வெளிபடுத்தின விசேஷம் - விளக்கவுரை. - (Pr.Charles MSK) 4:1 முதல் 5:14 வரை உள்ள பகுதி:-

மேலே உள்ள வசன பகுதி பரலோகத்தில் தேவனுடைய சிங்காசனம் இருக்கும்
சிறப்பையும் அங்கு நடக்கும் ஆராதனைகளையும் கூறுகிறது.

யோவான் கண்ட இந்த பரலோக காட்சியை போலவே தரிசனம் கண்டவர்கள்:

1. ஏசாயா (ஏசா 6:1-13),

2. எசேக்கியல் (எசே 1:4-28),

3. தானியேல் (தானி 7:9-14).

இனி இந்த அதிகாரத்தில் உள்ள சில வசனங்களுக்கு விளக்கங்களை பார்க்கலாம்.

வெளி 4:1

இவைகளுக்குப்பின்பு, இதோ, பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக்
கண்டேன். முன்னே எக்காளசத்தம்போல என்னுடனே பேச நான் கேட்டிருந்த
சத்தமானது: இங்கே ஏறிவா, இவைகளுக்குப்பின்பு சம்பவிக்கவேண்டியவைகளை
உனக்குக் காண்பிப்பேன் என்று விளம்பினது.

விளக்கம்:-

"இவைகளுக்கு பின்பு" என்று கூறப்பட்டிருப்பதின் பொருள் "சபைகளின்
காலத்திற்கு பின்பு", "சபை எடுத்துக் கொள்ளபட்ட பின்பு" என்பதாகும்.

உபத்திரவ காலம் தொடங்குவதற்கு முன்பு சபை எடுத்துக் கொள்ளபடும் என்பதற்கு
இதுவும் ஒரு ஆதாரமாக உள்ளது.

இதனுடன் கீழே உள்ள வசனங்களையும் படித்து பாருங்கள்.

ஏசாயா
57 அதிகாரம்

1. நீதிமான் மடிந்துபோகிறான், ஒருவரும் அதை மனதில் வைக்கிறதில்லை;
புத்திமான்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள், ஆனாலும்
தீங்குவராததற்குமுன்னே நீதிமான் எடுத்துக்கொள்ளப்படுகிறான் என்பதைச்
சிந்திப்பார் இல்லை.

லூக்கா
21 அதிகாரம்

36. ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி,
மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு,
எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்.

யோவான்
14 அதிகாரம்

2. என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு;
அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு
ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்.

3. நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற
இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை
என்னிடத்தில் சேர்த்துக் கொள்ளுவேன்.

I தெசலோனிக்கேயர்
1 அதிகாரம்

10. அவர் மரித்தோரிலிருந்தெழுப்பினவரும், இனிவரும் கோபாக்கினையினின்று
நம்மை நீங்கலாக்கி இரட்சிக்கிறவருமாயிருக்கிற அவருடைய குமாரனாகிய இயேசு
பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறதையும்,
அறிவிக்கிறார்களே.

II தெசலோனிக்கேயர்
2 அதிகாரம்

6. அவன் தன் காலத்திலே வெளிப்படும்படிக்கு, இப்பொழுது அவனைத்
தடைசெய்கிறது இன்னதென்றும் அறிந்திருக்கிறீர்கள்.

7. அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியைசெய்கிறது; ஆனாலும்
தடைசெய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்படுமுன்னே அது வெளிப்படாது.

8. நீக்கப்படும்போது, அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான்;
அவனைக்கர்த்தர்தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தம்முடைய
வருகையின் பிரசன்னத்தினாலே நாசம்பண்ணுவார்.

9. அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி சகல
வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும்,

10. கெட்டுப் போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித
வஞ்சகத்தோடும் இருக்கும். இரட்சிக்கப்படத்தக்கதாய்ச் சத்தியத்தின்மேலுள்ள
அன்பை அவர்கள் அங்கிகரியாமற்போனபடியால் அப்படி நடக்கும்.

11. ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும்
ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு,

12. அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன்
அவர்களுக்கு அனுப்புவார்.

வெளி
3 அதிகாரம்

10. என் பொறுமையைக்குறித்துச்சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால்,
பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப்
பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனைக்காலத்திற்குத் தப்பும்படி
நானும் உன்னைக் காப்பேன்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.