வெளிபடுத்தின விசேஷம் - விளக்கவுரை. - (Pr.Charles MSK) அதிகாரம் 4 வசனங்கள் 7-8

7. முதலாம் ஜீவன் சிங்கத்திற் கொப்பாகவும், இரண்டாம் ஜீவன்
காளைக்கொப்பாகவும், மூன்றாம் ஜீவன் மனுஷமுகம்போன்ற முகமுள்ளதாகவும்,
நான்காம் ஜீவன் பறக்கிற கழுகுக்கு ஒப்பாகவுமிருந்தன.

8. அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்று அவ்வாறு சிறகுகளுள்ளவைகளும்,
சுற்றிலும் உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாயிருந்தன. அவைகள்:
இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய
கர்த்த ர்பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும்
ஓய்வில்லாமல் சொல்லிக் கொண்டிருந்தன.

விளக்கம்:-

நான்கு ஜீவன்கள்:

இந்த நான்கு ஜீவன்களும் சிறப்பான தேவதூதர் (சேராபீம்) என்று கருதப்படுகிறது.

பரலோகத்தில் பல உயிரினங்கள் உள்ளது அவற்றுள் சிலவற்றை கவணிப்போம்.

1. சேராபீன்கள்:

இவை தேவனுடைய நேரடி பிரசன்னத்தில் இருந்து அவரை துதிக்கிறவர்கள் ஆவர்.
இந்த சேராபீன்கள் தேவதூதரில் ஒரு வகை என கருதப்படுகிறது. இவர்கள்
எப்பொழுதும் தேவனுடைய சமூகத்தில் நின்று அவரை புகழ்ந்து போற்றி
கொண்டிருப்பார்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு அருகாமையில் நான்கு
ஜீவன்கள் இருந்தன (ஏசா 6:2; வெளி 5:6-14; 6:1-8; 7:11; 14:3; 15:7;
19:4).

2. கேருபீன்கள்:

கேருபீன்கள் தேவனுடைய பிரசன்னத்தில் வாழும் உயிரிகள் ஆகும். அவை செய்யும்
பணிகளில் ஒன்று ஜீவ விருட்சத்திற்கு போகும் வழியை பாதுகாப்பது ஆகும்.

மேலும் தேவன் பயணம் செய்யும் போது கேருபீன்களை பயன்படுத்துகிறார் (2சாமு
22:11; சங் 18:10).

தேவனது சிங்காசனத்தை (அவர் பயணம் செய்யும் போது பயன் படுத்தும்
சிங்காசனத்தை) எடுத்து செல்லும் பணி கேருபீன்களுடையது ஆகும் (எசே 10:1-22
உடன் எசே 1:4-27).

வேதத்தில் ஒருமையாக கேரூப் என்று மூல மொழியில் 26 இடங்களில் எழுதப்பட்டுள்ளது.

எசே 28:14,16 ஆகிய இரு இடங்களிலும் கேரூப் என்றும் மற்ற 24 இடங்களிலும்
கேருபீன் என்றும் தமிழாக்கம் செய்து வேதத்தில் எழுதப்பட்டுள்ளது. கேரூப்
என்பதின் பன்மை கேருபீன்கள் என கருதப்படுகிறது.

சில வசன ஆதாரங்கள் (ஆதி 3:24; எசே 10:1-20; 11:22; 41:18,20,25)

லூசிபர் என்று சொல்லப்படும் "சாத்தான்" இந்த கேருபின் வகையை சேர்ந்தவன்
ஆவான். அவன் கேரூபாக இருந்து சாத்தானாக மாறியதை குறித்து (ஏசா 14:12-14;
எசே 28:13:18) ஆகிய வசனங்களில் காணலாம்.

3. அக்கினிமயமான குதிரைகளும் வேறு பல குதிரைகளும் இருப்பதை (2இரா 2:11;
6:17; சகரி 6:1-8; வெளி 6:1-8; 9:11:21) ஆகிய பகுதியில் காணலாம்.

4. பிரதான தேவ தூதர்களும் உள்ளனர்.

5. தேவதூதராக இருந்து லூசிபருடன் சேர்ந்து தேவனுக்கு எதிராக புரட்சி
செய்து தோற்க்கடிக்கபட்டு, பிசாசுகளாக மாறினவர்களும் ஆவிக்குரிய
உயிரினங்கள் ஆவர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.