8. அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்று அவ்வாறு சிறகுகளுள்ளவைகளும்,
சுற்றிலும் உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாயிருந்தன. அவைகள்:
இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய
கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும்
ஓய்வில்லாமல் சொல்லிக் கொண்டிருந்தன.
விளக்கம்:-
வெளி 4:8 ஐயும் ஏசா 6:3ஐயும் ஒப்பிட்டால் தேவனுடைய மிக உயர்ந்த பண்பு,
மிகவும் போற்றுவதற்க்குரிய அவரது பரிசுத்தம் என்பது தெரிகிறது.
அவர் பரிசுத்தராக இல்லாதிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று சற்றே
சிந்தித்தால் அவரது பரிசுத்தத்தின் முக்கியத்துவம், மேண்மை ஆகியவை
விளங்கும்.
இந்த ஆராதனையில் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர் என்று மும்முறை
கூறுவதால் இது பிதா பரிசுத்தர், குமாரன் பரிசுத்தர், ஆவியானவர்
பரிசுத்தர் என்பதை குறிக்கிறது. இம்மூவரும் இனைந்த தேவதுவத்தை
ஆராதிக்கின்றனர்.
மேலும்,
இதுவரை பரிசுத்தராயிருந்தார்,
இப்பொழுது பரிசுத்தராக இருக்கிறார்,
இனிமேலும் பரிசுத்தராயிருப்பார் என்றும் பறை சாற்றுகின்றனர்.
வெளிபடுத்தின விசேஷம் - விளக்கவுரை. - (Pr.Charles MSK) அதிகாரம் 4 வசனம் 8
0
April 04, 2016
Tags