ஆதியாகமம் 1:5
5. தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று
பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று.
விளக்கம்:-
I. வெளிச்சம் உண்டாகக்கடவது என்றவுடன் சூரியன், சந்திரன், விண்மீன்கள்
ஆகியவற்றின் ஒளி பூமியின் மீது பட்டது.
ஆனால் பூமியை சுற்றிலும் மேகமூட்டம் இருந்ததால் அவற்றை நேரடியாக காண முடியவில்லை.
மேகம் இருந்த போதிலும் சூரிய ஒளி இருந்ததால் சாயங்காலத்தையும் (மாலை)
காலையையும் நன்கு கண்டுபிடிக்க முடிந்தது.
எனவே தான் முதலாம் நாள் என்று இந்நாள் கூறப்பட்டுள்ளது. இது இந்த
யுகத்தின் முதலாம் நாள். படைப்பின் ஆதியின் முதல் நாள் அல்ல. இதனுடன்
ஆதி 1:2-3; 14-18 ஆகிய வசனங்களுக்கான விளக்கத்தையும் படியுங்கள் நன்கு
புரியும்.
II. வெளிச்சம் தெரிந்த பின்னர் தான் சாயங்காலமும் விடியற்காலமும் காணப்பட்டன.
ஆவியானவர் இதற்கு முன்பே பூமியின் மீதிருந்த நீரின் மீது அசைவாடிக் கொண்டிருந்தார்.
எனவே, ஆதி என்று முதலாம் வசனத்தில் கூறப்பட்ட காலம் இந்த முதலாம்
நாளுக்கு முன்பு இருந்த காலத்தை குறிக்கிறது. முதலாம் நாள் என்பது இந்த
யுகத்தின் முதலாம் நாள் ஆகும்.