வெளிபடுத்தின விசேஷம் - விளக்கவுரை. - (Pr.Charles MSK) லவோதிக்கேயா சபை ஒரு பார்வை:-

லவோதிக்கேயா -'ஜனங்களின் உரிமை' அல்லது 'நியாயத் தீர்ப்பு' என்று பொருள்.

லவோதிக்கேயா பட்டணம்:

இது பிலதெல்பியாவிலிருந்து தென் திசையில் 43 மைல் தூரத்திலிருந்தது.
கி.மு.250 ல் 2 ம் அந்தியோக்கஸ் தன் மனைவி லவோதிக்கேயாவின் ஞாபகார்த்தமாக
இப் பட்டணத்தைக் கட்டினான். எனவே, இப்பட்டணத்துக்கு லவோதிக்கேயா என பெயர்
வந்தது.

கி.பி.60 ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இப்பட்டணம் படு சேதமடைந்தது.
இப்பட்டணத்தை சீர்படுத்த ரோம அரசாங்கம் பணம் கொடுக்க முன் வந்தும்
இப்பட்டணத்தார் இப் பணத்தை வாங்க மறுத்து தாங்களே தங்கள் சொந்த செலவில்
பட்டணத்தை சீர்படுத்திக் கொள்வதாக கூறினர்.

இங்கு துணி நெய்யும் தொழிலும் மிக பிரபல்யமாய் நடந்து வந்தது. ஆடுகள்
திரளாய் வளர்க்கப்பட்டது. எனவே, கம்பளம் நெய்யும் தொழிலும் சிறப்பாய்
நடைபெற்றது. இன்று அறியப்பட்ட உலகத்திற்கு இப்பட்டணத்திலிருந்து ஆடைகள்
அனுப்பப்பட்டன.

இங்கு ஒரு கண் மருத்துவ சாலையும், மருத்துவக் கல்லூரியும் இருந்தது.
இப்படணத்தில் மூன்று நாடக சாலையும், 30,000 பேர் இருக்கும் ஒரு சர்க்கஸ்
அரங்க சாலையும் இருக்கிறது.

இச்சபை கொலேசே பட்டணத்து எப்பாப்பிராவினால் ஸ்தாபிக்கப்பட்டது. 4 ம்
நூற்றாண்டில் லவோதிக்கேயா சபையின் ஆலோசனைக்குழு ஒன்று கூடி வேத
புத்தகங்களை ஒன்று சேர்த்தனர். அப்போது வெளிப்படுத்தலின் புத்தகத்தை
தள்ளிப் போட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று இப்பட்டணம் அழிக்கப்பட்ட நிலையிலுள்ளது. தொடர்ந்து ஏற்பட்ட
நிலநடுக்கங்களினால் இந்நிலை உண்டாயிற்று. இன்று இப்பட்டணம் இருந்த இடம்
வனாந்திரமாய் உள்ளது. துருக்கி நாட்டிலுள்ள இவ்விடத்துக்கு இப்போது
எஸ்கிஹிசார் என்று பெயர்.

இச்சபைக்கு கிறிஸ்துவின் வெளிப்பாடு:

1. உண்மையும் சத்தியமுள்ள சாட்சி

2. தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதி

3. ஆமென் என்பவர்

இச்சபையின் நற்குணங்கள் ஒன்றும் கூறப்படவில்லை.

தீய குணங்கள்:

1. வெதுவெதுப்பான நிலை

2. நிர்பாக்கியமுள்ளது

3. பரிதபிக்கபட்டது

4. ஆவிக்குரிய நிலையில் தரித்திரம்

5. ஆவிக்குரிய கண் குருடாயிருந்தது

6. ஆவிக்குரிய நிலையில் நிர்வாகி

7. குறைவிருந்தும், ஒரு குறைவும் இல்லை என்கிற மாய்மாலம்

எச்சரிப்பு:

1. நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், வெண் வஸ்திரங்களையும்,
கண்களுக்கு கலிக்கத்தையும் வாங்கிக் கொள்.

2. நீ ஜாக்கிரதையாய் இருந்து மனம் திரும்பு

ஜெயம் கொள்ளுகிறவனுக்கு வாக்குத்தத்தம்:

லூக்கா: 22:28-30; எபேசியர்: 2:7; 2தீமோத்தேயு: 2:12; வெளிபடுத்தல்: 20:6

கிறிஸ்துவின் சிங்காசனத்தில் அவரோடுகூட உட்காரும் சிலாக்கியம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.