உன்னதப்பாட்டு - கேள்வி பதில்கள் உன்னதப்பாட்டில்ஆபாசமா?

உன்னதப்பாட்டை குறித்து பலரும் பற்பல அபிப்பிராயங்களைக் கூறுவதுண்டு.

அவற்றுள் சிலர்,

இப்புத்தகமானது யூதர்களின் கலியாண நாட்களில் கல்யாணத்திற்க்காய்
நியமிக்கப்பட்ட புருசனையும் ஸ்திரீகளையும் குறித்து புகழ்ந்து பாடி வந்த
பாட்டு எனக் கூறுவார்கள் .

சிலரோ,

ஒரு ஸ்திரியானவள் ஒரு பெண் குழந்தையை பெற்று கிச்சிலி மரத்தடியில் போட்டு
விட்டு போய் விட்டாள். அந்த குழந்தையானது தொப்புள் அறுக்கப்படாமல்
அவ்விடத்திலே
கிடந்தது.

இதை கண்ணுற்ற ஒரு ஆட்டிடையன் குழந்தையின் மீது இரக்கங்கொண்டு அதின்
தொப்புளை அறுத்து , கழுவி சுத்தம் செய்து அவன் வீட்டில் கொண்டு போய்
வளர்த்தான்.

அந்த குழந்தை வளர்ந்து வரவே அவளை விவாகம் பண்ணி கொள்ள எண்ணினான்.

இவ்வாறு வளர்க்கப்பட்ட பெண்ணை தனது திராட்சை தோட்டத்திற்கு காவற்காரியாக
நியமித்து வைத்தான்.

அவள் திராட்சை தோட்டத்தை காத்து வரவே , ஒரு நாள் சாலமன் ராஜ காட்டில்
வேட்டையாட சென்றிருந்தார்.

அப்பொழுது அவர் திராட்சை தோட்டத்தை காத்து கொண்டிருந்த அந்த பெண்ணின்
மேல் நேசம் கொண்டு அவளை அரண்மனைக்கு அழைத்து கொண்டு போனார்.

ஆனால் அரண்மனையின் சகல மேன்மைகளையும் கண்ட அந்த பெண் அவைகளின் மேல் நேசம்
கொள்ளாமல், அந்த ஆட்டிடையன் மேல் உள்ள நேசத்தினால் புலம்பி கொண்டு
இருந்தாள்.

இதை கண்ட சாலமன் அந்த பெண் இடையன் மேல் கொண்ட நேசத்தை அறுக்க முடியாது
என்று கருதி அந்த பெண்ணை திரும்ப காட்டில் கொண்டு போய் விட்டார் என்று
கூறுவாரும் உண்டு .

ஆனால், உண்மையில், சாலமன் ராஜா தேவ ஆவியினால் நிரம்பியிருந்த காலத்தில்
வரப்போகும் மணவாளனாகிய இயேசுவை குறித்தும் மணவாட்டி சபையை குறித்தும்
தீர்க்க தரிசனமாக உரைக்கப்பட்ட தீர்க்க தரிசன புத்தகமே இது.

வேத புஸ்தகத்தில் பழைய ஏற்பாடு , புதிய ஏற்பாடு என இரு புஸ்தகங்கள் உள்ளது.

அதில் பழைய ஏற்பாட்டில் 39 புஸ்தகங்கள் உள்ளது . இந்த 39 புஸ்தகங்களிலும்
தீர்க்கதரிசன பாகங்களும் உண்டு.

என்றாலும் அப்புத்தகங்களை சரித்திர புத்தகங்கள் , தீர்க்கதரிசன
புத்தகங்கள் , சங்கீத புத்தகங்கள் எனப் பிரித்து படிக்கலாம்.

