1867-ல் எருசலேமுக்கு அருகில் ஒரு தண்ணீர் கால்வாய், கீகோன் ஊற்றிலிருந்து திரும்ப மலைக்குள் ஓடிக்கொண்டிருப்பதையும், அதிலிருந்து ஒரு சுரங்க கால்வாய் மேலே தாவீதின் நகரத்தை நோக்கி செல்வதையும் சார்ல்ஸ் வாரன் கண்டுபிடித்தார்.
இதுவே, தாவீதின் ஆட்கள் அந்த நகரத்துக்குள் முதலாவதாக நுழைந்த வழி.
2 சாமுவேல் 5:6-10
6. தேசத்திலே குடியிருக்கிற எபூசியர்மேல் யுத்தம்பண்ண ராஜாவானவன் தன் மனுஷரோடேகூட எருசலேமுக்குப் போனான். அவர்கள்: இதிலே பிரவேசிக்க தாவீதினால் கூடாது என்று எண்ணி, தாவீதை நோக்கி: நீ இதற்குள பிரவேசிப்பதில்லை; குருடரும் சப்பாணிகளும் உன்னைத் தடுப்பார்கள் என்று சொன்னார்கள்.
7. ஆனாலும் தாவீது சீயோன் கோட்டையைப் பிடித்தான்; அது தாவீதின் நகரமாயிற்று.
8. எவன் சாலகத்தின் வழியாய் ஏறி, எபூசியரையும் தாவீதின் ஆத்துமா பகைக்கிற சப்பாணிகளையும், குருடரையும் முறிய அடிக்கிறானோ, அவன் தலைவனாயிருப்பான் என்று தாவீது அன்றையதினம் சொல்லியிருந்தான்; அதனால் குருடனும் சப்பாணியும் வீட்டிலே வரலாகாது என்று சொல்லுகிறதுண்டு.
9.அந்தக் கோட்டையிலே தாவீது வாசம்பண்ணி, அதற்குத் தாவீதின் நகரம் என்று பேரிட்டு, மில்லோ என்னும் ஸ்தலந்துவக்கி, உட்புறமட்டும் சுற்றிலும் இருக்கிற மதிலைக் கட்டினான்.
10.தாவீது நாளுக்குநாள் விருத்தியடைந்தான்; சேனைகளின்தேவனாகிய கர்த்தர் அவனோடேகூட இருந்தார்.
1909-11-ல் கீகோன் நீரூற்றிலிருந்து செல்லும் இந்த சுரங்க கால்வாய்கள் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டன. சராசரியாக 1.8 மீட்டர் உயரமுள்ள பெரிய சுரங்க கால்வாய் ஒன்று, கடினமான பாறைகளில் 533 மீட்டர் தூரம் உளியால் செதுக்கி உண்டாக்கப்பட்டிருந்தது.
இது கீகோனிலிருந்து நகரத்திற்குள் இருந்த டைரோப்பியன் பள்ளத்தாக்கிலுள்ள சீலோவாம் குளத்துக்கு வழிநடத்தியது. இது எசேக்கியா உண்டாக்கியதாக தெரிகிறது. இந்த ஒடுக்கமான சுரங்கப் பாதையின் சுவரில் பழங்கால எபிரெய எழுத்து கல்வெட்டில் காணப்பட்டது.
2 இராஜாக்கள் 20:20
எசேக்கியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவனுடைய எல்லா வல்லமையும், அவன் ஒரு குளத்தையும் சாலகத்தையும் உண்டாக்கினதினாலே தண்ணீரை நகரத்திற்குள்ளே வரப்பண்ணினதும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
2 நாளாகமம் 32:30
இந்த எசேக்கியா கீயோன் என்னும் ஆற்றிலே அணைகட்டி, அதின் தண்ணீரை மேற்கேயிருந்து தாழத் தாவீதின் நகரத்திற்கு நேராகத் திருப்பினான்; எசேக்கியா செய்ததெல்லாம் வாய்த்தது.