கர்த்தர் சொல்லாமல் பவுல் சொல்கின்றாரா?

I கொரிந்தியர் 7:12

மற்றவர்களைக் குறித்துக் கர்த்தர் அல்ல, நானே சொல்லுகிறதாவது: சகோதர
னொருவனுடைய மனைவி அவிசுவாசியாய் இருந்தும், அவனுடனே வாசமாயிருக்க
அவளுக்குச் சம்மதமிருந்தால், அவன் அவளைத் தள்ளி விடாதிருக்கக்கடவன்.

கர்த்தரல்ல நானே என்று சொல்வதால் இறைவன் சொல்லாமல் பவுல் சொல்கிறார்
என்று அர்த்தம் அல்ல.

இயேசுகிறிஸ்து வாழ்ந்த காலங்களில் இயேசுகிறிஸ்து உபதேசிக்காததை பவுல்
சொல்கின்றார்.
ஏனென்றால் இயேசுகிறிஸ்து சொல்லியிருந்தார், தான் சொல்லாத அநேக காரியங்களை
பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குச் சொல்லுவார் என்று.

யோவான் 16:12-13 இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்ல
வேண்டிய தாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள்.

13. சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை
நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள்
யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.

இந்த முன்னறிவிப்பின் படி பவுலின் வாயினூடாக சத்திய ஆவியானவர் புதிய
காரியங்களை வெளிப்படுத்துகின்றார்.

ஆகவேதான் பவுல் கர்த்தர் இதைச் சொல்லவில்லை, நானே இப்போது சொல்கின்றேன்
என்று பவுல் சொல்கின்றார்.

ஆகவே, பரிசுத்த வேதத்தின் வசனங்களை சரியாக புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

இயேசுகிறிஸ்து உங்களை நேசிக்கின்றார்.

மனந்திரும்புங்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.