வெளிபடுத்தின விசேஷம் - விளக்கவுரை. - (Pr.Charles MSK) அதிகாரம் 2 வசனங்கள் 4-5

4. ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில்
எனக்குக் குறை உண்டு.

5. ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து,
மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக; இல்லாவிட்டால் நான்
சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன்
விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்.

விளக்கம்:-

எபேசு சபையில் எத்தனையோ சிறப்புகள் இருந்த போதிலும் அவர்கள் ஆதியில்
கொண்டிருந்த அன்பை விட்டு விலகிவிட்டனர்.

இரட்சிக்கப்பட்டவுடன், ஆவியானவரின் அபிஷேகத்தை பெற்றவுடன், அநேகர் ஆவலோடு
வேத தியானம், ஜெபம், ஐக்கியம், ஆத்தும ஆதாயம் ஆகியவற்றில் ஈடுபடுவார்கள்.

காலம் செல்லும் போது குளிர்ந்து போவார்கள். இப்படிப்பட்டவர்களை கர்த்தர்
கடிந்து கொள்கிறார்.

நீர் ஆதியில் அன்பு கொண்டிருந்தீரா?

அதில் குறைவு ஏற்பட்டுள்ளதா?

இயேசுவின் மீது அன்பு செலுத்த நீர் என்ன செய்து வருகிறீர்?

கர்த்தரின் மீதுள்ள அன்பினால் ஏவப்பட்டு இன்னும் என்ன செய்யலாம்?

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.