ஒரு வாலிபன் 25 வயதை அடைந்த பின்பும், ஒரு வாலிப ஸ்திரீ 20 வயதை அடைந்த
பின்புமே தங்கள் எதிர்கால வாழ்க்கைத் துணைக்காக ஜெபித்திட ஆரம்பிக்க
வேண்டும்.
இந்த வயதை நீங்கள் அடைவதற்கு முன்பாக, திருமணத்தைக் குறித்த யாதொரு
சிந்தையும் உங்களுக்கு வரவே கூடாது!
அதற்குப் பதிலாய், 'இயேசுவின் நேசமே' உங்களின் நிறைந்த தியானமாயும்,
அவருடைய வசனமும் அவருடைய ஊழியமுமே உங்களை ஆட்கொண்டதாயும் இருக்க
வேண்டும்!
அப்படி இல்லாமல், உங்களுக்கு கவர்ச்சியாய் தோன்றிய பெண்ணையும் அல்லது
பையனையும் "இவர்தான் என் வாழ்க்கைத் துணையாய் வருவாரோ!" என்றெல்லாம்
சிந்தனையில் மிதந்து உங்கள் வாழ்க்கையைப் பாழடித்து விடாதீர்கள்.
அப்படியே ஏற்ற வயதை நீங்கள் அடைந்த பிறகும், நீங்கள் மனப்பூர்வமாய்
விரும்பிய ஏற்ற நபரை நீங்கள் கண்டுபிடித்தால் "வேறொருவன் அல்லது
வேறொருத்தி இவரை அடையுமுன் நான் இவனை அல்லது இவளை எப்படியாவது அடைந்துவிட
வேண்டும்" என நீங்கள் ஒருபோதும் தீமையான அவசர உணர்வை பெற்று
விடாதீர்கள்......
ஜாக்கிரதை! 'அந்த நபர்' மெய்யாகவே தேவன் உங்களுக்காகவே தெரிந்துகொண்ட
நபராயிருந்தால், அவனை அல்லது அவளை தேவன் நிச்சயமாய் உங்களுக்காகவே
பாதுகாப்பாய்
வைத்திருப்பார்!!
இப்பூவுலகில் ஒருவர்கூட அந்த அவனை அல்லது அவளைத் தட்டிப் பறித்துக்
கொள்ளவே முடியாது!
நீங்கள் மாத்திரம் ஆண்டவருடைய ஓர் உண்மையான சீஷனாய்
இருந்தால்,உங்களுக்குரிய சிறந்ததைதேவனே தேர்ந்தெடுத்து
உங்களுக்கென்றே பத்திரமாய் வைத்திருப்பார்!!
அங்குமிங்கும் வேத ஆராய்ச்சி கூட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கும் பெண்கள்
நடுவில்தான் ஓர் நல்ல மனைவி கிடைப்பாளென்றும் எண்ணிக் கொள்ளாதிருங்கள்!?
மார்க்க சம்பந்த கிரியைகளை ஆவிக்குரியவைகளென தவறாய் புரிந்து கொள்ளாதபடி
வாலிபர்கள் எச்சரிக்கையாயிருக்க வேண்டும்!
நீங்கள் திருமணமானவுடன் உங்களுக்கு தேவை ஓர் மனைவி! உங்கள்
பிள்ளைகளுக்குத் தேவை ஓர் தாய்! உங்கள் வீட்டில் இருக்கும் ஒருவருக்காவது
வேத போதகியான ஒரு பெண் தேவையில்லையே!
இதை வாலிபர்கள் சற்று மனதிற்கொள்ளட்டும்!!
சவுலின் சிங்காசனத்தைத் தாவீது பறித்துக்கொள்ள முயலாமல், தேவனுடைய
நேரத்திற்காகவே காத்திருந்தபடியால்
"தாவீதை, என் இருதயத்திற்கு ஏற்றவனாகக் கண்டேன்" என்று தேவனே தாவீதைக்
குறித்து நற்சாட்சி கூறினார் (அப்போஸ்தலர் 13:22)..
நீங்களும் அவ்வாறே காத்திருக்க ஆயத்தமாகித் தேவனுடைய கரத்திலிருந்து
மாத்திரமே ஒவ்வொன்றையும் பெற்றுக்கொள்ப
வராயிருந்தால், தாவீது பெற்ற அதே நல்ல சாட்சியை உங்களுக்கும் தேவன் கூறுவார்!!
தேவனுடைய
இராஜ்ஜியத்தையே முதலாவது தேடுவதற்கு
உங்கள் நேரத்தை செலவழிப்பவராக நீங்கள் இருந்தால், உங்கள் திருமண
காரியத்தை தேவனுடைய கரத்தில் நிம்மதியாய் ஒப்புக்கொடுத்துவிடலாம்!
ஏனெனில், நீங்கள் அவரை கனம் செய்வதால், அவர் உங்களை நிச்சயமாய் கனம் செய்வார். . .
அதில், சந்தேகமேயில்லை!!
"இவ்உலகப் பிதாக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வீடும், ஆஸ்தியுமே தந்திட
முடியும்! ஆனால்நல்ல மனைவியோ ஆண்டவர் மாத்திரமே தந்திட முடியும்!"என
நீதிமொழிகள் 19:14
கூறுவதைப் பாருங்கள்.
ஆகவே அந்த நல்ல ஆண்டவரிடமிருந்தே உங்கள் வாழ்க்கைத் துணையை தேடுங்கள்! .