சரித்திர புத்தகங்களை எடுத்தால் எல்லா புத்தகங்களும் ஒன்றுடன் ஓன்று
தொடர்புடையதாக இருப்பதை காணலாம் .
ரூத்தின் சரித்திரத்தை எடுத்து கொண்டால் இப்புத்தகத்திற்கு ஏன் வேத
புத்தகத்தில் இடம் கொடுக்க வேண்டுமென்று கேட்போமானால் தாவீதின் வம்ச
வரலாற்றை தெளிவுடன் அறிந்து கொள்ள இப்புத்தகம் அவசியம் . ஆகவே சரித்திர
புத்தகங்கள் ஒன்றுடன் ஓன்று தொடர்புடையது.

ஆகவே இந்தப் புத்தகமானது "வரப்போகிற மணவாளனாகிய இயேசுவை பற்றியும்
மணவாட்டி சபையை பற்றியும் சபை பூரணப்பட வேண்டிய விதம் பற்றியும்
ஆவியானவர் உவமான ரூபத்தில் தீர்க்க தரிசனமாக முன் குறித்த தீர்க்கதரிசன
புத்தகம்" என்பது தான் வெளிப்பாடு.

இதை அனுசரித்தே இந்த புத்தகத்தின் மகத்துவங்களை நாம் தொடர்ந்து தியானிக்க வேண்டும்.

உன்னதப்பாட்டை பங்கு பங்காய் வைத்து படிக்கும் விதம் :

முதலாம் அதிகாரம் முதலாம் வசனம் முதல் நான்காம் அதிகாரம் ஏழாம் வசனம்
முடிய இரட்சிக்கப்பட்ட தேவனுடைய பிள்ளைகளை தட்டி எழுப்பி பூரணத்திற்கு
நடத்தும் அனுபவத்தை காணலாம்.

நான்காம் அதிகாரம் எட்டாம் வசனம் முதல் ஆறாம் அதிகாரம் பன்னிரெண்டாம்
வசனம் முடிய பூரணமடையும் போது சோர்வடைவதையும் , மறுபடியும்
உயிர்ப்பிக்கப்பட்டு பூரனப்படுவதையும் , பூரனமடைந்தவர் எடுத்து கொள்ள
படுவதையும் , பூரனமடையாதோர் கைவிடப்படுவதையும் காணலாம் .

ஏழாம் அதிகாரம் ஆகாயமண்டலதிற்க்கு எடுத்து கொள்ளப்பட்ட மணவாட்டி அல்லது
பூரணபட்டோர் உலகத்தில் இருக்கும் போது மனவாளனுக்காக செய்த ஊழியங்களை
மணவாளன் புகழ்ந்துரைக்கும் அனுபவங்களை காணலாம் .

எட்டாம் அதிகாரமோ , கைவிடப்பட்ட சபையின் அங்கலாய்ப்பையும் , ஆயிரமாண்டு
பூமியில் வாழ மணவாளன் மனவாட்டியோடு பூமிக்கு வரும் காட்சியையும் காணலாம்
.

உன்னதப்பாட்டில் குறிப்பிடபட்டிருக்கும் சாலமன் என்பதை சமாதான
பிரபுவாகிய இயேசு என்றும்,

சீயோன் குமாரத்தி என்பதை மணவாட்டி என்றும்,

எருசலேம் குமாரத்தி என்பதை பரிசுத்த ஆவி பெற்று பூரனப்படாதவர்கள் என்றும்
வைத்து படிக்க வேண்டும் .

மேலும், உன்னத பாட்டிலுள்ள வசனங்களை படிக்க ஆரம்பிக்கும் முன்பாக
ரட்சிக்கப்பட்டு பரிசுத்த ஆவியின் அனுபவம் அடைந்தவனோடு கர்த்தர் பேசி
முன்னேற்றி கொண்டு போகிறார் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும் .

பாவத்தில் ஜீவிக்கும் அனுபவம் வேறு , இரட்சிக்கப்பட்ட அனுபவம் வேறு ,
பரிசுத்த ஆவியை பெற்று கொள்ளும் அனுபவம் வேறு என்பதை நாம் கற்று இருக்க
வேண்டும்.

