உன்னதப்பாட்டு 1:2 அவர் தமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவாராக:
உமது நேசம் திராட்சரசத்தைப் பார்க்கிலும் இன்பமானது.
பதில் :-
இன்று அநேகம் பேர் முத்தம் என்ற சொல்லை வேதத்தில் கண்டுவிட்டால்,
பாருங்கள், எவ்வளவு ஆபாசமாகச் சொல்லுகின்றது உங்கள் வேதம் என்கின்றனர்.
இப்படிச் சொல்பவர்கள் உண்மையில் ஆபாச இச்சை உள்ளவர்கள்.
ஒரு தாய் தன் குழந்தைக்கு முத்தமிடல் ஆபாசமா?
ஒரு தந்தை தன் குழந்தைகளுக்கு முத்தமிடல் ஆபாசமா?
அல்லது
இறைவன் தன் குழந்தைகளாகிய மனிதர்களுக்கு முத்தமிடுவதுதான் ஆபாசமா?
இல்லயே.
சாலொமோன் உன்னதப்பாட்டுப் புத்தகத்தில், கிறிஸ்துவை மணவாளனாகவும்,
கிறிஸ்துவின் சபையை மணவாட்டியாகவும் வருணித்து எழுதுகிறார்.
முதலாவதாக கிறிஸ்துவின் சபையாகிய மணவாட்டி, தன்னுடைய மணவாளனாகிய
கிறிஸ்துவிடம் தன்னைப் பற்றிச் சொல்லுகிறாள்.
அதன்பின்பு அவள் எருசலேம் குமாரத்திகளிடம் தன்னைப்பற்றி விவரிக்கிறாள்.
மணவாளனுக்கு பெயர் எதுவும் கொடுக்கப்படவில்லை.அவரை எந்தவொரு
பட்டப்பெயரினாலோ, காரணப்பெயரினாலோமணவாட்டி அழைக்கவில்லை.
மணவாட்டி மணவாளனின் பெயரைக் குறிப்பிடாமலேயே
"அவர் தமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவாராக"
என்று
சொல்லுகிறாள்.
மணவாட்டி மணவாளினிடமிருந்து இரண்டு காரியங்களை எதிர்பார்க்கிறாள்.
அவையாவன:
1. மணவாளனுடைய நேசம்.
2. மணவாளனுடைய ஐக்கியம்.
மணவாளன் தன்னோடு ஒப்புரவாகி, தன்னிடத்தில் அன்பாயிருக்க வேண்டுமென்று
மணவாட்டி விரும்புகிறாள்.
இதற்கு
அடையாளமாக
"அவர் தமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவாராக"
என்று சொல்லுகிறாள். மணவாளன் மணவாட்டியை முத்தமிடுவது, அவர் மணவாட்டியோடு
ஒப்புரவாகி, அன்போடிருக்கிறார் என்பதற்கு அடையாளம்.
இது தேவனுடைய கிருபையையும், நேசத்தையும், சிலாக்கியத்தையும் பெற்றுக்
கொண்டதற்கு அடையாளமா யிருக்கிறது.
தேவனுடைய கிருபையுள்ள வார்த்தைகளை, சாலொமோன் இங்கு மணவாளனுடைய வாயின்
முத்தங்கள் என்று வர்ணிக்கிறார்.
மணவாட்டி தன்னுடைய மணவாளனிடம்,
"அவர் தமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவாராக"
என்று
சொல்லுகிறாள்.
முத்தம் ஒப்புரவாதலுக்கு அடையாளம்.
மணவாளன் மணவாட்டியின் மீது கோபமாயிராமல், மறுபடியும் அன்பாயிருக்கிறார் என்பதற்கு
அடையாளம்.
ஏசா தன் சகோதரன் யாக்கோபை, முத்தமிட்டு தன்னுடைய அன்பை வெளிப்படுத்தினார்.
தேவன் தம்முடைய சபையாரை, தம்முடைய வாயின் முத்தங்களால் முத்தமிடும் போது,
அவர் தம்முடைய தெய்வீக அன்பை, தம்முடைய சபையாருக்கு வெளிப்படுத்துகிறார்.
சுவிசேஷத்தின் கிருபை முத்தங்களால் வெளிப்படுத்தப்
பட்டிருக்கிறது.
கெட்ட குமாரன் புத்தி தெளிந்து, மனந்திருந்தி தன்னுடைய தகப்பனிடம்
திரும்பி வந்தான்.
தகப்பன் மிகுந்த சந்தோஷமடைந்து, தன்னுடைய குமாரனை கட்டிப்பிடித்து,
முத்தம்செய்தார்.
இது சமாதானத்தின் முத்தம். அதுபோலவே தேவன் தம்முடைய சபையை முத்தமிடும்
போது, அவர் நம்மோடு சமாதானமா
யிருக்கிறார் என்பதற்கும், நம்முடைய பாவங்களை மன்னித்து, நம்மோடு ஒப்புரவாகி
யிருக்கிறார் என்பதற்கும் அடையாளமா
யிருக்கிறது.
மணவாளன் தமது வாயின் முத்தங்களால் தன்னை முத்தமிடுவதற்கான காரணங்களையும்
மணவாட்டி சொல்லுகிறாள்.
மணவாட்டி தன் மணவாளனிடத்தில் அதிகமாய் அன்புகூருகிறாள். அவருடைய அன்பை
மேன்மைப் படுத்துகிறாள்.
அவருடைய அன்பை நேசிக்கிறாள்.
மணவாட்டி மணவாளனுடைய அன்பைப் பற்றிச் சொல்லும்போது,
"உமது நேசம் திராட்சரசத்தைப் பார்க்கிலும் இன்பமானது"
என்று அன்பான வார்த்தைகளை பயன்படுத்துகிறாள்.
நம்முடைய ஆத்துமா கிருபையுள்ளதாக இருக்கும் போது, அது கிறிஸ்துவின்
அன்பில் பிரியமாயிருக்கும்.
அது கிறிஸ்துவின் அன்பை நேசிக்கும்.
கிறிஸ்துவின்
அன்பை நாடும்.
கிறிஸ்துவின் அன்பினால் உண்டாகும் ஈவுகளை பெற்றுக்கொள்ள வேண்டுமென்று
வாஞ்சையோடிருக்கும்.
கிறிஸ்துவின் அன்பினால் நிரப்பப்பட்டிருக்கிற ஆத்துமாவுக்கு
உலகப்பிரகாரமான சந்தோஷத்தை விட கிறிஸ்துவின் நேசமே இன்பமானது.
இறைவன் ஆபாசம் அற்ற பரிசுத்த வேதாகமத்தையே கிறிஸ்தவர்களாகிய எங்களுக்குக்
கொடுத்திருக்கிறார்.
இனியாவது வேதாகமத்தை ஒழுங்காக வாசித்து இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
இயேசுகிறிஸ்து உங்களை நேசிக்கின்றார்.
ஆமென்!
நன்றி!.
உன்னதப்பாட்டு - கேள்வி பதில்கள் முத்தமிடுதல் என்றாலே அது இச்சைக்குரிய காரியமா?
0
April 04, 2016
Tags