வேத ஆராய்ச்சி - (Pr.Charles MSK) ஆதியாகமம் 1:26-27

ஆதியாகமம்
1 அதிகாரம்

26. பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை
உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப்
பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும்
சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.

27. தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே
சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.

I. சாயல், ரூபம் (வெளிதோற்றம், உள்ளார்ந்த அமைப்பு):-

தேவன் ஆவியாயிருக்கிறார் (யோவா 4:24) அவருக்கு ஆவிக்குரிய சரீரம் உண்டு
என்பதை வேதம் கூறுகிறது.

சில உதாரணங்கள்:-

1. கால்கள் (யாத் 24:10)

2. முகம் (யாத் 33:20)

3. கரம் (யாத் 33:22)

4. பின்பக்கம் (யாத் 33:23)

5. மனித சாயல் (எசே 1:26)

6. காது, நாசி, வாய், கால்கள், சத்தம், சுவாசம், கைகள் (2சாமு 22:7,9,10,14,16,17)

7. இடுப்பு (எசே 1:27)

8. தலை, தலைமயிர் (தானி 7:9).

எனவே தேவனுடைய சாயலாக சரீர அமைப்பு பெற்ற மனிதன் உள்ளார்ந்த அமைப்பாக
ஆவி, ஆத்துமா, உடல் என்ற மூன்று பகுதிகளால் ஆனவன் ஆவான்.

தேவனுக்கு ஆவியும் ஆத்துமாவும் உண்டு (ஆதி 6:3; மத் 12:18; எபி 10:38)
தேவனுக்கு சரீரம் உண்டு என்பதை மேலே பார்த்தோம்.

இது தவிர தேவனுடைய அளவற்ற ஞானம், அளவற்ற ஆற்றல் போன்றவை மனிதனுக்கு
இல்லாத போதிலும் அவற்றில் ஒரு சிறிய அளவும் அவரது அன்பு, பேச்சு,
உருவமைக்கும் திறன் போன்ற சில பண்புகளின் பிரதிபளிப்பும் மனிதனிடம்
உள்ளது.

மனிதன் ஒரு நாளும் தேவனாக முடியாது என்ற போதிலும் அவரது அன்பு, உண்மை,
பொறுமை, மன்னிக்கும் தன்மை, இரக்கம் போன்ற பண்புகளை பிரதிபலிக்கலாம்.

மனிதன் மட்டுமே அவருடைய சாயலின் படியும் ரூபத்தின் படியும் படைக்கபட்டு
உள்ளபடியால் அவன் தேவனுடைய பார்வையில் மிகவும் முக்கியமானவன்.

எந்த மிருகமும் இவ்வாறு படைக்கபடவில்லை. மிருகத்தை விட மனிதன்
உயர்ந்தவன். தேவ சாயலாக படைக்கப்பட்ட நாம் நம்மையும் பிற மனிதரையும்
தரக்குறைவாக எடை போடக்கூடாது.

II. மனிதன் தானாக வந்தவன் அல்ல:-

ஆதி 1:26-27 ல் மனிதன் படைக்கப்பட்டான் என்ற பொதுவான உண்மையும் ஆதி
2:7,21-23 ல் அவன் எவ்வாறு படைக்கப்பட்டான் என்பதும் கூறப்பட்டுள்ளன.
மனிதன் தானாக உருவாகவில்லை உருவாக்பட்டான் என்பதை இயேசு கிறிஸ்து
உறுதிபடுத்தியுள்ளார் (மத் 18:4; மாற் 10:6).

III. ஆவி, ஆத்துமா என்பது என்ன?

மனிதனின் உடலுக்குள் "நான்" என்று கூறும் பகுதியே உண்மையான "உள்ளான மனிதன்".

உடலை விட்டு பிரிந்த பின்னரும் ஆவியாயிருகிற அவனுக்கு ஆவிக்குரிய
விரல்கள், நாவு போன்ற உடலின் பாகங்களை கொண்ட ஆவிக்குரிய உடல் உண்டு (லூக்
16:24).

உள்ளான மனிதன் ஆவி, ஆத்துமா என்ற இரு கூறுகளால் ஆனவன்.

ஆத்துமா என்பது அன்பு, கோபம், வெறுப்பு, பொறாமை போன்ற உணர்ச்சிகளில்
இருப்பிடம் என்றும் ஆவி என்பது பகுத்தறிந்து தீர்மானம் செய்வது என்றும்
வேத வல்லுனர்கள் கருதுகின்றனர் (Spirit is one which decides).

ஆவியின் ஒரு பகுதியாக மனசாட்சி உள்ளது. "மனசாட்சி என்பது மனிதனின்
ஆவியில் ஒலிக்கும் தேவனின் குரலாகும்".

நாம் காணும் மனிதன் ஆவி ஆத்துமா சரீரம் கொண்டவன். ஆவி தேவனையும் ஆத்துமா
தன்னையும் (மனிதனையும்) சரீரம் உலகையும் உனரும் தன்மை உடையவை என
கருதப்படுகிறது.

ஆத்துமாவை குறித்து இதறக்கு சற்று மாறுபட்ட கருத்தும் உள்ளது. அவை:

விலங்குகளுக்கும் அன்பு கோபம் போன்ற உணர்ச்சிகள் இருப்பதாலும் அவற்றிற்கு
ஆத்துமா இல்லை என்பதாலும் ஆத்துமா என்பது உணர்ச்சிகளின் இருப்பிடமாக கருத
முடியாது என்பதையும் பாவம் செய்த ஆத்துமா காகும் (எசே 18:4) என்பதையும்
கருத்தில் கொண்டால்,

"மனிதனில் தேவனுடன் தொடர்பு கொள்ளும் பகுதி அல்லது தேவனை உணரும் பகுதி
ஆத்துமா ஆகும்" என இக்கருத்து கூறுகிறது.

"தேவதுவத்தில் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி" என்றிருப்பதை போன்று மனிதன்
ஆவி, ஆத்துமா, சரீரமாக இருக்கிறான் என்றும் கருதலாம்".

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.