வேத ஆராய்ச்சி - (Pr.Charles MSK) ஆதியாகமம் 1:9-13

ஆதியாகமம் 1:9-13

9. பின்பு தேவன்: வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும்,
வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.

10. தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச்
சமுத்திரம் என்றும் பேரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.

11. அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும்
பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத்
தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும்
முளைப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.

12. பூமியானது புல்லையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே விதையைப்
பிறப்பிக்கும் பூண்டுகளையும் தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில்
தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது;
தேவன் அது நல்லது என்று கண்டார்.

13. சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள் ஆயிற்று.

விளக்கம்:-

மேலே கொடுக்கப்பட்டுள்ள வசனங்களில் தேவன் மூன்றாம் நாளில் என்ன படைத்தார்
என்ற விவரம் கொடுக்கபட்டுள்ளது இந்த மூன்றாம் நாள் யூதர்களுக்கு
விசேஷித்த நாள் ஆகும்.

மூன்றாம் நாளின் சிறப்பு:-

தேவன் ஆறு நாளில் தன் படைப்பின் பணியை முடித்தார். ஒவ்வொரு நாளும் தன்
படைப்பை கண்டு "நல்லது" என்று கண்டார் என சொல்ல பட்டிருக்கும்.

இந்த மூன்றாம் நாளை தவிர மற்ற ஐந்து நாட்களிலும் "தேவன் நல்லது என்று
கண்டார்" என்ற சொற் தொடர் ஒரு முறை தான் பயன்படுத்தப் பட்டிருக்கும்

ஆனால் மூன்றாம் நாள் (செவ்வாய் கிழமை) படைப்பில் "தேவன் நல்லது என்று
கண்டார்" என்ற சொற் தொடர் இரண்டு முறை பயன்படுத்தப் பட்டிருக்கும்
(வச.10,12).

இதன் காரணமாக மூன்றாம் நாள் (திங்கள் மாலை முதல் செவ்வாய் மாலை வரை)
நல்ல நாள் என யூதர்கள் கருதுகின்றனர்.

எனவே திருமணங்கள் போன்ற வைபவங்களை மூன்றாம் நாளில் நடத்துவது யூதர்களின்
பொதுவான வழக்கம் ஆகும்.

(எ.கா.)

இயேசு கிறிஸ்து பங்கேற்ற காணாவூர் திருமணம் நடைப்பெற்ற நாள் மூன்றாம்
நாள் ஆகும் (யோவா 2:1)

யோவான்
2 அதிகாரம்

1. மூன்றாம்நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது;
இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள்.

இக்கால தமிழர் செவ்வாய் கிழமைகளில் திருமணங்கள் நடத்துவதை தவிர்க்கின்றனர்.

"தேவன் படைத்த ஒவ்வொரு நாளும் நல்ல நாள்தான்"

GOD Blass you

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.