண்டாக்குகிறவர்களை (ரோமர் 16:17)

3). விபச்சாரம், பொருளாசை, விக்கிரக ஆராதனை, குடிவெறி, கொள்ளையடித்தல்
போன்ற பாவங்களில் இருப்பவர்களை (1கொரி 5:11)

4). அவிசுவாசிகள், அநீதியாய் இருப்பவர்களை (2கொரி 6:14-15)

5). ஒழுகற்று நடக்கிறவர்களை (2தெச 3:6)

6). வசனத்திற்க்கு கீழ்ப்படியாதவர்களை (2தெச 3:14)

7). நல்மனசாட்சியை தள்ளிவிட்டு விசுவாசத்தை சேதப்படுத்துகிறவர்களை (1தீமோ 1:19-20)

8). கள்ள போதகங்கள், தேவபக்த்தியை ஆதாய தொழிலாக என்னுகிறவர்களை (1தீமோ
6:3-5; 2யோவா 10)

9). வேதப்புரட்டர்களை (தீத்து 3:10)

குறிப்பு:-

2தீமோ 3:2-5 இல் இன்னும் பலரை பற்றி கூறப்பட்டுள்ளது.

இப்படிப்பட்டவர்களை நீக்கினால் இன்றைய சபையில் பலரை விலக்கவேண்டி
இருக்கும் என்பது உண்மைதான்.

ஆனால்,

"இப்படிப்பட்டவர்களை விளக்கினால் மீதமுள்ள சபை உண்மை உள்ளதாகவும்
பயனுள்ளதாகவும் அமையும்".

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.