வெளிபடுத்தின விசேஷம் - விளக்கவுரை. - (Pr.Charles MSK) அதிகாரம் 3:7-11 பிலதெல்பியா சபை ஒரு பார்வை:-

'பிலதெல்பியா'- என்றால் 'சகோதர சிநேகம்' என்று பொருள்.
(அடோல்பாஸ்ட் - சகோதர; பிலேயா - அன்பு)

பிலதெல்பியா பட்டணம்:

இது சர்தையிலிருந்து 28 மைல் தென் கிழக்கிலிருந்தது. லீதியா, மீசியா,
பிரீசியா, ஆகிய நாடுகளின் நுழைவாயிலாக இப்பட்டணம் இருந்தது.

திபேரியு ராயன் .ப்பட்டணத்தைச் சீரமைக்க பெரிதும் உதவினான். எனவே,
கொஞ்சக் காலத்திற்கு இப்பட்டணத்திற்கு ராயனின் புதுப் பட்டணம் என்ற பெயர்
இருந்தது.

ஆனால், மீண்டும் பழைய பெயரிலேயே அழைக்கப்பட்டது. அடிக்கடி இங்கு
நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமாய் இருந்தது.

இன்றைக்கும் இப்பட்டணம் 'அலாஷேகிர்' என்ற பெயரில் இருக்கிறது. இதன்
இன்றைய ஜனத்தொகை 10,000. இதில் இப்போது 12 சபைகள் இருக்கிறது.
'அலாஷேகிர்' - தேவனுடைய பட்டணம் என்று பொருள்.

இச் சபைக்கான செய்தி:-

1. பரிசுத்தமுள்ளவர்
2. சத்தியமுள்ளவர்
3. தாவீதின் திறவுகோலை உடையவர்
4. ஒருவரும் பூட்டக் கூடாதபடி திறக்கிறவர்
5. ஒருவரும் திறக்கக்கூடாதபடி பூட்டுகிறவர்
கிறிஸ்து பரிசுத்தமுள்ள ராஜாவாக இச்சபைக்கு வெளிப்படுகிறார்.

தாவீதின் திறவுகோல் என்பது ராஜரீக அதிகாரத்தையும் புதிய எருசலேமைத்
திறந்து ஆட்சி செய்யும் அதிகாரத்தையும் குறிக்கிறது.

ஒருவரும் திறக்கக்கூடாதபடி பூட்டுகிறவர், ஒருவரும் பூட்டக் கூடாதபடி
திறக்கிறவர் என்பது அவருடைய சர்வ வல்லமையையும், சர்வ அதிகாரத்தையும்
காட்டுகிறது. மனித சக்திகள் அவருடைய வல்லமையை மேற்கொள்ளாது என்பது
பொருள். ஏதேன் தோட்டத்தின் வழியை ஒருவரும் நுழையக் கூடாதபடிக்கு
அடைத்தார். புதிய ஏற்பாட்டில் தமது இரத்தத்தின் மூலமாக ஒருவரும்
பூட்டக்கூடாதபடிக்கு தேவாலயத்தின் திரைச்சீலையை மேலிருந்து கீழாக
கிழித்தார். மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் யாவரும் போக வழி செய்தார்.

சுவிசேஸத்திற்கு யூதரும், சனகரீப் சங்கமும் ரோம அரசாங்கமும் கதவைப் பூட்ட
முயன்றனர். ஆனால், ஒரு மனித சக்தியினாலும் அதை பூட்ட முடியவில்லை. சகொதர
அன்புள்ள சபைக்கு கிறிஸ்து தம்மை இவ்விதம் வெளிப்படுத்துகிறார்.

நற்குணங்கள்:

1. நற்கிரியை

2. கொஞ்சம் பெலனிருந்தும் மறுதலியாமல் வசனத்தை தக்க கொள்ளுதல்

3. பொறுமையாய் வசனத்தைக் கைக் கொள்ளுதல்

இச்சபைக்கு தீய குணங்கள் ஒன்றும் சொல்லப்படவில்லை. ஒருவனும் உன்
கிரீடத்தை எடுத்தக் கொள்ளாதபடி உனக்குள்ளதைப் பற்றிக் கொண்டிரு என்று
ஆலோசனை மட்டும் கூறப்பட்டுள்ளது.

ஜெயம் கொள்ளுகிறவனுக்கு வாக்குத்தத்தம்:

1. திறந்த வாசலை உனக்கு முன் வைத்திருக்கிறேன்.

2. சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலரை உனக்கு முன்பாகப் பணியச் செய்வேன்.

3. சோதனைக் காலத்தில் உன்னைத் தப்புவிப்பேன்.

4. இதோ சீக்கிரமாய் வருகிறேன்.

5. ஜெயம் கொள்ளுகிறவனை தேவாலயத்தில் தூணாக்குவேன்.

6. அதிலிருந்து அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை.

7. தேவனுடைய நாமத்தையும் பரம எருசலேமின் நாமத்தையும் என் புதிய
நாமத்தையும் அவன் மேல் எழுதுவேன்.

சாத்தானின் கூட்டத்தார்: (3:9)

இது கிறிஸ்துவை மறுதலித்த யூதர்களைக் குறிக்கிறது. தேவனுடைய ஜனமே யூதர்.
ஆனால், உண்மையான யூதர் மாமிசத்தின்படி ஆபிரகாமின் சந்ததியில் பிறந்தவரும்
அல்ல.

ஆபிரகாம் விசுவாசத்தின் அடிப்படையில் நீதிமான் ஆனான். எனவே, மெய்யாய்
கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளுகிற ஒவ்வொருவரும், எந்த ஜாதியாய், கொத்திரமாய்
இருந்தாலும் அவன்தான் மெய்யான யூதன். (ரோமர்: 2:28,29) கிறிஸ்துவை
மறுதலித்தும், தங்களை தேவ ஜனமென்றும் தங்களைப் பெருமை பாராட்டிக்
கொண்டவர்களுக்கு இந்த எச்சரிப்புக் கொடுக்கப் பட்டிருக்கிறது.

ஆலயத்தின் தூண்:

ஆலயமென்பது சபையையும், புதிய எருசலேமையும் குறிக்கிறது. தூண் என்பது
விசுவாசிகள் சத்தியத்தில் உறுதியாய் நிலைத்து நிற்பதைக் காட்டுகிறது.
(கலாத்தியர்: 2:9 ; 1தீமோத்தேயு: 3:16)
தேவனுடைய நாமம், தேவனுடைய நகரத்தின் நாமம், கிறிஸ்தவின் புதிய நாமம்:
தேவனுடைய நாமம் எழுதப்படல் என்பது அவன் தேவனுக்கு சொந்தமானவன் என்பதைக்
காட்டுகிறது. புதிய எருசலேமில் வாசம் பண்ண பிரஜா உரிமை (குடியுரிமை)
பெற்றவன் என்பதைக் காட்ட அவன் மேல் தேவனுடைய நகரத்தின் நாமம்
எழுதப்படுகிறது.

கிறிஸ்துவின் புதிய நாமம் என்பது 2 ம் வருகையில் கிறிஸ்து மணவாளனாய்
வரும்போது சபையாகிய மணவாட்டி, மணவாளனாகிய கிறிஸ்துவோடு இணைக்கப்படுவதன்
மூலமாக புதிய நாமத்தைப் பெறுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.