வெளிபடுத்தின விசேஷம் - விளக்கவுரை. - (Pr.Charles MSK) அதிகாரம் 4 வசனம் 11

"கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்
கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர், நீரே சகலத்தையும்
சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும்
சிருஷ்டிக்கப் பட்டவைகளுமாயிருக்கிறது என்றார்கள்".

விளக்கம் :-

சகலத்தையும் சிருஷ்டித்தீர் :

* வானம்,

* விண்மீன்கள்,

* வானத்திலுள்ள நெபுலாக்கள்,

* அவற்றிற்கான எரிபொருள்,

* சீராக எரியும் தன்மை,

* வானத்திலுள்ள கரும் ஓட்டைகள் (Black holes),

* கோள்கள்,

* வால்
நட்ச்சத்திரங்கள்,
அவைகளின் இயக்கத்திற்கான ஒழுங்கான பாதைகள்,

* தேவதூதர்கள்,
அவர்களுக்கென நியதிகள்,

* பூமி,

* உயிர்கள்,
உயிர்களுக்கு தேவையான ஆக்ஸிஜன்,

* மூச்சு விடுவதால் இழக்கும் ஆக்ஸிஜனை ஈடுசெய்வதற்காக தாவரங்கள் ஆக்ஸிஜனை
தயாரிக்கும் திட்டம்,

* தண்ணீர்,

* கடலில் இருக்கும் தண்ணீர் நீராவியாகி மேகங்களாகி மழையாக பொழிவதின்
மூலம் நல்ல தண்ணீர்,

* காலங்கள்,

* விலங்குகள்,

* விலங்குகளின் எண்ணிக்கையின் திட்டம் (சிங்கம், புலி, ஓநாய் போன்றவை
ஒவ்வொரு முறையும் பல குட்டிகளை ஈன்ற போதிலும் ஒவ்வொரு முறையும் ஒரு
குட்டி ஈனும் மான் இனம் இன்றும் உலகில் இருப்பது),

* மரங்களின் பெருகத்திலும் ஒழுங்கு முறை (ஒரு ஆண்டிற்குப் பல்லாயிரம்
கொட்டைகள் உண்டாக்கும் வேப்பமரத்தின் எல்லா விதைகளும் முளைத்து, பரவினால்
என்ன ஆகும்?),

* அழகிய வாசனையுள்ள பூக்கள்,

* மரங்கள் இலைகள் மூலமாக சுவாசித்தல்,

* உணவு வரிசை,

* இனப் பெருக்கத்திற்கான பலவழி முறைகள்,

* கண்ணுக்கு தெரியாத அணுக்களுக்கும் விதிகள்,

* நிறங்கள்,

* இசை,

* அன்பு,
பொறுமை,
இரக்கம் போன்ற நற்பண்புகள்,

* தனது படைப்புக்காக அநேக திட்டங்களும், ஆற்றல்களும் ஆகிய நம்மால் சொல்லி
முடியாத யாவற்றையும் தேவன் படைத்தார்.

* நம் தலை முடியிலிருந்து உள்ளங்கால் வரை மிகவும் ஞாணமாக திட்டமிட்டு
படைத்துள்ளார்.

* பிதாவும் குமாரனும் ஆவியானவரும் படைப்பில் ஈடுபட்டதால் வெளி 4:11இன்
ஆராதனை மூவருக்கும் ஏறெடுக்கப்பட்டது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.