ஒரு முறை இரட்சிக்கப்பட்டால் போதுமா? பாகம் 1

"ஒரு முறை பரம ஈவான மீட்பை அனுபவித்தவர்கள் எப்படி வாழ்ந்தாலும்
இறுதியில் பரலோகத்தில் அனுமதிக்கப் படுவார்கள்" என்று ஒரு சிலர்
கருதுகின்றனர். அவ்வாறு இல்லை என்று வேறு சிலர் நம்புகின்றனர். இந்த
இரண்டு கருத்தையும் குறித்து வேதம் என்ன கூறுகிறது என்பதை தான் இதில்
ஆராய்ந்து அறிந்து கொள்ள போகிறோம்.

முன் குறிக்கபடுதல், தெரிந்துக்கொள்ள படுதல்:-

கீழே எழுதப்பட்டுள்ள வசனங்களை கவனமாக படியுங்கள். எந்தவொரு மனிதனும்
பிதாவினால் இழத்துக் கொள்ளப் படாவிட்டால் கிறிஸ்துவிடம் வர இயலாது (யோவா
6:37,44).

அவ்வாறு வருகின்றவர்களை பிதா உலக தோற்றத்திற்கு முன்பே தெரிந்துக்
கொண்டுள்ளார் (எபே 1:4-6; ரோம 8:29-30).

தேவன் தெரிந்து கொண்டவர்களை நீதிமான்களாக்குகிறார். யாரும் அவர்களை
ஆக்கினைக்குள்ளாக தீர்க்க முடியாது (ரோம 8:33-34).

எதுவும் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பை விட்டு,
தெரிந்து கொள்ளப்பட்டவர்களை பிரிக்கமாட்டாது (ரோம 8:35-39).

என்றும் பாதுகாப்பு:-

தமது மூலமாக தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல் செய்யும்படிக்கு
கிறிஸ்து எப்பொழுதும் உயிரோடு இருக்கிறபடியால் அவர்களை முற்றும்முடிய
இரட்சிக்க வல்லவராய் இருக்கிறார் (எபி 7:25).

இயேசுவை விசுவாசிப்பவன் கெட்டு போவதில்லை (யோவா 3:16;10:28).
ஆக்கினைகுள்ளாகவும் தீர்க்கபடுவதில்லை (யோவா 3:18).

வழுவாதபடி தமது மக்களை காப்பதற்கு தேவன் வல்லவராய் இருக்கிறார். அவர்
அப்படியே செய்வார் (யூதா 24-25; 1தெச 5:23-24).

இறுதி மீட்புக்கு அச்சாரமாக ஆவியானவர் அருளப்பட்டுள்ளார் (எபே 1:14).

ஒரு மனிதன் ஒரு முறை மீட்ப்பை பெற்றுவிட்டால் அவன் நிச்சயமாக பரலோகம்
சென்றடைவான் என்று இந்த வசனங்களில் இருந்து கருதப்படுகிறது.

மேலும், யோவா 1:12-13 இன்படி இயேசுவின் நாமத்தில் விசுவாசம் கொண்டு அவரை
ஏற்று கொண்டவர்கள் தேவனால் பிறந்தவர்கள் என்பதால் இவ்வாறு பிறந்தவர்கள்
அதன்பின் எவ்வாறு வாழ்ந்தாலும் அவருடைய பிள்ளைகளாகவே இருந்து பிள்ளைகளின்
உரிமையான பரலோக வாழ்வையும் பெறுவர் என்று முதல் பிரிவினர் கருதுகின்றனர்.

வேதம் இரு புறமும் கருக்குள்ள பட்டயம் அதன் ஒரு புறத்தை மட்டும் பார்த்து
விட்டு ஒரு முடிவுக்கு வருவது தவறான உபதேசத்திற்கு நேராக நடத்திவிடும்.

சாத்தான் இயேசுவை சோதிக்கும் போது வசனங்களை தான் பயன்படுத்தினான் இயேசு
அது தேவனுடைய வார்த்தை என அறிந்திருந்தும் அதற்க்கு மறு புறத்தையும்
கவனித்தார் எனவே தான் ஜெயம் எடுத்தார்.

இனி மறுபுறத்தை கவனிப்போம்.

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்:-

மீட்ப்பை பெற்று கொள்வதற்கும் கர்த்தரில் தொடர்ந்து வாழ்வதற்கும்
விசுவாசமே அடிப்படையாகும் (யோவா 1:12; 3:15-16,18,36; 6:40; ரோம 1:17;
3:28; 4:5; கலா 3:11).

