சிறுகதை கட்டப்பட்ட கழுதை சகோ. எட்வின் (சோஹார்)

அனேக நாட்களாக ஒரு கழுதை தன் குட்டியோடு கட்டப்பட்ட நிலையிலே தன்னுடைய
வாழ்க்கையை நடத்திக் கொண்டு வந்தது,

ஏன் இதற்கு இந்த நிலைமை வந்தது பாருங்கள் இந்த கழுதையின் தேவைகள் சரியாக
சந்திக்கப்பட்டு
வந்தாலும் [ அதாவது உணவு மற்றும் இதர காரியங்களை இங்கு தேவைகள் என
குறிப்பிடுகின்றேன் ] அதற்கு ஒரு குறைவு காணப்பட்டது, அது என்ன்வென்றால்
இந்த கழுதைக்கு தன் இஷ்டப்படி எங்கும் போகமுடியாது தன்னுடைய நண்பர்களோடு
பேச அனுமதியில்லை,
அதுமட்டுமல்லாமல் தன்னுடைய குட்டியோடு நேரம் செலவிட அனுமதியில்லை.

இதற்கு காரணம் என்னவென்றால் இந்த கழுதை தன்னை ஒரு மனுஷனுக்கு விற்று போட்டது.

ஏன் இந்த கழுதை தன்னை மனுஷனுக்கு விற்றுப்போட வேண்டும்.

இந்த உலகத்தில் தன்னுடைய குட்டியோடு சந்தோஷமாக எல்லாவற்றையும் அனுபவித்த
இந்த கழுதைக்கு , இந்த மனுஷன் பொய்யான அதாவது உலக அன்பைக் காண்பித்தான்.

அதாவது நீ கஷ்டப்பட்டு வேலை செய்து சாப்பிட வேண்டாம், வீடு இல்லாமல்
இங்கும் அங்கும் அலைய வேண்டாம், நீ என்னோடு வந்தால் எல்லாவற்றையும் ஒரே
இடத்தில் உனக்கு மாற்றி கொடுப்பேன்.

அதுமட்டுமல்லாமல் நீங்கள் வேலைசெய்யாமலேயே சாப்பிடலாம் என்றெல்லாம்
ஆசையைக் காண்பித்தான், இந்தக் கழுதையும் தன்னுடைய கண்களை இந்த இச்சை
வார்த்தையின் மேல் வைத்தது. ஆகவே இந்த மனுஷனுடைய கண்ணியில் சிக்கி,
இப்படியாக அடிமை வாழ்வை வாழ்ந்து கொண்டிருப்பதை நாம் பார்க்க முடிகிறது.

எனக்கு அருமையான நண்பர்களே
இன்று கிறிஸ்தவர்களுக்கும் பிசாசானவன் பலவிதங்களில் கண்ணிகளை
வைப்பதுண்டு, எப்படியென்றால் எதற்கு ஜெபிக்க வேண்டும்,
ஏன் ஆலயம் செல்ல வேண்டும். இந்த உலகம் முழுவதும் உங்களுக்கு
அனுபவிக்கதான் தேவன் வைத்திருக்கிறர் என்றெல்லாம் பலவிதமான கேள்விகளை
எழுப்புவதுண்டு,

இதற்கு மயங்கி இன்று அனேக கிறிஸ்தவர்கள் சாத்தானுக்கு அடிமையாக
வாழ்வதுண்டு, தயவு செய்து ஒரு நாள் வாழ்வை இன்பம் என்று எண்ணாதிருங்கள்
அதாவது இந்த உலக வாழ்க்கை தான் நமக்கு சந்தோஷம் என்று எண்ணாதிருங்கள்.

ஒரு காரியத்தை நன்றாக புரிந்து கொள்ளுங்கள், வேதம் சொல்லுகிறது நம்முடைய
சந்தோஷம் இந்த நிலையில்லாத உலகத்தில் அல்ல மாறாக நம்முடைய நிலையான
சந்தோஷம் பரலோகத்தில் இருக்கிற இயேசு கிறிஸ்துவிடம் மாத்திரமே என்பதை
மறந்து விடாதீர்கள்.

நாம் யாருக்கு பிள்ளைகளாய் இருக்கிறோம்?

எல்லா மதங்களின் தெய்வமும் தம்முடைய ஜனங்களை அடிமை என்று அழைக்கிறது,
ஆனால் கர்த்தராகிய இயேசு மாத்திரமே தம்மை தகப்பன் நம்மை அவர்களுடைய
பிள்ளைகள் என்றும் அழைக்கிறார்.

பிள்ளை என்கிற பட்டம் வேண்டுமா?
அல்லது அடிமை வேண்டுமா? தெரிந்து கொள்ளுங்கள்.

[ யோவான் 1:12, எசேக்கியேல் 36:28, 11 கொரி 6:16 ]

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.