ஏன் என்றால் அநேகர் உபதேசத்தின் வித்தியாசத்தை விளங்கி கொள்ளாமல் கலப்பான
உபதேசத்திற்க்குள் அகப்பட்டு கலங்குகின்றனர்.

ஆகவே உன்னதப்பாட்டு ஆபாசத்தைச் சொல்லவில்லை.

ஆனால் உடல் உறுப்புக்களைச் சொல்கின்றதே. அது ஆபாசம் இல்லையா என்று கேட்கலாம்.

இந்தக் கேள்வியைக் கேட்கும் நீங்கள் உங்களது அம்மாவிடம் சென்று

"அம்மா…. நீங்கள் என்னைப் பெற்றெடுக்கும் போது உடையில்லாமல் தானே
இருந்தேன். இதைப் பார்த்து உங்களுக்கு வெட்கம் வரவில்லையா? நான்
ஆபாசமாகவல்லோ இருந்தேன்".

இதைக் கேட்கும் போது உங்களுடைய தாய் என்ன பதில் கூறுவாள்?

அந்தப் பதிலே உன்னதப்பாட்டில் ஆபாசமா? என்ற கேள்விக்கான பதில் ஆகும்.

இறைவன் ஆபாசம் அற்ற பரிசுத்த வேதாகமத்தையே கிறிஸ்தவர்களாகிய எங்களுக்குக்
கொடுத்திருக்கிறார்.

இனியாவது வேதாகமத்தை ஒழுங்காக வாசித்து இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

இயேசுகிறிஸ்து உங்களை நேசிக்கின்றார்.

ஆமென்!

நன்றி!.

Post a Comment

2 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. உன்னதப் பாட்டில் ஆபாசம் இருப்பதை மறைப்பதற்குச் சொல்லும் உதாரணம் பொறுத்தமில்லை.ஒரு தாய் தன் பிள்ளையை ஆடை இன்றி ஈன்றெடுக்கும்போது வெட்க உணர்வு வருவதில்லை என்பது உலகம் அறிந்த உண்மை.கடவுளின் வார்த்தைகளில் ஆபாசம் இருக்குமென்றால் அது கடவுளின் தூய்மைக்கு மாற்றமானது.எனவே,பைபிள் மனிதக் கரங்களின் விளையாடால் என்பது வெளிச்சமாகின்றது.

    ReplyDelete
  2. இது வேத புத்தகம். இது பல நூற்றாண்டுகளாக பலரால் திட்டமிட்டு தேவனால் வடிவமைக்கப்பட்டு இன்று நம் கையில் விசுவாசத்தின் ஆணிவேராக இருக்கிறது. இது ஆபாசமாக பார்க்கப்பட்டு இருந்தால் நிச்சயமாக வேதாகமத்தில் இடம் பெற்று இருக்காது. நல்ல உவமையை சொல்கிறேன். திருமணத்தில் முதல் இரவு அறைக்குள் இருக்கும்போது அது ஆபாசமாக இருப்பதில்லை. அந்த உறவில் ஒரு பரிசுத்த நோக்கம் இருக்கிறது. கணவன் மனைவிக்குள்ளான அந்தரங்க உறவு ஆபாசம் இல்லை. ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்குத்த்தமாகிய உலகத்தை நிரப்ப வேண்டும் என்ற நிறைவேறுதலின் புனிதம் உள்ளது. கணவன் மனைவி அன்பு என்பது உண்மையுள்ளதாக பரிசுத்தமுள்ளதாக கற்புள்ளதாக இருக்குமாப் போல் நமக்கும் தேவனுக்கும் இடையே உள்ள அன்பும் புனிதமாய் இருக்க வேண்டும் என்பதே உன்னதப்பாட்டின் நோக்கம்.

    ReplyDelete