விசுவாசம் இல்லாமல் தேவனுக்கு பிரியமாய் வாழ்வது கூடாத காரியம் (எபி 11:6).

பாவத்தில் விழும் விசுவாசிகள்:-

விசுவாசிகளாய் இருப்பவர்கள் ஒருசில பாவங்களில், தவறுகளில் விழுவது நடக்கக் கூடியதே.

பேதுரு மறுதலித்ததும் (லூக் 22:54:62) பேதுருவும் பர்னபாவும் சில
யூதர்களும் மாய்மாலமாக நடந்து கொண்டதும் (கலா 2:11-13) வேதத்தில்
கூறப்பட்டுள்ளது.

இவ்விதம் பலவித பாவங்களில் தவறி விழுவதை பின்மாற்றம் என்று கூறுகிறோம்.

பின்மாற்றமாய் இருப்பவர்கள் தங்கள் தவறுகளை உணர்ந்து மனந்திரும்பி
கர்த்தரிடம் பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்பு கேட்க்க வேண்டும்.
கர்த்தர் மனமிரங்கி அவர்கள் பாவங்கள் யாவையும் மன்னிப்பார் (1யோவா
1:8-10). நமக்கு, நாம், நம்முடைய என்று இவ்வசனங்களில் எழுதியிருப்பதில்
இருந்து, இதை எழுதிய யோவான் தன்னையும் செர்த்து எழுதி இருப்பதால்,
விசுவாசிகளுக்கு இந்த வேத பகுதி பொருந்தும் என்பது தெளிவு.

மேலும், விசுவாசியாய் இருப்பவன் பாவம் செய்தால் கர்த்தராகிய இயேசு
பிதாவிடம் பரிந்து பேசுகிறார் (1யோவா 2:1-2). இவ்வாறு நீதிமான் ஏழுதரம்
விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான் என்றும் வேதம் கூறுகிறது (நீதி
24:16).

என்றாலும்,

விசுவாசி சத்தியத்தை விட்டு விலகி மோசம் போக முடியும், அவ்வாறு
செய்கிறவன் நரகம் செல்ல (மரணமடைய) நேரிடும் என்றும் வேதம் கூறுகிறது
(யாக் 5:19-20). இந்த வசனத்தில் தப்பி போனவனை திருப்பாமல் விட்டு
விட்டால் அவன் பாவியாக என்னபட்டு மரணமடைகிறான்.

விசுவாசியாக இருந்தவன் பாவத்தில் தொடர்ந்து வாழ்ந்தால்:-

கர்த்தரிடம் பாவ மன்னிப்பாகிய மீட்பை பெற்று வாழ்ந்த ஒரு மனிதன்
பாவத்தில் விழுவதுமட்டுமின்றி தொடர்ந்து பாவத்தில் வாழ்ந்தால் சிறிது
சிறிதாக விசுவாசத்தை இழக்க நேரிடும் (1தீமோ 1:19).

முதலில் கொண்டிருந்த விசுவாசத்தை விட்டு விட்டால் ஆக்கினைக்கு உட்பட
நேரிடும் (1தீமோ 5:12)

பண ஆசையினால் விசுவாசத்தை விட்டு வழுவி போகிறவர்களும் ஞானமென்று பொய்யாய்
பெயர் பெற்றிருக்கிற கொள்கைகளை (தவறான அறிவியல் Science) பின்பற்றி
விசுவாசத்தை விட்டு வழுவி போனவர்களும் உண்டு (1தீமோ 6:10,20-21).

விசுவாசத்தை விட்டு வழுவி போனவனுக்கு தேவனிடத்தில் பங்கு ஏது (எபி 11:6).

இவ்வுலக பொருட்களின் மீது பற்று ஏற்பட்டதால் பவுலுடன் ஊழியம் செய்து வந்த
தேமா (பிலே 24) பிரிந்து போனான் (2தீமோ 4:10).

உலக ஆசை தேவனுக்கு விரோதமான பகை என்பதால் இதன் மூலம் தேமா தேவனுக்கு
பகைவனானான் (யாக் 4:4).

சத்தியத்தை அறியும் அறிவை அடைந்த பின்பு மன பூர்வமாக பாவம்
செய்கிறவர்களாக இருந்தால்.... விரோதிகளை பட்சிக்கும் கோபாக்கினை
இருக்கும் (எபி 10:26-27).

தொடரும்......

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.