Mount Hermon
Arabic: Jabal ash-Shaykh
Hebrew: Har Hermon
எர்மோன் மலை (Mount Hermon,
அரபு மொழி: جبل حرمون , جبل الشيخ/ ALA-LC:Jabal al-Shaykh/ "Mountain
of the Chief" "Jabal Haramun";
எபிரேயம்: הר חרמון,Har Hermon, "Mount Hermon")
என்பது லெபனான் கிழக்கு மலைத் தொடரிலுள்ள மலைக் கூட்டமாகும்.
Pஇதன் சிகரம் சிரியாவிற்கும் லெபனானுக்கும் இடைப்பட்ட எல்லையில்
பரவியுள்ள இது கடல் மட்டத்திலிருந்து 2,814 மீட்டர் (9,232 அடி)
உயரத்தில் அமைந்துள்ளதும், சிரியாவின் உயரமிக்க இடமுமாகும்.
சிரியாவிற்கும் இசுரேல் கைப்பற்றிய பகுதிக்கிடையிலான ஐ.நா. ஈடுபாடற்ற
நிலை அவதானிப்பு படை பிரதேசத்தில் உள்ள உச்சியில் "எர்மோன் உணவு விடுதி"
அமைந்துள்ளது.
இங்கே உலகில் அதிகளவு நிரந்தர ஐ.நா.வின் படைகள் அமர்த்தப்பட்டுள்ளன.
எர்மோன் மலையின் தென் சரிவுப் பகுதிகள் இசுரேல் கைப்பற்றிய கோலான்
குன்றுகள் வரை பரவிக் காணப்படுகின்ற இடத்தில் "எர்மோன் மலை பனி நடை
ஓய்விடம்" அமைந்துள்ளது.
இங்குள்ள உச்சி 2,236 மீட்டர் (7,336 அடி) வரை உயர்ந்து இசுரேலிய
கட்டுப்பட்டுப் பிரதேசத்தில் உயரமான இடமாகக் காணப்படுகின்றது.